PDA

View Full Version : பால துரோகம் .....



vasikaran.g
21-07-2013, 06:33 AM
பாலச்சந்தரனுடன் பல பாலகன்களை
பரலோகம் அனுப்பி
பிறலோகம் ஆள் என்று
சொல்லாமல் சொல்லும்
நரலோக முரண்கள் நிறைந்த
அரக்கர்கள் பூமியில்
பிறர் வாழ இயலுமா ?

உணவைக் கொடுத்து
உயிரை எடுத்த
மடையர்களே ! மனசாட்சி
தொலைத்த மடையர்களே !
பாலகன்களை கொன்றதால்
ஆளில்லை என்று அர்த்தம் இல்லை !

போரை நிருத்திவிட்டதாய் ,
பொது இடத்தை போரில்லா
இடமாய் அறிவித்து
மக்களை வரவைத்து
தலைகளை அறுத்துவைத்து
வேரை அறுத்து விட்டதாய்
கொக்கரிக்கும் கோமாளிகளே !

நீங்கள் அறுத்தது
விழுதுகளை தான்
வேர்களை அல்ல !
வேர்கள் இருக்கும்வரை
இளம் தோள்கள் இருக்கும்வரை,
இன்னும் உதிரம் கொடுக்க
சேய்கள் இருக்கும் வரை
எங்கள் தாகம் தணியாது !
கண்களில் ஆசை குறையாது !

பேய்களே ! பெருமகிழ்ச்சி கொள்ளாதீர் !
ஆணவம் அரசாண்டத்தில்லை அதிககாலம்,
சீனாவும் அமெரிக்காவும் ,
சீலம் கெட்ட இந்தியாவும்
சீர்கெட்ட சிங்களத்துக்கு
எத்தனை நாள் தோள்கொடுக்கும் ?

அதையும் பார்த்துவிடுவோம் ...
நெஞ்சில் உரம் இருக்கு ,
நிறைய தன்னம்பிக்கை
இன்னும் இருக்கு !
இருக்கு ! இருக்கு !
இன்னமும் எல்லாமே
எங்களிடம் இருக்கு !

போராடுவோம் ! ஊரோடும்,
உறவோடும் மகிழ்வோடும்
கதைக்கும் காலம்
வரும் வரை போராடுவோம் !

வசிகரன்.க