PDA

View Full Version : கற்பனை



nandagopal.d
18-07-2013, 03:31 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQEwV3QdMoQPw3d-hPkNdVAjp4-ZkKcBH1HpR749ebDGhz3g-ta0g


நகரம் வனம் ஆக மாறும்,

தருணங்களை எண்ணி,

வாங்குகிறேன்.

எல்லா இடங்களிலும்,

மரம் இருப்பதை போல,

ஓவியத்தை.............

கீதம்
19-07-2013, 01:10 AM
நிஜங்களை அழித்துவிட்டு நிழல்களை மட்டும் பத்திரப்படுத்துகிறோம். வருங்கால சந்ததிக்கு காட்ட உதவலாம் ஒருவேளை!

சுடும் நிஜம். பாராட்டுகள் நந்தகோபால்.

M.Jagadeesan
19-07-2013, 03:01 AM
அகரங்கள் என்றுமே உகரம் ஆகா
நகரங்கள் என்றுமே வனங்கள் ஆகா
தகரங்கள் பொன்னாக மாறுவ துண்டோ ?
நகரங்கள் என்றுமே நரகம் தானே !