PDA

View Full Version : பசி



M.Jagadeesan
18-07-2013, 04:26 AM
http://ichef.bbci.co.uk/naturelibrary/images/ic/credit/640x395/a/af/african_elephant/african_elephant_1.jpg


காட்டிலே உணவில்லை; பருக நீரில்லை
வாட்டும் பசியைப் போக்க வழியின்றி
நாட்டுக்குள் வந்தால் நம்மை விரட்டுகிறார்
வேட்டுகள் வைத்தே வேதனை தருகின்றார்.

தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில்
....செகத்தினை அழித்திடுவோம் என்றே வகுத்தவிதி
மனிதனுக்கு மட்டும்தானா? எம்மைப்போல் வாடுகின்ற
...மாக்களுக்கு இல்லையா? சொல்வீர் ! செகத்தீரே!

subhashini
18-07-2013, 06:51 AM
யானைகள் நாட்டுக்குள் வருவதில்லை. நாம் தான் அவர்களின் காட்டுக்குள் புகுந்துவிட்டோம். அவர்கள் வலசை போகும் வழியினில் வீடு கட்டிக் கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றோம். எங்கோ பிறந்தார்களோ அங்கே இனப் பெருக்கம் செய்ய வர்வது அவர்கள் வழக்கம். இடைப்பட்ட காலத்தில் நாம் தான் அங்கு குடிகொண்டுவிட்டு இன்று அவர்களை வேட்டு வைத்து விரட்டுகிறோம் :(

கீதம்
19-07-2013, 12:06 AM
சுபாஷினி சொல்வது போல் யானைகளின் பாதையில் நாம் குறுக்கிட்டதோடு அவற்றை வேட்டுவைத்து விரட்டவும் செய்கிறோம். ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டும் கதைதான் இங்கும்.

யானைகளின் பார்வையில் மனிதர்களைக் கேட்கும் கேள்விகள் நியாயம்! அவை வாய்திறந்து கேட்கா என்ற தைரியத்தில்தானே வாழ்கின்றோம் நாம். மனம் தொட்ட கவிதை ஐயா.