PDA

View Full Version : ஆட்டுக்கல்



subhashini
13-07-2013, 06:11 AM
குடிமிப்பிடி சண்டை..
குழாயடியில் இல்லை,
ஆட்டுக்கல்லோடு.... மின்வெட்டு :aetsch013:

M.Jagadeesan
14-07-2013, 03:55 AM
ஆட்டுக்கல்லோடு யாரும் குடுமிப்பிடி சண்டை நடத்துவதில்லை. இப்போதுதான் ரெடிமேடு இட்லிமாவு கடைகளில் கிடைக்கிறதே!

subhashini
15-07-2013, 07:58 AM
இன்னும் என் அம்மா போன்ற சிலர் இந்த ரெடிமேட் உணவு வகைகளுக்கு மாறவில்லையே

கீதம்
18-07-2013, 11:44 PM
குடுமிப்பிடி கவிதை ரசிக்கவைத்தது. இந்த குடுமிப்பிடி சண்டையில் ஒரு வித்தியாசம். ஒருவர் குடுமி மட்டுமே மற்றவரிடம்.

குடும்பத்தின் நலன் கருதி குடைகல்லோடு குடுமிப்பிடி யுத்தம் நித்தம் வலித்து வலிசுமக்கும் அம்மாக்களுக்கு வந்தனம்.

ஆட்டுக்கல்லோடு அம்மா போராடியதையும் அழகிய கவிதையாக்கியமைக்குப் பாராட்டுகள் சுபாஷினி.

பென்ஸ்
19-07-2013, 04:58 PM
சின்ன சின்ன நிகழ்வுகளையும் வித்தியாசமாக பார்த்தாலே... கவிதை அல்லவா..??

அருமை..

subhashini
19-07-2013, 06:23 PM
உண்மை தான் கீதம் அவர்களே. ஒருவர் குடுமி தான் மற்றவரிடம். ஆனால் பிடிப்பவர்க்கும் இங்கே வலிக்கிறது. அம்மாக்களுக்கு எவ்வளவு வலிகள் :(

பாராட்டுக்களுக்கு நன்றி கீதம் :)

subhashini
19-07-2013, 06:25 PM
பாராட்டுக்களுக்கு நன்றி பென்ஸ் :)

கும்பகோணத்துப்பிள்ளை
15-08-2013, 02:50 AM
இப்பொழுதெல்லாம் ஆட்டுகல்மட்டுமல்ல
அடிக்கல்லும் சுற்றுகிறதே!

மும்பை நாதன்
08-10-2013, 05:50 PM
ரொம்ப பெரிசு படுத்தி பேசாதீங்க; வீட்டுக்கொரு ஆட்டுக்கல் என்று வாக்குறுதி தந்துவிடப்போகிறார்கள்.