PDA

View Full Version : நான் << மலர்



subhashini
11-07-2013, 01:07 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSiKHR1oJajtuH1bhVxBpiGTVxjdcFmYGhFa9pVlKHrtw566_iZ



கூட்டத்தில் பெண்ணொருத்தி கூடையோடு நின்றிருக்க
தோட்டத்துப் பூவதில் மாலையாக வந்திருக்க
ஓடாத எண்ணங்களை அதுபார்த்து ஓட்டிவிட்டேன்
தேடாத பொருள் தேடியெங்கோ தாட்டிவிட்டேன்...

பேரம் பேசிவிட்டு போவார் பலரே
ஓரமாய் வேடிக்கை பார்ப்பரும் உளரே
வாங்கி வைக்கும் மக்கள் சிலரே
ஏங்கி நிக்கும் மற்ற மலரே....

விலையேது இன்று விக்காத மலருக்கு ???
கலையிழந்த கண்ணாய் ஒதுங்கியே வீற்றிருக்கு....
பூவாகப் பூத்திருந்தால் அந்தியும் வந்திருக்கும்
நோவாகிப் போகும்முன்னே வாழ்க்கை முடிந்திருக்கும்....

மந்தையில் மனிதனாகப் பிறந்துவிட்டேன்- உலகச்
சந்தையில் விலைபோக மறந்துவிட்டேன் - ஏனோ
காலத்தின் கட்டாயமென கட்டுண்ட காற்றாய்
ஞாலத்தில் வாழுகின்றேன் ஞானத்தைத் தேடுகின்றேன்.

கீதம்
13-07-2013, 12:53 AM
துவண்டுசோரும் பூக்களையும் நீர் தெளித்து நிமிர்த்தி நயமாய் விற்பனை செய்கிறாள் பூக்காரி.

துவண்டுபோகுந்தோறும் அன்பால் நம்மைத் தேற்றுவாருண்டெனில் அயராது நிமிர்வோமே நாமும்.

மனந்தொட்ட கவியும் கருவும். பாராட்டுகள் சுபாஷிணி.

subhashini
13-07-2013, 06:06 AM
நன்றி கீதம். சில சமயங்களில் அது போல் ஒரு பூக்காரி மனிதர்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறாள் :( இது என் நண்பர் வரைந்த படத்திற்கு "பாடம் பார்த்து கவிதை சொல்" என்று வேடிக்கையாய் அவர் கேட்க என் மனது அங்கிருந்து இந்த வரிகளில் தான் தஞ்சம் புகுந்தது. :)