PDA

View Full Version : விக்கல்



subhashini
10-07-2013, 02:03 PM
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQNATgfEkTLiHqg9BwPBXYBQG7zWiBZaqXlN0nL404nWiIyCFKg

விக்கல் வரும் போதெல்லாம்
உன் நினைவு...

என் தலையைத் தட்டி
நீ தண்ணீர் குடித்த நினைவு...

அதிர்ச்சி வைத்தியம் என்று
அசட்டுத்தனம் நீ செய்த நினைவு...

"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் நீ சண்டையிட்ட நினைவு...

இன்று...
நினைத்தது நீ இல்லை... தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ... என
ஏங்குகிறேன்..
விக்கல் வரும் போதெல்லாம்...

(நினைத்து நினைத்து எழுதியது
சுபாஷினி :P)

ஜான்
11-07-2013, 12:19 PM
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. என்கிற குறளை நினைவு கொள்ள வைத்தது...நன்று சுபாஷினி அவர்களே

subhashini
11-07-2013, 01:05 PM
இந்தக் குறளை இன்று தான் முதன்முறையாகப் படிக்கிறேன். ஆக காதலும் அது செய்யும் விதமும் நூற்றாண்டு பல கடந்தாலும் மாறுவதில்லை எனப் புரிகிறது. குறளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. :)

அனுராகவன்
11-07-2013, 03:40 PM
அருமை

subhashini
11-07-2013, 05:17 PM
நன்றி அச்சலா :)

கீதம்
13-07-2013, 12:49 AM
விக்கலின் நினைவுகளால் விக்கிப்போன மனத்தின் வெளிப்பாடாய் அமைந்த கவிதை உள்ளிருக்கும் வேதனை காட்டி அழுத்துகிறது.

கவிதை நன்று. பாராட்டுகள் சுபாஷிணி.

subhashini
13-07-2013, 04:26 AM
நன்றி கீதம்.
அன்புடன்,
சுபாஷினி

arun karthik
17-07-2013, 05:23 PM
நான் கூட விக்கி விக்கி எழுதியது என்று நினைத்தேன் :)... கவிதை அருமை....

subhashini
18-07-2013, 06:44 AM
விக்கும் போது எழுதியது தான். ஆனால் எழுத்துக்கள் விக்கவில்லை. நன்றி :)

பென்ஸ்
19-07-2013, 04:26 PM
பிரிவில் எல்லாமே உன் நினைவில்தான்...
விக்கல் மட்டும் என்ன, அவன் நினைவுகளும் ஒரு நிமிடம் மூச்சை நிறுத்தி விடத்தான் செய்கிறது...


நல்ல கவிதை... அதிக உரைநடை போல் தோன்றயது...

subhashini
19-07-2013, 06:29 PM
வார்த்தைக்கு கோர்க்கச்செல்லும் போது அதன் யதார்த்தம் பாழ்படுவதாக எண்ணி தானே சேர்ந்த வார்த்தைகளுக்குள் அதனை விட்டுவிட்டேன். கவிமர்சனத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் :) நன்றி பென்ஸ் :)

lenram80
01-10-2013, 08:00 PM
அவன் நினச்சா உங்களுக்கு பொரை தான் ஏறும். விக்கல் எல்லாம் வராது. அவன நினைக்காதேன்னு சொல்றதுக்கு தான் விக்கலே வருதோ?

subhashini
16-01-2014, 06:27 AM
எங்க ஊர் பக்கம் எல்லாம் "நினைச்ச விக்கல் வரும், திட்டுனா பொரை ஏறும்" அப்படினு சொல்லுவாங்க.