PDA

View Full Version : துன்ப மூட்டை

subhashini
09-07-2013, 08:15 AM
இது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.

" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர், அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, " உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் " உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து " எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்..."

அடுத்தவர்க்குத் துன்பம் இல்லை நம் வாழ்வு தான் சோதனைகள் நிறைந்தது என எண்ணுதல் தவறே. அவரவர்க்கு அவரவர் துன்பம். தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

என்னை ஆழமாக பாதித்த கதை இது... உண்மையும் கூட....

என்றும்,
இசைநிறை.

கீதம்
09-07-2013, 10:35 PM
தெரியாத பேயை விடவும் தெரிந்த பிசாசு மேல் என்று சும்மாவா சொன்னார்கள்! நமது பிரச்சனைகள் நமக்குப் பழகிப்போன ஒன்று. அவற்றைத் தீர்க்கும் வழி தெரியாவிடினும் அவற்றோடு ஒத்துவாழும் சூட்சுமம் நன்றாகவே தெரியும். நல்லதொரு கதைப்பகிர்வுக்கு நன்றி சுபாஷிணி. உங்களைப் பற்றி மன்ற உறவுகளுடன் சிறு அறிமுகம் செய்துகொள்ளுங்களேன்.

subhashini
10-07-2013, 11:45 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி. மன்றத்திற்கு நான் புதிது. இன்னும் என்ன இருக்கிறது அறிமுகம் எங்கே செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கவில்லை. இன்று அறிமுகம் செய்து கொள்கிறேன்

M.Jagadeesan
10-07-2013, 04:55 PM
தெரியாத பேயை விடவும் தெரிந்த பிசாசு மேல் என்று சும்மாவா சொன்னார்கள்! நமது பிரச்சனைகள் நமக்குப் பழகிப்போன ஒன்று. அவற்றைத் தீர்க்கும் வழி தெரியாவிடினும் அவற்றோடு ஒத்துவாழும் சூட்சுமம் நன்றாகவே தெரியும். நல்லதொரு கதைப்பகிர்வுக்கு நன்றி சுபாஷிணி. உங்களைப் பற்றி மன்ற உறவுகளுடன் சிறு அறிமுகம் செய்துகொள்ளுங்களேன்.

" தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேல் " என்பது " Known Devil is better than unknown Angel " என்ற ஆங்கிலப் பழமொழியின் தமிழாக்கம்.

தாங்கள் தவறாகக் குறிப்பிட்டு விட்டீர்கள். பேயும் , பிசாசும் ஒன்றுதானே !

M.Jagadeesan
10-07-2013, 05:00 PM
மூட்டை பெரியதாக இருந்தால் துன்பம் அதிகமாக இருக்கும். மூட்டை சிறியதாக இருந்தால் துன்பம் குறைவாக இருக்கும். எனவே எந்த மூட்டை சிறியதாக இருக்கிறதோ , அந்த மூட்டையை எடுத்துச் செல்பவனுக்குத் துன்பம் குறைவாக இருக்கும்.

subhashini
10-07-2013, 05:35 PM

மூட்டை பெரியது என்பதால் அதன் எடை சிறியதை விட அதிகம் என்று சொல்லிவிட முடியாது. சிறிய மூட்டையில் இரும்பும் பெரிய மூட்டையில் பஞ்சும் இருந்தால்??? பஞ்சு கொண்ட சிறிய மூட்டையை வைத்திருக்கிறவன் எடை அதிகம் கொண்ட சிறிய மூட்டையைப் பார்த்து சிறிதாய் இருந்தால் தூக்க எளிதாய் இருக்கும் என்று எண்ணுதல் தவறே. இப்படித் தவறாக எண்ணித் தான் மூட்டையை மாற்றி எடுத்துக் கொண்டு போய் பிரித்துப் பார்த்து நொந்து போயினர். கடவுளிடம் திரும்பி வந்தனர்.

ஜான்
11-07-2013, 02:43 AM
கிட்டத்தட்ட கடுகு கதைபோல் இருக்கிறது!!

கீதம்
13-07-2013, 01:00 AM
" தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசு மேல் " என்பது " Known Devil is better than unknown Angel " என்ற ஆங்கிலப் பழமொழியின் தமிழாக்கம்.

தாங்கள் தவறாகக் குறிப்பிட்டு விட்டீர்கள். பேயும் , பிசாசும் ஒன்றுதானே !

ஓ.. அப்படியா? நான் குறிப்பிட்ட படி யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் அப்படியே எழுதிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றி.

subhashini
13-07-2013, 04:22 AM
ஓ.. அப்படியா? நான் குறிப்பிட்ட படி யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனால் அப்படியே எழுதிவிட்டேன். திருத்தியமைக்கு நன்றி.

இதில் தவறு ஒன்றும் இல்லை கீதம். அது ஆங்கில பழமொழி அதற்கு இணையானதொரு பழமொழி தமிழில் எங்காவது வழக்கில் இருக்கும். கிடைக்கிவில்லை எனும் போது தான் மொழி மாற்றம் மட்டும் செய்கிறோம். பேய் என்றால் என்ன பிசாசு என்றால் என்ன :)