PDA

View Full Version : உன்னை மறந்திருந்த கதை



இராஜிசங்கர்
04-07-2013, 01:16 PM
உன் மீது நேற்றிலிருந்து கோபம்

அலார மணி அடித்தது
செல்போனைப் பார்த்தேன்
நீயிருந்த ஸ்க்ரீன்சேவர்
பூக்களாகிச் சிரித்தது;

பல்துலக்காமல் காபி குடிப்பது
உனக்குப் பிடிக்காது
என்பதற்காகவே மிச்சம்
வைக்காமல் குடித்தேன்;

குளித்து முடித்தேன் இன்னுமும்
கோபம் குறையவில்லை
நீலநிற உடை
மஞ்சளாய் மாறியது;

என் அலுவலகம் செல்லும்
வழியில் உன்னுடையதும்;
கவனமாய் இருந்தேன்
அந்தப்பக்கம் பார்க்கவேயில்லை;

தவறுதலாகக் கூட உன்
பெயர் டைப்பி
விடக்கூடாது கீபோர்டில்
அதிகப்படி கவனமுற்றேன்;

இளையராஜா பாட்டையும்
ஜன்னலோர நிலாவையும்
துரத்தி விட்டுத் தான்
அன்று தூங்கினேன்;

மீண்டும் அலாரம் அடித்தது
இப்போதும் சொல்கிறேன்
நேற்று முழுதும்
உன்னை நினைக்கவேயில்லை..

arun karthik
04-07-2013, 04:56 PM
அருமை... கவிதையின் தாக்கம் நன்றாகவே இருக்கிறது...

இராஜிசங்கர்
05-07-2013, 09:31 AM
நன்றிங்க

ஜான்
05-07-2013, 01:38 PM
எளிமையும் இனிமையுமாய் ஆனால் ஆழமாய் மனதுக்குள் நுழையும் இது போன்ற கவிதைகள் எப்போதும் இனிமைதான்......
உன்னை நினைக்கையில் என்னை மறக்கிறேன்
என்னை மறக்கையிலும் உன்னை நினைக்கிறேன்-----இது மாதிரி
நல்லாருக்கு,ராஜி சங்கர் அவர்களே!!

இராஜிசங்கர்
06-07-2013, 05:38 AM
:D..............