PDA

View Full Version : கடன் தா !



M.Jagadeesan
25-06-2013, 01:07 AM
கம்பனே ! உன்னுடைய
கற்பனையைக் கொஞ்சம் கடன் தா !
கவிஞனாக ஆசைப்படுகிறேன்.

கார்முகிலே ! உன்னுடைய
வாரி வழங்கும் வள்ளன்மைக் கடன் தா !
பாரியாக ஆசைப்படுகிறேன்.

தென்றலே ! உன்னுடயை
கைகளைக் கொஞ்சம் கடன் தா !
கட்டியணைக்க ஆசைப்படுகிறேன்.

ஆலமரமே ! உன்னுடைய
விழுதுகளைக் கொஞ்சம் கடன் தா !
உறவுகளைத் தாங்க ஆசைப்படுகிறேன்.

தமிழே ! உன்னுடைய
இளமையைக் கொஞ்சம் கடன் தா !
இறவாதிருக்க ஆசைப்படுகிறேன்.

மகாத்மாவே! உன்னுடைய
புனித உள்ளத்தைக் கடன் தா !
மனிதனாக ஆசைப்படுகிறேன்.

ரமணி
25-06-2013, 02:36 AM
கடனாகக் கேட்டால் திருப்பித் தர வேண்டாமோ? இதுபோல் எழுதுவது சரியாக இருக்குமோ?

கம்பனே! உன்னுடைய
கற்பனையில் கொஞ்சம் தா!

*****

M.Jagadeesan
25-06-2013, 12:26 PM
வாங்கிய கடனைத் திருப்பித்தர நான் தயார். பெற்றுக் கொள்வதற்குக் கம்பனும், காந்தியும் வரவேண்டுமே!

கீதம்
27-06-2013, 10:09 PM
வாங்கிய கடனைத் திருப்பித்தர நான் தயார். பெற்றுக் கொள்வதற்குக் கம்பனும், காந்தியும் வரவேண்டுமே!

ஓ... இதுதான் காந்திக்கணக்கா? :)

கடன்கேட்கும் கவிதை என்றாலும் கடனே என்றில்லாமல் உண்மையிலேயே ரசிக்கவைத்தது. பாராட்டுகள் ஐயா.

govindh
27-06-2013, 10:18 PM
கடன் தா...
கவி அழகு தான்...!

பாராட்டுக்கள் ஐயா.

M.Jagadeesan
28-06-2013, 02:26 AM
கீதம், கோவிந்த் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.