R.P.ANANDHAN
23-06-2013, 11:07 AM
desktop/ஆமை.jpg
தனிமனித மனப்பான்மை - தீர்மானிக்கும்
இன்றியமையாத இரு ஆமை
இவ்விரண்டிற்கும் ஒவ்வாமை
வேற்றுமையான தீண்டாமை
ஒன்று அழகுப்பதுமை - அது பெருமை!
மற்றொன்று கீழ்படியாமை - இது சிறுமை!
பெருமை!!!
முதுமையிலே இளமை பெருமை
புதுமையிலே பழமை பெருமை
பகைமையிலே தன்மை பெருமை
இயலாமையில் தூய்மை பெருமை
கடமையில் துயிலாமை பெருமை
தூற்றாமையில் துவளாமை பெருமை
ஆண்மைக்கு பெண்மை பெருமை
பெண்மைக்கு பேராண்மை பெருமை
வேளாண்மையில் வாடாமை பெருமை
வெள்ளாமைக்கு கதிர்ச்சுமை பெருமை
நல்கொள்கையிலே ஒற்றுமை பெருமை
சிறுமை!!!
முயலாமையில் பொறாமை சிறுமை
இயலாமையால் பயிலாமை சிறுமை
முன்வராமையால் போற்றாமை சிறுமை
செழமையால் கிழ்படியாமை சிறுமை
விசாலபாராமையால் சாராமை சிறுமை
ஊக்கமின்மையால் வீண்போகும் திறமை சிறுமை
கல்லாமையால் இல்லாமை சிறுமை
அறியாமையில் மமதை சிறுமை
குறுகியமனப்பான்மையில் அழகிய கண்மை சிறுமை
கொடுமையுட்டும் வலிமை சிறுமை
மேன்மையில் பக்குவமின்மை சிறுமை
தொன்மை மதியா தலைமை சிறுமை
பொறுமை காத்து
உண்மை பகிர்ந்து
மமதை குறைத்து
மடமை தவிர்த்து
மகிமை படைத்து
சிறுமை ஒழித்து
பெருமை வளர்ப்போம்!
சிறுமையால் வந்த வடு
பெருமையை வளர்த்து எடு!!!
பெருமை புகுந்த வீடு
இதற்கில்லை எங்கும் ஈடு!!!
தனிமனித மனப்பான்மை - தீர்மானிக்கும்
இன்றியமையாத இரு ஆமை
இவ்விரண்டிற்கும் ஒவ்வாமை
வேற்றுமையான தீண்டாமை
ஒன்று அழகுப்பதுமை - அது பெருமை!
மற்றொன்று கீழ்படியாமை - இது சிறுமை!
பெருமை!!!
முதுமையிலே இளமை பெருமை
புதுமையிலே பழமை பெருமை
பகைமையிலே தன்மை பெருமை
இயலாமையில் தூய்மை பெருமை
கடமையில் துயிலாமை பெருமை
தூற்றாமையில் துவளாமை பெருமை
ஆண்மைக்கு பெண்மை பெருமை
பெண்மைக்கு பேராண்மை பெருமை
வேளாண்மையில் வாடாமை பெருமை
வெள்ளாமைக்கு கதிர்ச்சுமை பெருமை
நல்கொள்கையிலே ஒற்றுமை பெருமை
சிறுமை!!!
முயலாமையில் பொறாமை சிறுமை
இயலாமையால் பயிலாமை சிறுமை
முன்வராமையால் போற்றாமை சிறுமை
செழமையால் கிழ்படியாமை சிறுமை
விசாலபாராமையால் சாராமை சிறுமை
ஊக்கமின்மையால் வீண்போகும் திறமை சிறுமை
கல்லாமையால் இல்லாமை சிறுமை
அறியாமையில் மமதை சிறுமை
குறுகியமனப்பான்மையில் அழகிய கண்மை சிறுமை
கொடுமையுட்டும் வலிமை சிறுமை
மேன்மையில் பக்குவமின்மை சிறுமை
தொன்மை மதியா தலைமை சிறுமை
பொறுமை காத்து
உண்மை பகிர்ந்து
மமதை குறைத்து
மடமை தவிர்த்து
மகிமை படைத்து
சிறுமை ஒழித்து
பெருமை வளர்ப்போம்!
சிறுமையால் வந்த வடு
பெருமையை வளர்த்து எடு!!!
பெருமை புகுந்த வீடு
இதற்கில்லை எங்கும் ஈடு!!!