PDA

View Full Version : எதார்த்தம் பழகு



R.P.ANANDHAN
23-06-2013, 11:23 AM
ஜனனமும் மரணமும்
இரவும் பகலும்

தத்துவமும் பிதற்றலும்
கசப்பும் இனிப்பும்

பசுமையும் வறட்சியும்
உயரமும் பள்ளமும்

கோபமும் தாபமும்
வலியும் சுகமும்

வாழ்வும் தாழ்வும்
ஆக்கமும் அழிவும்

அழகையும் சிரிப்பும்
கோடையும் கார்காலமும்

பெரியதும் சிரியதும்
சண்டையும் சமாதானமும்

ஆள்வதும் அழிவதும்
ஊடலும் கூடலும்

செழமையும் வறுமையும்
க*படமும் வெகுளித்தனமும்

மெய்யும் பொய்யும்
ஆணவமும் அடக்கமும்

சமமானதும் ஆட்கொள்வதும்
சகாயமும் வஞ்ஜகமும்

பிரிவதும் சேர்வதும்
கேட்பதும் கொடுப்பதும்

இன்னபிற விசயங்களூம்...முரண்பாடுகள்!!!

முரண்பாடு
வித்தியாசம் காணலின் முதற்படி!!!

வித்தியாசம்
வாழ்வின் சுவை காட்டும் அளவுகோல்
வித்தியாசமென்பது வேறுபடுத்தல்
வேறுபடுத்தலின் விளைவு புதியபரிணாமம்!!!

பரிணாமம்
தேடலின் ஆரம்பம்!!!

தேடல்
முயற்ச்சிகளின் உந்துதம்
வாய்ப்புகளின் துவக்கம்!!!

வாய்ப்பு
வாழ்வின் ஆதாரம்!!!

தொலைநோக்கு பார்வையும்
குறுகிய மனப்பான்மையும்
வேறுபட்ட சிந்தனைகளும்
மாறுபட்ட சுவைகளும்
பற்பல வண்ணங்களும்
நிகழ்தகவு...!!!

நீலநிறவானும் கானல்நீரும்
கண்களுக்கு மட்டுமே நிஜம்!!!

நிலைமாறுவதும்
உருமாறுவதும்
இடம் மாறுவதும் - இயற்கை!!!

இயற்கை
இயல்பானது
மாற்றங்கள் நிறைந்தது!!!

மாற்றங்கள்
என்றும் உண்மையானது
ஏற்றுக்கொள்ளவேண்டியது!!!

தாழ்வுப்பகுதி நோக்கிப்பாயும் நதியும்
மேல்நோக்கி வளரும் தாவரங்களும்
முரண்பட்ட விணைகள்
மூலவிசை ஒன்றுதான்!!!

இயற்கை இயல்பானது
இயல்பு இயற்கையானது
இயற்கை எதார்த்தமானது!!!

தகுதிக்காக மிகைப்படுத்தல் இயல்பாகாது
இயல்பாக இருத்தல் ஏதார்த்தமெனக்கொள்
சலன*மின்றி வருவதை எதிர்கொள்!!!

சந்தர்ப்பங்களில் -
ஒருமித்து பயணிக்கப்பழகிக்கொள்!!!
எதார்த்தம் பிடித்து -
வாழ்வின் பதார்த்தங்களை ப*டித்துக்கொள்!!!

எதார்த்தம் -
மனநிலை மாற்றம்
வாழ்வியல் ஏற்றம்
ஞாலம் போற்றும்!!!

கீதம்
23-06-2013, 11:54 PM
முரண்பாடுகளுடன் கூடிய வாழ்வின் எதார்த்தத்தை முழுமனத்தோடு ஏற்றுவாழ அறிவுறுத்தும் நற்கவிதை.

கருத்துக்கோர்வையாய் இல்லாமல் ஆங்காங்கே கவிநயம் தூவி எழுதினால் கவிதை இன்னும் சிறக்கும்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

R.P.ANANDHAN
24-06-2013, 11:18 AM
தங்கள் பாரட்டுக்களுக்கு நன்றி, கட்டாயம் தொடர்ந்து என் எழத்துக்களை பகிர்ந்து கொள்வேன். மேலும் தங்கள் பரிந்துறைக்கேற்ப கருத்துட்ன் கவிநயம் கூட்டி அழகுறச்செய்கிறேன்.

அன்புடன்,
ரா.ப.ஆனந்தன்.