PDA

View Full Version : ஆதலினால் காதல் செய்வீர்....!



R.P.ANANDHAN
23-06-2013, 11:38 AM
உற்றாரும் ஊராரும்
காதுகள் தீட்டி
கண்கள் விரித்து
செதுக்கி வைத்த கதைகளோடு
வாய்ப் பசிக்கு தேம்பையிலே....!

காற்றிலே கரைந்து
கவனமாய் கலந்து
நெஞ்சு ஈட்டி குத்தி விட்டு-எனை
நிலைகுலையச் செய்து விட்டு...!

வஞ்சனையாய் எனை மசித்து
நெஞ்சணைத்துப் போனவளே....!
வாசல் எட்டிப் போன பின்னும்
வாசம் விட்டுப் போனவளே....!

பிஞ்சுப் போன்ற என் மனதைப்
பிய்த்து விட்டுப் போகாதே...!
நஞ்சு வைத்தப் பாவத்துக்கு
நாளெல்லாம் ஆளாகாதே...!

கசப்பு ...இனிப்பு... இரண்டும் உட்கொள்....
சுவை அறிந்து மட்கிப் போ....!

நீ வைத்த நெருப்பு -
விளக்காய் எரிகிறது - என்னுள்
வித்தியாசம் கண்டு கொள்....!

இருள் அகற்று -
ஒளி பரப்பு - உன்னுள்
வெளியே வா -
வெளிச்சமாய்த் தெரிகிறது...!

உயிர் கொடு நம் உணர்வுக்கெல்லாம்....!
பயிர்கள் இடு .... நம் பயணமெல்லாம்....!

தொடங்கும் முன் யோசி...!
தொட்ட பின் நேசி...!

கல் எரியா விட்டாலும்'
குட்டை குழம்பும்... இது இயல்பு !

தடைகள் -
தடம் மாறிப் போக அல்ல....
தடம் பார்த்துப் போகவே - இது மரபு...!

பசிக்கையிலேப் புசித்துப் பார் -
சுவை தெரியும்...!
இளமையில் காதல் செய் -
வாழ்வின் அர்த்தம் புரியும்...!

காலக்கெடு ஒன்றும்
இல்லாதது காதல்....!
யுகம் மாறிய போதும்
தன் நிலை மாறாதது காதல்...!

ஆதலினால் காதல் செய்வீர் -
காதலை காதல் செய்வீர்...!

கீதம்
24-06-2013, 12:24 AM
காதல் வேகம் கவிதையில் வெளிப்படுகிறது.

நன்று. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

govindh
27-06-2013, 10:01 PM
அருமையானக் கவிதை...
ஆழமானக் காதலை....
இயல்பாகக் காட்டியுள்ளீர்கள்...!
வாழ்த்துக்கள்.