PDA

View Full Version : பூக்காடும் வேக்காடும்



M.Jagadeesan
13-06-2013, 07:28 AM
பூக்காடு சுமந்துவரும் பெண்ணே உன்னழகைப்
......பார்க்கையிலே தோன்றுதடி நெஞ்சிலே வேக்காடு!
பாக்கோடு வெற்றிலையைக் குதப்பிவரும் பெண்ணேஉன்
......பார்வை தந்ததடீ ! தீராத நோக்காடு!
மூக்கோடு மூக்கை முட்டியே சிரித்திடவே
......முழுமையாய்த் தடைசெய்யும் உன்னுடைய முக்காடு!
சாக்காடு வென்றே சரித்திரம் படைத்திடுவேன்
......சம்மதம் என்றே நீசொல்லும் வார்த்தையிலே!