PDA

View Full Version : ராஜினாமா வாப்பஸ்ஆதி
11-06-2013, 08:52 PM
பெங்களூரில் பிழைத்து கொண்டிருந்த போது, நண்பர்களுடன் அறையில் வசித்திருந்தேன், அந்த நண்பர்களில் ஒருவர் தெய்வ குமார். எங்கள் அனைவரையும் விட மிக மூத்தவர். அவரை பற்றி பேசினாலே புரானம் தான் . புரானம் என்றால் கிருஷ்ண புரானம். ஆம். உங்கள் ஊகம் கிட்டத்தட்ட* சரிதான், என்றாலும், பெரிய வயது கிருஷ்ணனின் கதை மட்டுமல்ல சிறுவயது கிருஷ்ணனின் கதைகளையும் உங்கள் கற்பனையில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏறக்குறைய தெய்வ குமாரை புரிந்து கொண்டுவிடலாம்..

ஒரு நாள் இரவு உணவருந்த ஹோட்டலுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தேன், உடைமாற்றிக் கொண்டு, தலை சீவ கண்ணாடி முன் சென்ற போது கவனித்தேன், ஹீட்டர் ஸ்விச் அணைக்கப்படாமலே இருந்ததை. மணி அப்போது எட்டேகால் இருக்கும். தெய்வ குமார் தான் மறந்துவிட்டிருக்க வேண்டும், அவர் என்போதும் மதிய ஷிப்டில்தான் வேலைக்கு செல்வார், மதியம் 2 மணிக்கு ஷிப்ட், கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கு மேல் ஹீட்டர் ஓடி கொண்டிருந்திருக்கிறது, இந்த மாதம் கரண்ட் பில் எகிற போகிறது என்று நினைத்துக் கொண்டே ஹீட்டரை அணைத்தேன்

மறுநாள், அலுவலகத்துக்கு கிளம்பும் போது தெய்வ குமார் தன் அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார், என்னை பார்த்ததும்

"கிளம்பியாச்சா" என்றார்

"ம், நேத்து ஹீட்டர் ஆஃப் பண்ணாமலே போய்டிங்க போல" என்றேன்

"அப்படியா" என்றவாறு டூத்பேஸ்ட்டை ப்ரஷில் இட்டு கொண்டிருந்தார்

"ஆமா, நான் நைட் எட்டு மணிக்கு மேல*தான் கவனிச்சேன், அநேகமா மதிய*த்துல இருந்து ஓடீட்டிருந்திருக்கனும்ன்னு நெனக்கிறேன்"

"நீங்க ஏன் அஞ்சு மணிக்கே பார்க்கல" என்று கேட்டுக் கொண்டே, ப்ரஷ்சை வாயில் திணித்து பல் விளக்க ஆரம்பித்தார்

என் வாயில் கெட்ட வார்த்தைகள் நுரைத்தன, பெரியவர் என்பதால் கோவத்தை அடக்கி கொண்டு, உமிழ்நீரை போல கெட்ட வார்த்தைகளையும் விழுங்கி, அமைதியாக* அலுவலகம் கிளம்பிவிட்டேன்

இப்படி பல சம்பவங்கள் அவரை பற்றி சொல்வதற்கு இருக்கின்றன, எனினும் இந்த ஒரு சம்பவத்தில் நீங்கள் அவரை பற்றி கொஞ்சம் புரிந்து கொண்டிருக்க கூடுமென நம்புகிறேன்

அதுசரி அவரை பற்றி நாங்கள் ஏன் புரிந்து கொள்ள வேண்டுமெனும் உங்களின் கேள்விக்கு என்னிடம் பதிலில்லைதான் என்றாலும், அவரை பற்றி சொல்ல ஆரம்பித்ததன் காரணமே அத்வானிதான். ஆம்,அத்வானி தன் ராஜினாமாவை வாப்பஸ் பெற்றதே காரணம்

அத்வானியின் சமீபத்திய நாடாளு மன்ற தேர்தல் கணிப்புக்கள் தெளிவானதாகவும், முதிர்ச்சி மிக்கதாகவும் இருந்தன, அடுத்த நாடாளு மன்ற தேர்தலில் காங்கிரஸோ, பாஜகவோ ஆட்சி அமைக்காது என்றாலும், இந்த இரு கட்சிகளின் ஏதாவது ஒன்றின் ஆதரவோடுதான் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியும் என்று சென்ற வருடத்தில் பேட்டி அளித்து சிலரின் பேச்சுக்களை கூட அவர் வாங்கி கொண்டார், என்றாலும் அவரின் கருத்தில் உண்மை இருக்கவே செய்தது, அதற்காகவே அவரை நான் ஆதரித்தேன்.

இப்படி பட்ட மதிப்பு மிக்க ஒருவர், நேற்று கட்சியின் எல்லா பொறுப்பில் இருந்தும் வில*குவதாக ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமைக்கு கொடுத்திருக்கிறார்

அவரின் அந்த முடிவிற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன*

1) நாடாளு மன்ற தேர்தல் பிரச்சார குழுவில் மோடி தனக்கு கீழே செயல் பட வேண்டும்

2) பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும்

3) குறைந்தபட்சம் 6 மாதவாவது தன்னை பிரதமராக இருக்க அனுமதிக்க வேண்டுமென்று பாஜக தலைமையை கேட்டிருக்கிறார்

இந்த மூன்றும் மறுக்கப்பட்டதின் ஏமாற்றத்தில், பாஜகவின் எல்லா பொறுப்பில் இருந்தும் விலகுவதென்ற கசப்பான முடிவை எடுத்திருக்கிறார்

இந்த ராஜினாமா படலம் என்பது முதல்முறை அல்ல, இதற்கு முன் இது போன்று, மூன்று முறை கட்சி பொறுப்பிலிருந்தும், தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக ராஜினாமா செய்து மீண்டும் அதனை வாப்பஸ் பெற்றிருக்கிறார் அத்வானி

ஆகவே, இந்த ராஜினாமா வாப்பஸ் புதியதல்ல அல்லது எதிர்ப்பார்த்ததுதான் என்றாலும் ஒரு தேசிய கட்சியின் பொறுப்புள்ள தலைவராக இருக்க வேண்டிய அத்வானி பதிவிக்காக செய்த இவ்வாறான காரியம் அவரின் மீதான நம்பிக்கையும் மரியாதையும் கொஞ்சமாவது சேதப்படுத்தியிருக்கிறது

இந்த வாப்பஸிற்கான காரணம் அவரின் டிமாண்ட்களை பாஜக தலைமை ஒப்பு கொண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம்
6 மாத காலம் பிரதமராக இருக்க சம்மதித்து இருக்க வேண்டும், எதுவென்றாலும் "எல்லாரும் பதவிக்கு அலைகிறவர்கள் தான் போலும்" என்று எண்ண வைத்துவிட்டார் அத்வானி

நம்ம தெய்வ குமார் கூட அத்வானி போலத்தான், நான் அறிந்தவரை அவர் ஆறு ஆண்டுகளாக வேலை பார்த்த அலுவலகத்தில் 4 முறை பேப்பர் கொடுத்திருக்கிறார்

வேலையை பொருத்தவரை அவர் மிக திறமைசாலி, சிறந்த அறிவாலி

அதனால் அவரின் அலுவலகம் எந்த காரணம் கொண்டு அவரை இழக்க தயாராக இல்லை, இதை நன்கு அறிந்திருந்த* தெய்வ குமார், பேப்பர் போட்டு தன் டிமாண்ட்களை வைப்பார், ஒரு மாத நோட்டீஸ் என்றும் அவகாசமும் தருவார், அந்த ஒரு மாததுக்குள் தன் தேவைகள் அனைத்தையும் நிறை வேற்றி கொண்டு, கடைசி வாராத்தில் பேப்பரை திரும்ப பெற்று விடுவார்

ஆனால் அவர் நான்காம் முறை கொஞ்சம் உறுதியாகவே இருந்தார், பேப்பரை வாப்பஸ் பெற வாய்ப்பே இல்லை என்பது போலவே நண்பர்களும் கூறினார்கள், அலுவலகத்தின் கடைசி வேலை நாளில் "குட் பை மெயில்" கூட* அனுப்பிவிட்டார், எல்லோரும் அவரின் எதிர்க்காலத்துக்கு வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்தும் விட்டார்கள், அனைத்து வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, எம்.டி அறைக்கு சென்று தன் பேப்பை திரும்ப பெற்று வந்துவிட்டார் தெய்வ குமார்

என்ன என்று கேட்டதற்கு

"யோசிச்சு பார்த்தேன், இங்கேயே இருக்கதுதான் நால்லதுன்னு தோனுச்சு" என்றார்

அந்த சம்பவத்திற்கு பிறகு தெய்வ குமாரின் பேப்பர் போடும் காரியம் பல விடயங்களுக்கு உதாரணங்களாகவும், உவமைகளாகவும் நண்பர்கள் மத்தியில் மாறிவிட்டிருந்தது

டீக்கடையில் போண்டா சரியில்லை என்றால் கூட "யோவ் தெய்வ குமார் பேப்பர் போடுயா" என்று கலாய்க்கும் அளவிற்கு கேலிக்குரிய ஒன்றாக மாறி போய்விட்டிருந்தது

இப்படி தெய்வ குமார் போன்றொரு நிலைமை அத்வானிக்கும் வந்துவிட கூடாது என்பதே என்னுடைய கவலையாக இருக்கிறது

இராஜிசங்கர்
12-06-2013, 04:53 AM
அத்தனையும் நடிப்பா கோப்ப்ப்பால்!!!!!!! :p

தாமரை
12-06-2013, 05:15 AM
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php/17311-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE!!!-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81)

aren
12-06-2013, 05:53 AM
இந்த முறை பாஜக மிகவும் பிடிவாதமாக இருந்திருக்கிறது, அதனால்தான் மறு நாளே வாபஸ் வாங்கிக்கொண்டார். இருப்பது போய்விடும் என்று ஒரு சிலர் கூறியிருக்கக்கூடும் குறிப்பாக லல்லு அல்லது முலையாம் அல்லது நித்திஷ் சொல்லியிருக்கலாம். பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அனைத்து எம்பிக்களையும் மோடிக்கு எதிராக கொடி பிடிக்கவைத்தால் அதற்கு நித்திஷ் மற்றும் தோழமை கட்சிகள் ஆதரவு கொடுக்ககூடும், அந்த வியூகத்தில் வாபஸ் வாங்கிக்கொண்டார். முதலில் மெஜாரிட்டி கிடைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்.

aren
12-06-2013, 05:54 AM
உங்க தெய்வகுமார் கதை சூப்பராக இருக்கிறது. இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.

இராஜேஸ்வரன்
26-06-2013, 01:47 PM
சுவையான கட்டுரை. பாராட்டுகள்.