PDA

View Full Version : ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சிஆதி
10-06-2013, 05:57 PM
டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து 57.37 ரூபாயாக உள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, தொடர்ச்சியாக டாலரை வாங்கியதால், டந்த வெள்ளியன்று, நாணயச் சந்தையில், ரூபாயின் மதிப்பு 31 பைசா குறைந்து காணப்பட்டது. இதற்கு முந்தைய சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57.32 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. தற்போது, ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சில மணி நேரங்களுக்கு முன் மேலும் குறைந்து 58.15 ரூபாயாக வீழ்ந்தது

## எங்க அப்பத்தா பூவு எடுத்து விக்கும், எங்க தோட்டத்துல கனகாம்பரம் போட்டிருந்துச்சு, வித்த காசு, கூலி எல்லாம் போக மிச்சம் நிக்குற காசு கஞ்சிக்கு கூட பத்தாது சில நாள் கடன் தான் வாங்கும். அப்பத்தா செய்த பூ உற்பதியின் வருமானத்தைவிட அதோட தேவைக்கு வாங்கும் பொருளின் செலவின் மதிப்பு அதிகமா இருந்துச்சு, இதைத்தான் பொருளியலில், நடப்பு கணக்கு பற்றாக்குறைனு சொல்றாக்க*

இந்த நடப்பு கணக்கு என்பது வணிகத்தின் மிச்சிருப்புக் கூட்டுத்தொகையாலாவது, அதாவது இறக்குமதி செலவில் ஏற்றுமதியின் வருமானத்தின் கிழித்தலில் வரும் நிகர வருவாய்

நிகர வருவாய் என்பது இரு வகையாகிறது ஒன்று நேர் நிகர வருவாய் இன்னொன்று எதிர் நிகர வருவாய்

அயல்வணிகத்தில் நேர் நிகர வருவாய் வரின் நடப்பு தொகை மிகை என்றும், எதிர் நிகர வருவாய் வரின் நடப்பு தொகை பற்றாக்குறை என்றும் சொல்கிறோம்

எங்க அப்பத்தா வித்த பூவில் வந்த வருமானத்தை விட அவளின் தேவையின் செலவு கம்மியானால் அது நேர் நிகர வருவாய், வருமானதைவிட அவளின் தேவையின் செலவு அதிகமானால் அது எதிர் நிகர வருவாய்

இப்போது இந்த ரூபாயின் மதிப்பு சரிவுக்கான காரணியாக இருப்பது நடப்பு கணக்கு பற்றாக்குறை, நாம் ஏற்றுமதி செய்த பொருளின் வரிவாமனதைவிட இறக்குமதி செய்த பொருளின் செலவு அதிகமாக இருக்கிறது, இதன் காரணமாவது சென்றை காலாண்டிவிட இந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு விளைவு 1.5% சரிந்து வணிகப்பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது, சென்ற காலாண்டில் 4ல் இருந்து 4.5% விழுக்காடாய் சரிந்திருந்த மொத்த உள்நாட்டுவிளைவு, இந்த காலாண்டில் 5.5ல் இருந்து 6% விழுக்காடாய் கூடியுள்ளது, இதன் காரணமாகவே டாலரின் மதிப்பு இவ்வளவு உயர்ந்துள்ளது, முதல்முறையாக இப்போதுதான் டாலரின் மதிப்பு 58 ரூபாயை எட்டி உள்ளது

இது நமது பொருளாதாரத்தில் மிக பெரிய வீழ்ச்சியாகும், இந்த வீழ்ச்சிக்கு நமது பல காரணிகள் இருந்தாலும், அதன் அனைத்து பெருமையும் ஆளும் காங்கிரஸையே போய் சேரும்

ஒட்டு மொத்த பழியையும் யார் மீதாவது போட்டுவிட்டு தப்பித்து கொள்ள முயற்சிப்பதே நம்ம மக்களோட வேலை, அதைத்தானே நீயும் செய்றன்னு நெனக்கீறிங்களா, தப்பில்லை, அந்த குட்டைல ஊறின மட்டைதானே நானும்..

சரி நம்ம சண்டைய அப்புறம் வச்சுப்போம் விடுங்க*

சுதந்திரம் வாங்கினோமில்லையா அப்போ அதவது 1947ல டாலரின் மதிப்பு 1 ரூபாய், கிட்ட தட்ட ஒரே ரேஞ்சுலத்தான் இருந்திருக்கோம் அப்ப, ஆனா மெரிக்க ரூபாயின் மதிப்பு உயர்ந்துகிட்டே போச்சு,1948ல் 3.3 ரூபாயா ஆகியிருக்கு, ஆனா இந்திய ரூபாய் மதிப்பு வர வர மாமியா கழுத போல ஆனாலாம்னு ஆகிடுச்சு

சாதி, மதம், பிரிவினை, பட்டினி, பஞ்சம், அரசியல் காழ்புணர்வு, ஏரியா சண்டை, தெரு சண்டை, ஊர் சண்டை, கோயில் சண்டை, ஊழல், லஞ்சம், முறைகேடு, டகால்டின்னு நம்ம பொருளாதாரத்த சும்மா நார் நாரா கீச்சு வச்சுருக்கோமில்ல*

இத்தனை வருசம நம்மை ஆண்ட காங்கிரஸ் மட்டும் பொருளாதார கொள்கையை ஒழுங்க கட்டமைச்சு இருந்தா இந்த நெலமை வந்திருக்குமா, வந்தவனுக்கு எல்லா ஈச்சுண்டு எடுத்துகோ எடுத்துக்கோனு கேட்டை எல்லாம் கொடுத்து நாட்டை போண்டியாக்கி நம்மலை தெருவுல உட்கார வைக்கத்தான் எல்லாம் செய்து வச்சிருக்காங்க, சோ மிட் பூ ஆல் சூன் இன் ஸ்ட்ரீட்

தாமரை
11-06-2013, 04:29 AM
அவனவன் ஒழுங்கா செலவு பண்ணினா இது வராது.

அதிகமா செலவு செய்யணும்னு ஆசைப்படறாங்க. பிராண்டு பிராண்டுன்னு போட்டு பிறாண்டறானுக. செலவு செய்ய பணம் வேணுமே.. அதுக்காக வெலையை ஏத்தி விடறானுக. அவனவன் ஊர்ல விளையறதை அவனவன் ஊர்ல விக்கிறதில்லை. வாங்கறதில்லை. இன்னொருத்தனுக்கு வித்து அதை இன்னொரு நாட்டுக்கு வித்து அதை இங்க்க இருக்கறவன் வாங்க்கறான். யூஸ் அண்ட் த்ரோ என்கிற கலாச்சாரத்தில் அம்மா,அப்பா, நண்பன், கணவன், மனைவி எல்லாத்தையும் சேர்த்தாச்சி. உற்பத்தி பெருக்கம் என்ற பேர்ல இயற்கையை சீரழிச்சாச்சு.

மக்கள் விளம்பரங்களுக்கு மயங்காம இருந்தாலே நாடு உருப்பட்டு விடும். நாம தேவையில்லாம உபயோகிக்கற எந்த வளமும் அடுத்த தலைமுறைகிட்ட இருந்து நாம கொள்ளையடிக்கிறோம் என்பதை ஒரு காலத்திலும் மறக்கக் கூடாது.

வீட்டில தயிர் சாதம் சாப்பிடறது அவமானம். 5* ஓட்டலிலே குளிர வச்ச தயிர் சாதம் சாப்பிடணும் அப்படிங்கற தாழ்வு மனப்பான்மை இருக்கிற கனவான்கள் அதுக்காக அடுத்தவன் உழைப்பைச் சுரண்டறான் பாருங்க.. அது நமக்குத் தெரிந்த வீணடிப்பு. அதேசமயம் ஒரு சொட்டு பெட்ரோல் சேமிக்கறேன்னு சொல்லி டிராஃபிக் ஜாமை உண்டாக்கி ஒட்டு மொத்தமா 15 லிட்டர் பெட்ரோலை வீணடிக்க வைக்கிறான் பாருங்க அது நமக்குத் தெரியாத வீணடிப்பு. இப்படி காசு பெறாத விசயத்துக்கெல்லாம் முண்டியடிச்சி நாம வீணடிக்கிறதை சேமிச்சாலே இந்த நிலை வராது.

இராஜிசங்கர்
12-06-2013, 05:11 AM
இதுக்கு இன்னொரு முக்கியக் காரணம் நமக்கு உற்பத்தித் துறையில் அதிக கவனம் இல்லை. சேவைத் துறையில் தான் நாம் 'கிங்'காக இருக்கிறோம்(குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில்). முதலாளிகளாக இருப்பதை விட தொழிலாளியாக இருப்பது பாதுகாப்பு என்ற மனோபாவம் இதற்குக் காரணம். அது மாற வேண்டும்.

மற்றுமொன்று தாமரை அண்ணா சொன்னது போல், நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் அயல்நாட்டு ப்ராடக்டுகள் தான். காலையைத் தொடங்கி வைக்கும் பற்பசையிலிருந்து இரவில் தூங்க வைக்கும் கொசுவிரட்டி வரை எல்லாம் அயல்நாட்டு உற்பத்திப் பொருட்கள். உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கச் செய்தால் தான் இனி வரும் காலங்களில் பிழைக்க முடியும். இல்லையேல், எல்லாரும் அமெரிக்க க்ரீன் கார்ட் வாங்கி அமெரிக்கக் குடிமகன்களாய் மாறுவது தான் இதிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழி.

aren
12-06-2013, 05:58 AM
மேலே சொன்ன விஷய்த்தை விடவும் வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும் இல்லையென்றால் இப்படி நம்முடைய ரூபாயின் மதிப்பை வேண்டுமென்றே குறைக்கமாட்டார்கள். சுவீஸ் மற்றும் ஐரோப்பிய வங்கியில் தங்கியிருக்கும் பணத்தை இந்தியாவிற்கு எடுத்து வருகிறார்களோ என்று ஒரு சந்தேகம், அதற்காக ஆளும் கட்சியினரும் ரிசர்வ் வங்கியும் உதவுகிறதோ என்று நினைக்க்த் தோன்றுகிறது. நம்முடைய இந்தியர்களின் பண இருப்பு சுவீஸ் வங்கியில் பாதிக்குமேல் குறைந்துவிட்டது கடந்து ஒரு வருடத்தில், அப்படியென்றால் அந்தப் பணம் எங்கே போயிருக்கும். வேறு மார்க்கமாக இந்தியாவிற்குள் வந்திருக்கும், அப்படி கொண்டுவர நிறைய பணம் செலவாகும் அதை ஈடு கட்ட இப்படி ரூபாயை வீழ்த்திவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

இந்த மாதிரியும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இதுவும் உண்மையாக இருக்கலாம்.

prakash01
15-06-2013, 11:04 AM
இதுக்கு இன்னொரு முக்கியக் காரணம் நமக்கு உற்பத்தித் துறையில் அதிக கவனம் இல்லை. சேவைத் துறையில் தான் நாம் 'கிங்'காக இருக்கிறோம்(குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில்). முதலாளிகளாக இருப்பதை விட தொழிலாளியாக இருப்பது பாதுகாப்பு என்ற மனோபாவம் இதற்குக் காரணம். அது மாற வேண்டும்.

மற்றுமொன்று தாமரை அண்ணா சொன்னது போல், நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் அயல்நாட்டு ப்ராடக்டுகள் தான். காலையைத் தொடங்கி வைக்கும் பற்பசையிலிருந்து இரவில் தூங்க வைக்கும் கொசுவிரட்டி வரை எல்லாம் அயல்நாட்டு உற்பத்திப் பொருட்கள். [B]உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கச் செய்தால் தான் இனி வரும் காலங்களில் பிழைக்க முடியும். இல்லையேல், எல்லாரும் அமெரிக்க க்ரீன் கார்ட் வாங்கி அமெரிக்கக் குடிமகன்களாய் மாறுவது தான் இதிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழி.

சரியாக சொன்னீர்கள்...

இராஜிசங்கர்
16-06-2013, 01:57 PM
சரியாக சொன்னீர்கள்...

நன்றி பிரகாஷ்