PDA

View Full Version : சின்னதாய் ஒரு கவிதை



lavanya
08-04-2003, 11:38 PM
கவிதைப் போட்டியில்
அவன் அவளோடு
மோதினான் - அவன்
மொழிகளால் சொன்ன
கவிதையை விட
அவள் விழிகள் சொன்ன
கவிதையே வென்றது

இளசு
08-04-2003, 11:56 PM
அருமை லாவண்யா அவர்களே அருமை.
விழியீர்ப்பு விசையைப் பற்றி
எத்தனை படித்தாலும்
அத்தனையும் சுகந்தான்..

.விழிகள் விசித்திரத் தரகர்கள்.
கூலி இல்லாமலே
இதய மாற்று
வியாபாரம் செய்யும்
வித்தகர்கள்.

அவளைக் கைதுசெய்யுங்கள்.
விழியெங்கும் போதைப்பொருள்.

என் கருங்கல் இதயத்தை
உப்புக்கல்லாய் கரைத்தாயே
உன் விழியில் வழிவது
ராஜ திராவகமா....

Narathar
09-04-2003, 10:24 AM
அட............ எவ்வளவு எளிமையான நடை!!!
உங்க கவிதையை சொன்னேன்!!
இளசுவின் கவிதை இனிமை

poo
09-04-2003, 12:21 PM
பாராட்டுக்கள் அண்ணனுக்கும் அருமை அக்காவுக்கும்!!!

chezhian
09-04-2003, 12:34 PM
அழகு லாவண்யாவின் சிறுகவிதை..
இனிமை இளசுவின் பதில் கவிதை

discreteplague
09-04-2003, 01:31 PM
கவிதை வருவதெ காதலால் தனே.....

விஷ்ணு

rambal
09-04-2003, 04:24 PM
தூண்டில் புழு உன் கண்..
சிக்கிய மீன் நான்.

உன் ஓர விழிப் பார்வை
எனும் கத்தி எறியாதே..
ஏற்கனவே என் இதயம்
கிழிந்து..

பாராட்டுக்கள் லாவண்யா..

இராசகுமாரன்
10-04-2003, 04:42 AM
லாவண்யாவை பாராட்டும் சாக்கில் அடடா ஆளுக்கு ஒரு கவிதை
அவிழ்த்து விடுகிறார்களே?
இப்போது தான் தெரிகிறது எத்தனை பேர் "கண்ணடி" பட்டு
இருக்கிறார்கள் என்று.

Narathar
10-04-2003, 06:28 AM
லாவண்யாவை பாராட்டும் சாக்கில் அடடா ஆளுக்கு ஒரு கவிதை
அவிழ்த்து விடுகிறார்களே?
இப்போது தான் தெரிகிறது எத்தனை பேர் "கண்ணடி" பட்டு
இருக்கிறார்கள் என்று.

யாரங்கே!!!
எனக்குப்போட்டியாக?
நான் நாரதரா இல்லை நீங்களா??
இராசகுமாரனிடம் முறையிடுவேன்!! கவனம்!!! :lol: :lol:

Nanban
11-04-2003, 05:27 AM
விழிகள் சொன்ன கவிதை
வென்றது - யாரை?
மொழிகள் சொன்ன கவிஞனையா?
இல்லை, பரிசுகள் வழங்க
வந்த நடுவனையா?
பார்வையாளானாக வந்த
ஆயிரமாயிரம் ரசிகனையா?
வெல்லப்பட்டது யாராகிலும்
தோற்றவர்க்கு சுகமே.........

gans5001
22-04-2003, 02:07 AM
லாவண்யாவின் வரிகளை சற்றே மாற்றியிருக்கிறேன் (மன்னிக்கவும்)

"கவிதைப் போட்டியில் அவனும் அவளும்
அவள் வென்றாள்... கண்கள்"

kaathalan
22-04-2003, 06:55 PM
கவிகள் விளையாடும் கவி விளையாட்டுக்களை இரசித்தேன். பாராட்டுக்கள். எல்லோருடைய சின்னச்சின்ன கவிதைகளும் நன்றாக இருந்தது. நண்பன் அவர்களின் கேள்விக்கவிதையும் அருமை. யாரை விழி சொன்ன கவிதை வென்றது.

அக்னி
26-09-2007, 12:23 PM
வரிகள் சுற்றிய கவிதை,
காவியமானது...
அவள் விழிகள் காட்டிய கவிதை,
உயிரோவியமானது...

இராசகுமாரன் அண்ணாவின் ரசிப்பும், மூத்தோரின் வாழ்த்துக்களும் பெற்ற அழகிய கவிதைக்கு எனது பாராட்டுக்களும்...

சுகந்தப்ரீதன்
27-09-2007, 03:31 AM
விழியில் வீழ்ந்த்வரா..? விழியால் வீழ்த்தியவரா தாங்கள்..?
கவிதை மிக அருமை... வாழ்த்துக்கள்...!

aren
27-09-2007, 03:41 AM
அடாடா, இதை இத்தனை நாட்கள் பார்க்கவில்லையே. அருமை.

ஒரு சிறிய கவிதையில் எத்தனை விஷயங்கள். லாவண்யா எங்கே நீங்கள், மறுபடியும் வாருங்கள்.

ஓவியன்
27-09-2007, 03:43 AM
காதலுக்கு,
மொழிகளிலே கிடையாத
வார்த்தைகள்.
விழிகளிலே கிடைக்கும்...

அழகான கவிதைக்கு அருமையான பின்னூட்டங்கள் கிடைக்கையில் அதை வாசிப்பதும் சுகம் தான்....

நேசம்
27-09-2007, 09:28 AM
அருமை லாவண்யா அவர்களே அருமை.
விழியீர்ப்பு விசையைப் பற்றி
எத்தனை படித்தாலும்
அத்தனையும் சுகந்தான்..

.விழிகள் விசித்திரத் தரகர்கள்.
கூலி இல்லாமலே
இதய மாற்று
வியாபாரம் செய்யும்
வித்தகர்கள்.

அவளைக் கைதுசெய்யுங்கள்.
விழியெங்கும் போதைப்பொருள்.

என் கருங்கல் இதயத்தை
உப்புக்கல்லாய் கரைத்தாயே
உன் விழியில் வழிவது
ராஜ திராவகமா....


அவளைக் கைதுசெய்யுங்கள்.
விழியெங்கும் போதைப்பொருள்

ரொம்ப அருமையாக இருந்தது. இளசு