PDA

View Full Version : போதைச் சேற்றில் மனித நாற்றுகள்



nandagopal.d
04-06-2013, 03:31 PM
http://4.bp.blogspot.com/-xjuVW1TW_8k/Ua4H59EaEdI/AAAAAAAAAJ0/yRyB0b9ALXM/s1600/images.jpg

இரவு முழுவதும் களைத்து துறங்கும்
சந்தோஷமான நாள் ஒன்றின் விடியலில்
வெள்ளை சட்டையும் அதன் ஓரம்
மங்களகரமான மஞ்சளும் இன்னும்
சந்தோசம் வேண்டுமென்று கிளம்பியது
சுய நினைவின்றி அரசாங்கத்திற்கு வரி கட்டும்
ஆசையில் நண்பர்களுடன்
வட்ட மேஜை மாநாட்டில்,
அங்கு ,எங்கும் இசைக்கபடுகிறது.
காதல் கீதங்களும் சோககீதங்களும்
போதையாற்றின் நிழலில் கரை ஒதுங்கி
மீண்டும் திரும்பி விடுகின்றன
நாற்றமெடுத்த சாக்கடைகளுடன்
குறைவின்றி குடித்தலில் குளிக்கிறது இறப்பு
தன் ஆனந்தத்தை

நாஞ்சில் த.க.ஜெய்
07-06-2013, 02:34 PM
போதை சேற்றில் வீழ்ந்துவிட்ட இக்குடிமகன் காயத்துடன் வாழ்வானோ அன்றில் இழப்போன்றில் சிக்கி மீள்வானோ அல்ல வீழ்வானோ யாரறிவார் ..

கீதம்
08-06-2013, 12:46 PM
மனம் வருத்தும் விஷயமிது மது என்னும் விஷமது.

போதைச்சேற்றில் நடப்பட்ட நாற்றுகள்

பாதியிலேயே அறுவடையாகிப் பாழாய்ப்போகின்றன.

சாக்கடையும் சந்தனமாம்,

பீமேடும் பூமேடையாம்...

வருத்தங்களைத் தவிர வழங்குவதற்கேதுமில்லை அவர்கட்கு!

கவிதை நன்று. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

(களைத்துறங்கும் - முதல்வரியை சரிசெய்யவேண்டுகிறேன்.)