PDA

View Full Version : நிழல் கவிதைகள் - 2



செல்வா
31-05-2013, 04:36 AM
ஒதுங்க இடமில்லா
நட்ட நடு மைதானத்தில்
பெய்து கொண்டிருந்தன சூரியக்கதிர்கள்

தாய்க்கோழியின் கால்களுக்கிடையில் ஒளியும்
குஞ்சாகக் குறுகி கைகளை உயர்த்தி
வெயிலை மறைத்தான்.

நிலத்தில் வீழும் நிழல் பருந்தாய் விரிய
திரும்பிப் பார்த்தான்.......

அவன் காதலி வந்து கொண்டிருந்தாள்...!

கீதம்
03-06-2013, 12:03 PM
ஒதுங்க இடமில்லா
நட்ட நடு மைதானத்தில்
பெய்து கொண்டிருந்தன சூரியக்கதிர்கள்

தாய்க்கோழியின் கால்களுக்கிடையில் ஒளியும்
குஞ்சாகக் குறுகி கைகளை உயர்த்தி
வெயிலை மறைத்தான்.

நிலத்தில் வீழும் நிழல் பருந்தாய் விரிய
திரும்பிப் பார்த்தான்.......

அவன் காதலி வந்து கொண்டிருந்தாள்...!

காதலிக்காக நிழல் விரித்தானா?

காதலியின் நிழல் பருந்தாய் விரிந்ததா?

யோசித்துக்கொண்டிருக்கிறேன், யோசனைகளுக்கப்பாற்பட்ட களத்தில் கவிதை இயங்குவது புரிந்தும்!

பாராட்டுகள் செல்வா.

நாஞ்சில் த.க.ஜெய்
07-06-2013, 02:36 PM
படித்ததும் உதித்தது ,பருந்தாக காதலி சிறு கோழிகுஞ்சாய் காதலன் உவமை உவமை ..

தாமரை
11-06-2013, 04:40 AM
அந்தப் பருந்து கொத்திக் கொண்டு போனதா குஞ்செனும் மனதை?

பாம்பு தவளைக்கு நிழல் தந்தது பற்றி இரு வேறு கதைகள் உண்டு..

கதை : 1

மலையாள தேசத்தின் காலடி என்ற இடத்தில் இருந்து வடக்கு நோக்கி யாத்திரை சென்ற ஆதிசங்கரர், தாம் செல்லும் வழியில் பண்டிதர்களுடன் வாதம் செய்து, தோற்கடித்து, அவர்களைத் தன் சீடர்களாக்கினார். அப்படி ஒருமுறை... மண்டனமிச்ரர் என்ற விஸ்வரூபரிடம் வாதம் செய்தார். அவரின் மனைவி, சரஸ்வதி தேவியின் அம்சமான உபயபாரதி. அந்த வாதத்தில் விஸ்வரூபர் தோற்று, துறவறம் ஏற்றார். அவருக்கு சுரேஷ்வரர் என்ற திருநாமம் கொடுத்து சீடராக்கினார் ஆதிசங்கரர். மேலும், சாட்சாத் சரஸ்வதியின் அம்சமான உபயபாரதியும் உடன் வரவேண்டும் என வேண்டினார். அதற்கு உபயபாரதி, ''சரி... உங்கள் பின் வருகிறேன். நீங்கள் திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும். அப்படிப் பார்த்துவிட்டால், நான் அங்கேயே நின்றுவிடுவேன்'' என்றாள்.

மேற்குத் தொடர்ச்சி மலை வழியே சீடர்களுடன் ஆதிசங்கரர் நடந்து சென்றார். அவர்களின் பின்னே உபயபாரதியும் கால் சலங்கை 'கலீர் கலீர்' என ஒலிக்க நடந்து வந்தாள். துங்கை நதிக்கரையோரம் வந்தபோது, அவர்கள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டனர்.
சுட்டெரிக்கும் வெயில். தவளை ஒன்று பிரசவ வேதனையில் தவித்தது. அப்போது, விறுவிறுவென வந்த பாம்பு ஒன்று, தவளையின் மீது வெயில் படாதவாறு படம் எடுத்து பாதுகாத்தது. இதைக் கண்ட ஆதிசங்கரர், விரோதமுள்ள பிராணியிடம்கூட இரக்கமும் அன்பும் தவழும் இந்த இடத்தை தியானம் செய்ய சிறந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார்.

அதேநேரம், தேவியின் சிலம்பொலியும் நின்றுவிட, திரும்பிப் பார்த்தார் சங்கரர். நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. பிறகு அங்கேயே ஸ்ரீசக்ரம் வடித்து, தேவிக்கு 'சாரதா' எனும் திருநாமம் சூட்டி (மரத்தில்) பிரதிஷ்டை செய்தார்.

இவருக்கு காட்சி கொடுத்த அன்னை, ''இந்த பீடம் சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கப் படட்டும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடிகொண்டு அருள் வழங்குவேன்'' என அருள்பாலித்தாள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கதை 2.

நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார்.

நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல்.

நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வாலை தரையில் ஊன்றி வேறு வழியில்லாமல் தலையை முழுவதும் தூக்கி படமெடுத்து நிற்கிறது. கீழே விழுந்தால் பாம்பு கருகி செத்துவிடும்.


இந்த படமெடுத்து நிற்கும் பாம்பின் கீழே நிழலாக இருப்பதால் தவளை நாக பாம்பின் கீழே நிற்கிறது. பசிக்கு கொஞ்சம் வேண்டும் என்றாலும் தவளையை பாம்பு விழுங்கிவிடும். ஆனால் இப்போது விழுங்கமுடியாது. ஏன் விழுங்கமுடியாது என்றால், தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான். தவளை, பாம்புக்கு கீழே இருக்கிறது. தவளைக்கு பாம்பு எமன். ஆனால் வேறு வழியில்லாமல் தவளை, பாம்பின் நிழலில் நிற்கிறது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

காதலில் அதுவும் உண்டு இதுவும் உண்டு. நிழல் கறுப்பானது. அதில் என்ன இருக்கிறது? யாருக்குத் தெரியும்?