PDA

View Full Version : நிழல் கவிதைகள் - 1



செல்வா
31-05-2013, 04:35 AM
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
பருந்தின் நிழலில் சுற்றியபடியே

குப்பையை கிளறிக் கொண்டிருக்கிறது
கோழிக்குஞ்சு ..!

கீதம்
03-06-2013, 12:01 PM
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
பருந்தின் நிழலில் சுற்றியபடியே

குப்பையை கிளறிக் கொண்டிருக்கிறது
கோழிக்குஞ்சு ..!

பருந்தின் நிழலை ஆபத்தென்று அடையாளங்காட்டத் தவறிவிட்டதோ தாய்க்கோழி?

சிந்தனையைத் தூண்டும் கவிதை. நிழற்படம்போலே மனத்தில் நிலைகொண்ட வரிகள். பாராட்டுகள் செல்வா.