PDA

View Full Version : அவ்வப்போது தோன்றும் குறுஞ்சிந்தனைகள்......



arun karthik
25-05-2013, 12:50 PM
எவ்வித யோக பயிற்சியுமின்றி,தியானமுமின்றி
தண்ணீரில் மிதக்கும் கலையை
சுலபமாகவும் இயல்பாகவும் அறிந்தேன் உன்னிடம் ...

நன்றி(கள்) டாஸ்மார்க் ......
.....................................................................................................................................

அடடா, தார் சாலை கூட
நிரம்பிய வண்ணம் "புகை வண்டிகள்"
சுற்றுப்புற சீர்கேடு....


(இனி சிந்தனைகள் தொடரும் இந்தத் திரியில்)

நாஞ்சில் த.க.ஜெய்
28-05-2013, 04:41 AM
கருத்துதிக்கும் குறுஞ்சிந்தனைகள் தொடரட்டும்.

arun karthik
01-06-2013, 07:18 AM
விருப்பத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் திரு.நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே ..

arun karthik
03-06-2013, 03:47 AM
நிலவில் ஈர்ப்பு விசை இல்லையாம்....
சொன்னவர்கள் உன்னைக் கண்டதில்லை போலும்....

கீதம்
03-06-2013, 11:56 AM
ஆரம்பமே டாஸ்மார்க்கிலா... அடடா என்று நினைக்கையிலேயே அடுத்து வந்து ஆற்றியது சுற்றுப்புறச் சீர்கேட்டுக்கான அக்கறை.

என்னடா இன்னும் காணோமே என்று நினைக்கையிலேயே தொடர்ந்தது காதல் வெண்ணிலா... பலே!

அவ்வப்போது தோன்றும் குறுஞ்சிந்தனைகள் அனைத்தும் ரசிக்கவைக்கின்றன. தொடருங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
07-06-2013, 02:16 PM
மண்ணில் உலவும் நில வொன்று என்னில் காதல் கண் கொண்டு அதில் சிக்கிவிட்ட நான் இன்னும் ...



தொடரட்டும் சிந்தனை...

arun karthik
29-06-2013, 06:02 PM
கீதம் மற்றும் நாஞ்சில் த.க.ஜெய் பின்னூட்டங்களுக்கு மனமார்ந்த நன்றி....

arun karthik
29-06-2013, 06:03 PM
மறதி
--------

arun karthik
29-06-2013, 06:25 PM
நாணயமாகக் காதல் செய்யுங்கள்,
நா நயமாகவும் காதல் செய்யுங்கள்- ஆனால்
நாணயமாக மட்டும் காதலே செய்யாதீர்கள்....

ஜான்
05-07-2013, 01:43 PM
நிலவில் ஈர்ப்பு விசை இல்லையாம்....
சொன்னவர்கள் உன்னைக் கண்டதில்லை போலும்....

அருமை அருண் கார்த்திக்

rema
14-08-2013, 04:02 AM
நல்ல திரி அருண் !

கும்பகோணத்துப்பிள்ளை
15-08-2013, 01:56 AM
நாணயமாகக் காதல் செய்யுங்கள்,
நா நயமாகவும் காதல் செய்யுங்கள்- ஆனால்
நாணயமாக மட்டும் காதலே செய்யாதீர்கள்....

நா நயமாகவிருக்கிறது
நல்லாவுமிருக்கிறதுந்நா!

arun karthik
19-09-2013, 04:44 PM
வெள்ளை இட்லிக்குள் புதைந்த
கருப்பு மொட்லி..
உன் கண்கள்!!!

arun karthik
19-09-2013, 04:46 PM
ஆறு வழிப்பாதைகள் எல்லாம் ,
ஆறு வழிப்பாதைகளாகி விட்டன...

arun karthik
19-09-2013, 04:47 PM
பிள்ளை மற்றும் rema பாராட்டுக்களுக்கு நன்றிகள்!!!

arun karthik
06-10-2013, 04:11 PM
வயதாகி விட்டது, பிள்ளைக்கு ஒன்றுமே செய்யவில்லையே -
பெற்ற மனம்....
இந்த வயதிலும் கூட, எனக்காக மாடாய்
உழைக்கிறாயே -
பிள்ளை மனம்...

ஆர்.ஈஸ்வரன்
07-10-2013, 02:35 PM
புகை வளையம் தொடர்ந்தால் பூவளையம்.

மும்பை நாதன்
07-10-2013, 04:12 PM
மறதி
--------

தலைப்பு மட்டும் எழுதிவிட்டு கவிதையை எழுத மறந்து விட்டீர்களா ?

மும்பை நாதன்
07-10-2013, 04:15 PM
ஆறு வழிப்பாதைகள் எல்லாம் ,
ஆறு வழிப்பாதைகளாகி விட்டன...

வேறு வழிப்பாதைகளா இல்லை,
கூறு கெட்ட ஜென்மங்கள்.

மும்பை நாதன்
07-10-2013, 04:17 PM
ஆறு வழிப்பாதைகள் எல்லாம் ,
ஆறு வழிப்பாதைகளாகி விட்டன...

வேறு வழிப்பாதைகளா இல்லை,
கூறு கெட்ட ஜென்மங்கள்.

கோபாலன்
07-10-2013, 06:36 PM
நன்றாக இருக்கிறது தொடருங்கள் :)

arun karthik
09-11-2013, 12:28 PM
சுலபமாக மாலையும் மரியாதையும்,
பெற ஒரே வழி,
புகையும் மதுவும் தான்...

மும்பை நாதன்
13-11-2013, 01:45 PM
சுலபமாக மாலையும் மரியாதையும்,
பெற ஒரே வழி,
புகையும் மதுவும் தான்...

கிடைக்கும் மாலையையும் மரியாதையையும் அனுபவிக்க முடியாதே.

ஆர்.ஈஸ்வரன்
01-12-2013, 05:20 AM
நன்று

பாவூர் பாண்டி
05-12-2013, 06:52 PM
மனதில் பாசமும் அன்புமிருந்தும்..
பணத் திறவுகோலன்றி பெறமுடிவதில்லை...

நாகரீக வளர்ச்சியாம்!!!!!

பாவூர் பாண்டி
05-12-2013, 06:55 PM
கிடைக்கும் மாலையையும் மரியாதையையும் அனுபவிக்க முடியாதே.

ஒன்றை இழந்தால்தானே மற்றொன்று கிடைக்கும்....

arun karthik
24-12-2013, 03:38 PM
காகிதம் வாங்கியதும் நான்,
எழுதுகோல் வாங்கியதும் நான்,
சிந்தையை செதுக்கியதும் நான்,
ஆனால் கவிதை மட்டும் நீ!

arun karthik
04-01-2014, 03:28 AM
"நான் வஞ்சித்தேன்" என்கிறாய் நீ!
"நீ வஞ்சித்தேன்" என்கிறேன் நான்!

arun karthik
04-01-2014, 03:29 AM
அங்கங்கு கள் இருப்பதால் தான்,
அவை உன் அங்கங்கள் ஆனதோ...

பாவூர் பாண்டி
04-01-2014, 04:39 AM
கொண்ட கொள்கை தவறா
தவனாகயிருக்க
மணம் வேண்டாமென
யிருக்க அவா!!

arun karthik
04-01-2014, 01:19 PM
(குடி)மகன்கள் கொள்கை:

ஊக்க(மது) கைவிடேல்....

பாவூர் பாண்டி
07-01-2014, 09:43 AM
இந்தக் குடி தான்
அதன் நெடி தான்
தமிழரின் நாசி
வேண்டுவதும் அதைதான் இன்று...

கீதம்
07-01-2014, 09:00 PM
(குடி)மகன்கள் கொள்கை:

ஊக்க(மது) கைவிடேல்....

ஊக்கமது கைவிட்டால் தேக்கமது வாழ்வில்!

ஊக்க மது கைவிடாவிடில் தேகமது சாவில்!

arun karthik
25-01-2014, 05:22 PM
காதல் ஒலி முழங்க
உயிர்த்துடிப்புடன் ,
அவளுக்காக கட்டப்பட்ட வீடு ,
அவனது இருதயக் கூடு..

பாவூர் பாண்டி
27-01-2014, 01:06 AM
வருங் காலமும்
இறந்த காலமும்
சிந்தனைக் குட்படும் போது
நிகழ்காலம் கேள்விக்குள்
தங்கி விடும் ...!

பாவூர் பாண்டி
27-01-2014, 01:07 AM
வருங் காலமும்
இறந்த காலமும்
சிந்தனைக் குட்படும் போது
நிகழ்காலம் கேள்விக்குள்
தங்கி விடும் ...!

பாவூர் பாண்டி
28-01-2014, 01:26 AM
வணிகம் அது
வான் தொட
ஏணியாய் மக்கள் ..!?

பாவூர் பாண்டி
06-02-2014, 04:47 PM
சகல வைபவங்களில்
மகிழ்ச்சியாய் உள்ளவர்கள்
இடையே தூக்கமும்
துக்கமும் கொண்ட
ஓரிரு உயிரினம்
இருக்கத்தான் செய்யும் ..!

arun karthik
02-01-2017, 01:01 PM
சீ !!! சீ !!!
இந்தப் பழம் கைக்கு
எட்டியும் புளிக்கிறது ...
-பழைய திராட்சை