PDA

View Full Version : இயற்கையே போர் தொடுக்காவிடில் நியாயமோ??????



arun karthik
25-05-2013, 12:37 PM
ஆறுகள் ஏரிகள் குளங்கள் அனைத்தும்
அழுதிடும் கண்ணீர் தனை - உயர்
மானுடன் என்னுமோர் மாள்பவனும் அள்ளி
பருகுவதும் நியாயமோ?

காடுகள் மரங்கள் கானகங்கள் தனை
வெட்டி சாலைகளை நெய்து - மரப்
பதாகை தனிலே மரம் வளர்ப்போம் என
புகட்டுவதும் நியாயமோ?

உயிரும் உடலும் உணவும் உதவிய
நிலங்கள் அத்தனையும் - பல
சதைகளாகிய விதைகளுக்காக
சிதைபடுதல் நியாயமோ?

மழை தனை அளித்து காற்றினை
திருப்பும் மலைகள் அத்தனையும் - மேல்
ஞானம் வேண்டும் என ஞானிகளுமே
துளைப்பதுவும் நியாயமோ?

அண்டத்தையும் படைத்தது பிண்டத்தையும்
படைத்த இயற்கை அரும் பொருளே - உன்னை
வாழ விடாமல் வாதிக்கும் மாக்களிடம் போர்
தொடுக்காவிடில் நியாயமோ?

நாஞ்சில் த.க.ஜெய்
28-05-2013, 04:51 AM
பிரதிபலன் பாரா இயற்கையின் சிந்தை என்று மாறுமோ? எனும் சிந்தனை அருமை .இன்று நிகழும் நிகழும் அனல் நிகழ்வினை காணும் போது இயற்கை கூறும் உண்மை புரிகிறது என்றே கூறுவர் ..

arun karthik
01-06-2013, 07:31 AM
நம் முன்னோர் நமக்கு அளித்த இயற்கை செல்வங்களை, நாம் நம் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க வேண்டியது நம் கடமை அல்லவா? புவி எப்படி உருவானது என்பது பற்றி அறிய
மதுரை மற்றும் தேனீ அருகே உள்ள வளமான கடினமான மலைகளை சுமார் 3 கிமீ ஆழம்
குடையப் போகிறார்கள் என அறிந்தேன். உண்மையில் இது நமக்கு நன்மையா இல்லை தீமையா என்று தெரியவில்லை .இருப்பினும் இயற்கை அழிக்கப்படுவதாகவே தோன்றுகிறது .மண்ணில் அளவுக்கு அதிகமான கனிம வளங்களை சுரண்டி விட்டோம். நாம் சாதரணமாக நினைக்கும் தண்ணீர் கூட மூன்றாம் உலக போருக்கு காரணமாக அமையலாம். என்று தான் உணர்வோமோ இந்த உண்மைகளை ..... விருப்பம் மட்டும் பாராட்டுகளுக்கு நன்றி திரு.நாஞ்சில் த.க. ஜெய் மற்றும் கீதம் அவர்களுக்கு....