PDA

View Full Version : ஆதலினால் செய்த காதலிது!கீதம்
21-05-2013, 11:01 AM
வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
நமக்கே உரித்தான நம் காதல்!

சீண்டுவாரற்று சித்தம் சலித்ததோ?
சின்னக்குழந்தை போல் மெல்ல ஊர்ந்து
விளையாடவருகிறது நம்மிடத்தில்!

விரட்டலும் விலக்கலுமின்றி
பாராமுகமாய் ஊடித்திரியும் நம்மிடையே
ஒளிந்துவிளையாடும் காதலுக்கு
ஒருவரிடமும் வரவேற்பில்லை.

நாளெல்லாம் ஒற்றையாய்
ஆடிக்களைத்து அருகமர்ந்த காதலை
போதும் விளையாட்டென்று
வாரியணைத்துக்கொள்கிறேன் வாஞ்சையுடன்!

காத்திருந்தாற்போல் நீயும்....
கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்
காதலோடு என்னையும்!

Nivas.T
21-05-2013, 11:17 AM
ஊடலின் பின்னே
காதல் வலிமை பெரும்
உண்மைக் காதால் இதுவென
உணரும் தருணம்
குழந்தைபோல் கொஞ்சி மகிழ
உலகமே மறந்துபோகும்

கும்பகோணத்துப்பிள்ளை
21-05-2013, 06:07 PM
நந்தனத்திற்கு ஒரு நாள் நன்பரை பார்க்கப்போயிருந்தேன் படிக்கட்டுப்பால்கனியிலிருந்தபடி பராக்குபார்த்திருந்தேன்
அசோகமரத்தின் கிளைகளினுடே மின்சாரக்கம்பிகள் பாய்ந்திருந்தது மஞ்சளொளி படர்த்தும் மின்சார விளக்கின் வெளிச்சத்தில்
கம்பிகளொன்றில் ஒரு காகம் கண்சொருக அமர்ந்திருந்தது
அருகிலொரு காகம் முக்கை சரக் சரக்கென்றே அடிக்கடி திருப்பி அந்த காகத்தை பார்த்துக்கொண்டே தானும் கண்னை முடிக்கொண்டே தூங்கும் பாவனையிலிருந்தது
நிச்சலனமான நேரம்..சில கனங்களிருக்கும் திடீரென முதல் காகம் விலுக்கென்று விழித்தெழுந்து சர்ரென்று எழும்பி பறந்தது கூடவே அருகிலிருந்த காகமும்
சற்றுநேரம் நான் திகைத்திருந்தேன் அந்த சலனத்திற்க்கு காரனம் புரியாமல். சில நிமிடங்கள் பொருத்து திரும்பவும் அந்த இரு காகங்களும் அதே போல் அமர்ந்திருந்தன கமபியில் அருகருகே. அப்போது உணர்ந்து கொண்டேன் காதலென்பது அருகிலிருத்தல்

புரிந்தபின் அருகிலிருந்தால் போதும் காதல் கசிந்துருகி கலந்தலாகி மௌனத்தில் அமர்ந்தே இருவரையும் இறுக்கிக்கொள்ளுமென்பதை நிருபிக்கும் அந்த காகங்களைப்போலே உங்கள் கவிதையும்.

இதயம் கிளரும் வார்ததைகள்.... நன்றி கீதமவர்களே!

நாஞ்சில் த.க.ஜெய்
21-05-2013, 06:36 PM
மோதலுடன் கூடும் ஊடலிநூடே தொடர்ந்ததால் செய்த காதலிதோ !. மோதலுடனான காதல் கொண்ட இருமன பிணைப்பை விவரிக்கும் வரிகள் அருமை .

rema
23-05-2013, 04:18 AM
வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
நமக்கே உரித்தான நம் காதல்!கீதம் அவர்களின் கவிதையும் . பிள்ளையின் பின்னூட்டமும் இதயம் தொட்டன... வாழ்த்துகள் !!

M.Jagadeesan
24-05-2013, 01:00 PM
காதலை, முதலில் யார் தெரிவிப்பது என்பதில் காதலன், காதலிக்கு இடையே ஒரு போராட்டம். ஊடலில் தோற்றவர் வென்றார் என்பது வள்ளுவன் வாக்கு. அதுபோல காதலை முதலில் யார் தெரிவிக்கிறார்களோ அவரே வென்றவர் ஆவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கீதம் தந்த ஒரு நல்ல கவிதை.

விரட்டலும், விலக்கலும் ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள். அதற்குப் பதிலாக

விலக்கலும், சேர்த்தலும் இன்றி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

jayanth
26-05-2013, 05:19 AM
அனுபவித்தது வார்த்தைகளில் வெளியாகி உள்ளது...

தங்கை கீதமின் மற்றொரு முத்திரை...

பென்ஸ்
19-07-2013, 04:45 PM
சில கவிதைகள் அனுபவித்து வாசிக்க படுகின்றன... அதில் தன்னை தினித்து வாசிக்கும் போது கவிதையோடும் காதல் வந்துவிடுகிறது...

காதலை இத்தனை அழகாக ஒரு சிலரால் மட்டுமே ரசிக்க வைக்கமுடியும்...
இங்கு உங்களாலும்...

வாழ்த்துகள் கீதம்..

கீதம்
21-07-2013, 11:37 PM
ஊடலின் பின்னே
காதல் வலிமை பெரும்
உண்மைக் காதால் இதுவென
உணரும் தருணம்
குழந்தைபோல் கொஞ்சி மகிழ
உலகமே மறந்துபோகும்

அழகான கவிப்பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி நிவாஸ்.

கீதம்
21-07-2013, 11:39 PM
நந்தனத்திற்கு ஒரு நாள் நன்பரை பார்க்கப்போயிருந்தேன் படிக்கட்டுப்பால்கனியிலிருந்தபடி பராக்குபார்த்திருந்தேன்
அசோகமரத்தின் கிளைகளினுடே மின்சாரக்கம்பிகள் பாய்ந்திருந்தது மஞ்சளொளி படர்த்தும் மின்சார விளக்கின் வெளிச்சத்தில்
கம்பிகளொன்றில் ஒரு காகம் கண்சொருக அமர்ந்திருந்தது
அருகிலொரு காகம் முக்கை சரக் சரக்கென்றே அடிக்கடி திருப்பி அந்த காகத்தை பார்த்துக்கொண்டே தானும் கண்னை முடிக்கொண்டே தூங்கும் பாவனையிலிருந்தது
நிச்சலனமான நேரம்..சில கனங்களிருக்கும் திடீரென முதல் காகம் விலுக்கென்று விழித்தெழுந்து சர்ரென்று எழும்பி பறந்தது கூடவே அருகிலிருந்த காகமும்
சற்றுநேரம் நான் திகைத்திருந்தேன் அந்த சலனத்திற்க்கு காரனம் புரியாமல். சில நிமிடங்கள் பொருத்து திரும்பவும் அந்த இரு காகங்களும் அதே போல் அமர்ந்திருந்தன கமபியில் அருகருகே. அப்போது உணர்ந்து கொண்டேன் காதலென்பது அருகிலிருத்தல்

புரிந்தபின் அருகிலிருந்தால் போதும் காதல் கசிந்துருகி கலந்தலாகி மௌனத்தில் அமர்ந்தே இருவரையும் இறுக்கிக்கொள்ளுமென்பதை நிருபிக்கும் அந்த காகங்களைப்போலே உங்கள் கவிதையும்.

இதயம் கிளரும் வார்ததைகள்.... நன்றி கீதமவர்களே!

ரசிக்கவைத்தப் பின்னூட்டம். உடல்களை விலக்கி, மனங்களை நெருக்கி உடன்விளையாடும் ஊடல் கலையிதுவல்லவா? நன்றி கும்பகோணத்துப்பிள்ளை.

கீதம்
21-07-2013, 11:40 PM
மோதலுடன் கூடும் ஊடலிநூடே தொடர்ந்ததால் செய்த காதலிதோ !. மோதலுடனான காதல் கொண்ட இருமன பிணைப்பை விவரிக்கும் வரிகள் அருமை .
ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ஜெய்.

கீதம்
21-07-2013, 11:40 PM
கீதம் அவர்களின் கவிதையும் . பிள்ளையின் பின்னூட்டமும் இதயம் தொட்டன... வாழ்த்துகள் !!

ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரேமா.

கீதம்
21-07-2013, 11:45 PM
காதலை, முதலில் யார் தெரிவிப்பது என்பதில் காதலன், காதலிக்கு இடையே ஒரு போராட்டம். ஊடலில் தோற்றவர் வென்றார் என்பது வள்ளுவன் வாக்கு. அதுபோல காதலை முதலில் யார் தெரிவிக்கிறார்களோ அவரே வென்றவர் ஆவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு கீதம் தந்த ஒரு நல்ல கவிதை.

விரட்டலும், விலக்கலும் ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள். அதற்குப் பதிலாக

விலக்கலும், சேர்த்தலும் இன்றி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

வள்ளுவன் வாக்கோடு அழகிய பின்னூட்டமிட்டுப் பாராட்டிய தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

இங்கு விலக்கல் என்பதை 'பொருட்படுத்தாமல் புறக்கணித்தல்' என்ற பொருளில் எழுதினேன். விரட்டுதல் என்பதற்கும் விலக்குதல் என்பதற்கும் இடையிலிருக்கும் சிறுபொருள்வேறுபாட்டை வார்த்தை நயத்துக்காக இங்கே பயன்படுத்திக்கொண்டேன்.

கீதம்
21-07-2013, 11:46 PM
அனுபவித்தது வார்த்தைகளில் வெளியாகி உள்ளது...

தங்கை கீதமின் மற்றொரு முத்திரை...

ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஜெயந்த் அண்ணா.

கீதம்
21-07-2013, 11:48 PM
சில கவிதைகள் அனுபவித்து வாசிக்க படுகின்றன... அதில் தன்னை தினித்து வாசிக்கும் போது கவிதையோடும் காதல் வந்துவிடுகிறது...

காதலை இத்தனை அழகாக ஒரு சிலரால் மட்டுமே ரசிக்க வைக்கமுடியும்...
இங்கு உங்களாலும்...

வாழ்த்துகள் கீதம்..

உங்கள் ரசனையானப் பின்னூட்டத்தால் இன்னும் ரசனைக்குரியதாகிறது கவிதையும் காதலும். வாழ்த்துக்கு நன்றி பென்ஸ் அவர்களே.

lenram80
01-10-2013, 07:20 PM
விளையாடுவது நீயும் நானும்!
உதைபடுவது நாம் கால்பந்து காதல்!

மும்பை நாதன்
02-10-2013, 06:16 AM
காதல் வளர்க்கும் உரம்தானே ஊடல் !
பகிர்வுக்கு நன்றி.