PDA

View Full Version : புத்தி



நாஞ்சில் த.க.ஜெய்
15-05-2013, 07:39 PM
"அம்மா ! நான் பள்ளிகூடம் போயிட்டு வரேன்." என்று கூறிவிட்டு தனது மிதிவண்டியில் கிளம்பினாள் பதினொன்றாவது படிக்கும் எலிசபெத்.


வகுப்பில் சிறந்த மாணவி..இவள் தந்தை ஊரில் பெரிதும் மதிக்கப்படும் மனிதர் . வழியில் இணைந்து கொண்டாள் காயத்ரி இவளும் படிக்கின்ற மாணவிதான் ஆனால் அவள் அளவிற்கு இல்லை, இவள் குடும்பம் ஊரில் பெரிய குடும்பம் அவளுக்கு படிக்க வேண்டிய அவசியம் இல்லை இருப்பினும் கல்வியின் அவசியம் புரிந்ததால் இன்றும் தொடர்கிறாள் ..இவருடைய நட்பும் நன்முறையில் திகழ்கிறது .


"ஏண்டி ! நேத்தைக்கு கணக்கு டீச்சர் போட்ட விட்டுகணக்க முடிச்சிடியா ?" என கேட்டாள் காயத்திரி .


"இன்னும் பண்ணலை , நேத்திக்கு வீட்டுல கொஞ்சம் வேலை இருந்திச்சி,.அதான் பண்ண முடியல" .


"என்னடி ! இப்படி சொல்லுற? , உன்ன பாத்து எழுதலாமுன்னு வந்தேன். "


"அதுக்கென்ன மணி இப்போ 8.20 தான 25 நிமிசத்துல முடிச்சிரலாம் .சரியா ?"


"சரி ..அப்புறம் உன்னை கேக்கனுமுன்னு நெனச்சேன் .நேத்தைக்கு சாயுங்காலம் பள்ளிகூடத்தவிட்டு கிளம்பும் போது மாரியப்பன் என்ன சொன்னான்னு அவன திட்டுன ?"


"பிறகென்ன நேத்தைக்கு ஆங்கில வாத்தியார் வச்ச பரிச்சையில் அவன் பின்னால் இருந்து பேப்பர காட்ட சொன்னான், நான் காட்டல அதுக்கு அவன் கோவத்துல என்ன திட் டுனான் அதுக்கு நான் பதிலுக்கு திட்டுனேன் ."


"சரி பள்ளிக்கூடம் வந்துடிச்சி .அப்புறம் அவன்கிட்ட கொஞ்சம் கவனமா இரு,அவன் வில்லங்கம் புடிச்சவன் .போனவருசம் வரலாறு வாத்தியாரு எதோ கேள்வி கேட்டு திட்டிட்டாரு அத அவன் மனசுல வச்சிக்கிட்டு ராத்திரி அவரோட வீட்டுல போய் அவரு வீட்டு கண்ணாடிய ஓடச்சிட்டான் இது யாருக்கும் தெரியாது என் அண்ணங்கிட்ட சொல்லிருக்கான் .அத இப்போ உங்கிட்ட சொல்லுறேன் .அதில்லாம அவன் அப்பனும் அந்தமாதிரி ஆளு அதான் சொல்லுறேன் புரிஞ்சுதா ?"


"சரிடி "..


வகுப்பறைக்கு சென்றதும் வீட்டு கணக்கை முடிக்கவும் முதல் மணி அடித்து தமிழ் வகுப்பும் துவங்கியது .


"உள்ளே வரலாமா ஐயா ?" என்ற குரல் கேட்டு திரும்பினார் தமிழாசிரியர் .அங்கே மாரியப்பன் நின்றிருந்தான் .


"ஒரு நாளும் சரியான வேளைக்கு வரமாட்டியா ? உனக்கு இன்னைக்கு வருகை கிடையாது ..மீண்டும் இது போல் நடந்தால் உன் அப்பாவை கூட்டி வரவேண்டியிருக்கும்" என்ற படி உள்ளே அமர சொன்னார் ..


தன்னை பார்த்து சிரித்த எலிசபெத்தை வெறித்து பார்த்தபடி தன்னிடத்தில் வந்தமர்ந்தான் ..


அவன் மனதில் " இவளுக்கு எப்ப பாரு என்ன பாத்தா இளக்காரம் போல நேத்திக்கு பரிச்சை பேப்பர் காட்ட சொன்னா காட்டல இன்னைக்கு என்னனா கொஞ்சம் பிந்தி வந்துட்டேன் அதுக்கு சிரிக்கிற சிரிப்பா பாரு இவள இப்படியே விடக்கொடாது .இவளுக்கு ஒரு பாடம் கத்து கொடுக்கணும் அப்பத்தான் மத்தவங்களுக்கும் என்ன பாத்தா ஒரு பயம் வரும் .." என்ன செய்யலாம் என்ற நினைவில் எண்ணவோட்டம் சென்றது ..


சிந்தனை நீண்டது காலம் சுருங்கியது வகுப்பு முடிந்ததது கூட தெரியவில்லை மணி சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தான் ..

தொடரும் ...

கீதம்
16-05-2013, 11:13 PM
ஆரம்பத்திலேயே சிக்கலுடன் தொடரும் கதை... மாரியப்பனின் மனத்தில் எலிசபெத் பற்றிய தவறான கண்ணோட்டம். இதன் விளைவு என்னாகுமோ என்று பயத்தைக் கிளப்புகிறது. மாரியப்பன் மனம் மாறுமா? தொடர்ந்து வந்து பார்க்கிறேன்.

மாணவப் பருவத்தில் எழும் பிரச்சனைகளை மையமாய் வைத்து புனையப்பட்ட கதை என்று நினைக்கிறேன். தொடருங்கள் ஜெய். தொடர்கிறேன்.

Nivas.T
17-05-2013, 05:43 AM
ஜெய் பிரமாதம்,:icon_b:

விஜய்யின் - கனாக்காணும் காலங்கள்:cool:
ஜெய்யின் - புத்தி :cool:

பார்க்கலாம் அடுத்து என்ன?

:sprachlos020:

நாஞ்சில் த.க.ஜெய்
17-05-2013, 05:30 PM
ஆரம்பத்திலேயே சிக்கலுடன் தொடரும் கதை... மாரியப்பனின் மனத்தில் எலிசபெத் பற்றிய தவறான கண்ணோட்டம். இதன் விளைவு என்னாகுமோ என்று பயத்தைக் கிளப்புகிறது. மாரியப்பன் மனம் மாறுமா? தொடர்ந்து வந்து பார்க்கிறேன்.

மாணவப் பருவத்தில் எழும் பிரச்சனைகளை மையமாய் வைத்து புனையப்பட்ட கதை என்று நினைக்கிறேன். தொடருங்கள் ஜெய். தொடர்கிறேன்.

தங்கள் ஊக்கமுடனான பின்னோட்டத்திற்கு நன்றி அக்கா உங்கள் எண்ணம் சரிதான் ஆனால் கதையின் போக்கு கொஞ்சம் மாறுபட்டிருக்கும் ..


ஜெய் பிரமாதம்,:icon_b:

விஜய்யின் - கனாக்காணும் காலங்கள்:cool:
ஜெய்யின் - புத்தி :cool:

பார்க்கலாம் அடுத்து என்ன?

:sprachlos020:

நிவாஸ் நேசமுடனான பின்னூட்டத்திற்கு நன்றி .. உங்க எதிபார்ப்பை நான் பொய்யாக்காமல் இருக்கவே விரும்புகிறேன் ஆனால் நிகழுமா என்று தெரியவில்லை பார்க்காலாம் ..

நாஞ்சில் த.க.ஜெய்
17-05-2013, 06:31 PM
நினைவிலிருந்து அவள் சிரிப்பினை அகற்றமுடியவில்லை ..இரண்டாவது வகுப்பு துவங்கியது கணக்கு பாடம் அப்போது தான் அவனுக்கு உரைத்தது வீட்டுபாடம் செய்யவில்லை என்பது .பக்கத்திலிருந்த மணியை கிசுகிசுப்பான குரலில் கூப்பிட்டான் .

"டேய் ! மணி !"

"என்னடா ! "

"வீட்டு பாடம் செஞ்சிட்டியா !"

"இல்லடா!"

"அப்பா ! தப்பிச்சேன் "

"என்ன நீயும் செய்யலா ? பொறவு எப்படி தப்பிச்சே ?"

"நான் மாட்டுந்தான் மட்டுனேன்னு நினைச்சேன் துணைக்கு நீயும் இருக்கிறல்ல அதான் அப்படி சொன்னேன் .".

"உன்கூட சேர்ந்தா உருப்பட முடியுமா இல்ல உருப்பட விட்டுருவியா ?"

"அங்கே என்ன சத்தம் ?" கணக்கு வாத்தியார் சத்தமிட அமுங்கியது பேச்சு .

"யாரெல்லாம் வீட்டு பாடம் செய்யல ? எழுந்திரிங்க ! "

மாரியப்பன் , மணி அப்புறம் அவனுடைய இன்ன பிற சகாக்கள் எழும்பினர் .

மாரியப்பனை பார்த்தது கடுப்பான வாத்தியார் அவனை பார்த்து

"டேய் நீ மனுசனா ? இல்ல எருமையா ? எவ்வளவு சொன்னாலும் புரியாதா ! என்னைக்காவது ஒழுங்கா வீட்டு பாடம் செய்யுறியா ?"

"ஐயா ! அது வந்து !"

"ஒன்னும் பேசாத ! உன்னையெல்லாம் திருத்தமுடியாது ,இன்னைக்கு பூர வகுப்புக்கு வெளியில நில்லு ! போ !மத்தவங்க எழும்பி நில்லுங்க !" கட்டளையிட்டுவிட்த் திரும்பினார் .

"ஐயா !"

"என்ன நான் சொன்னது காதுல விழல ! போ !"

தலையை தொங்க போட்டு கொண்டு நடந்து வெளியில் சென்று நின்றான் ..கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தான் மணி உட்பட மற்றவர்கள் உள்ளிருக்க
தான் மட்டும் வெளியில் நிற்பது என்னவோ போலிருந்தது .அப்போது வாத்தியார் எலிசபெத்தை நோக்கி பார்க்க அவள் தனது நோட்டினை
காட்டினாள் ..

"நல்ல பெண் ! இப்படித்தான் இருக்க வேண்டும்" ..என்று பாராட்டிவிட்டு அப்படியே திரும்பி "டேய் ! எரும பாரு இவள உன்கூட தான படிக்கிறா !
அவளுக்கு இருக்கிற அக்கறை கொஞ்சமாவது இருக்கா !."என்று மாரியப்பனை நோக்கி சொன்னார் .

அவன் குனிந்த தலை நிமிராது மனதில் கருவி கொண்டான் "வேற யாரையாச்சும் கூட ஒப்புமை பாராட்டி சொன்னா கூட மனசு ஆறிடும் இவளை
காட்டி கடுபெத்துரானே இந்த வாத்தி" என்று திட்டியவாறே அவளை வெறித்து பார்த்தான் ..

அவன் கண்கள் கலங்கி அதன் சிவப்பேறிய பார்வையில் தெரிந்த வன்மத்தை பார்த்த எலிசபெத் ஒரு நிமிடம் பயந்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும் ..

அப்போது நினைத்து கொண்டாள் "இவனிடம் அதிகம் வைத்து கொள்ளவேண்டாம்" என்று

இவள் மனதில் உள்ளது அவனுக்கு தெரியுமா ? அவனோ வெறுப்பில் வெந்து கொண்டிருந்தான் என்ன செய் அவன் மனதில் பதிந்து விட்ட நச்சு ஆலமரமாக வளர்ந்தது விட்டதை இவள் அறிவாளா ?


தொடரும் ...

கீதம்
17-05-2013, 11:19 PM
மாணவர்களிடையே எழும் வன்மத்துக்கு சில ஆசிரியர்களின் போக்கும் காரணமாகிவிடுகிறது. பலர் முன்னிலையில் ஒரு மாணவனையோ மாணவியையோ பிற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் திட்டுவதும், பரிகசிப்பதும், குடும்பப் பின்னணியைப் பற்றி இழித்துரைப்பதுமாக பல தவறான செய்கைகளை சில ஆசிரியர்கள் தொடர்வது மாணவர்களின் மனத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாழ்வுமனப்பான்மை அல்லது பழிவாங்குதல் போன்ற எண்ணங்களை விதைத்துவிடுகின்றன. கதைப்போக்கிலேயே அது போன்ற ஒரு ஆசிரியரைக் காட்டியுள்ளீர்கள். சமீபத்தில் பல பள்ளிகளில் நடைபெற்ற பல விரும்பத்தகாத சம்பவங்கள் நினைவுக்கு வந்து உறுத்துகின்றன. தொடர்வதை சற்றே கவலையுடன் பார்த்திருக்கிறேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
20-05-2013, 03:51 AM
மாணவர்களிடையே எழும் வன்மத்துக்கு சில ஆசிரியர்களின் போக்கும் காரணமாகிவிடுகிறது. பலர் முன்னிலையில் ஒரு மாணவனையோ மாணவியையோ பிற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் திட்டுவதும், பரிகசிப்பதும், குடும்பப் பின்னணியைப் பற்றி இழித்துரைப்பதுமாக பல தவறான செய்கைகளை சில ஆசிரியர்கள் தொடர்வது மாணவர்களின் மனத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாழ்வுமனப்பான்மை அல்லது பழிவாங்குதல் போன்ற எண்ணங்களை விதைத்துவிடுகின்றன. கதைப்போக்கிலேயே அது போன்ற ஒரு ஆசிரியரைக் காட்டியுள்ளீர்கள். சமீபத்தில் பல பள்ளிகளில் நடைபெற்ற பல விரும்பத்தகாத சம்பவங்கள் நினைவுக்கு வந்து உறுத்துகின்றன. தொடர்வதை சற்றே கவலையுடன் பார்த்திருக்கிறேன்.

உண்மைதான் ! இன்றைய குழந்தைகள் இது போன்ற திட்டுகளை ஏற்றுகொள்ள முடியாது இருவகையான முடிவுகள் எடுக்கின்றனர் ஒன்று நான் கூறியது போல் தொடர்புடையவர் மீது சாடுவது மற்றொன்று தன்னை காயபடுத்தி கொள்வது .ஆசிரியர் ஏன் திட்டுகிறார் என்று உணரும் பக்குவத்தை இழந்துவிட்டனர் அவர்களுக்கு ஏற்றாற்போல் இன்று ஆசிரியரும் மாறிகொள்வது அவசியம் ..தொடரும் பின்னூட்டதிற்கு நன்றி அக்கா !

நாஞ்சில் த.க.ஜெய்
20-05-2013, 01:47 PM
பின்னர் அனைத்து வகுப்புகளும் ஒருவாறு முடிய அவனும் தனதிடம் வந்து தனது புத்தகபையினை எடுத்துவிட்டு கிளம்பினான் ..வெளியில் வரும்போது தகவல் பலகையில் அருகே கூட்டமாய் பலர் நிற்க அவனும் என்னவென்று காண அங்கே சென்றான் .

இவனுக்கு முன்னர் அவள் நிற்க அதனை கண்டவன் அங்கேயே நின்றான் பின் முன் சென்று பார்க்காமல் அருகிலிருந்த மணியினை கூப்பிட்டான் ..

"டேய் ! மணி 1"

"என்னடா!"

"அங்கே என்ன போட்டிருக்குன்னு இருந்து பாத்துக்கிட்டிருக்கே ?

அடுத்த வாரம் நம்ம பள்ளிகூட ஆண்டு விழா அதுல கலந்துக்கிறவங்க பேர் கொடுக்கலாமுன்னு போட்டிருக்கு ?"

அப்படியா ! சரி போலாம் என்று கூறிவிட்டு திரும்ப அப்போது எதிர்பாரதவிதமாக அவனது முழங்கை எலிசபெத் மீது இடித்தது இடிபட்டவள் உடனே "அறிவில்ல ! பார்த்து வரமாட்டியா!" என்றாள் .

அவன் மனதில் எல்லோரும் தன்னை பார்த்து சிரிப்பது போல் ஒருபிரமை இதனை மேலும் வளர்க்க விரும்பாமல் "தெரியாம இடிச்சிடுச்சு !" என்று கூறிவிட்டு விடுவிடுவென கிளம்பினான் .

பள்ளிகூடத்திலிருந்து வெளியில் வந்தவன் தனது மிதிவண்டியை எடுத்து மிதிக்க துவங்கினான் .பள்ளியினை தாண்டி கொஞ்ச தூரம் வந்ததும் ஒரு விநாயகர் கோயில் உண்டு அந்த கோவிலிலிருந்து இடது பக்கமாக திரும்பினால் அவனது வீடு நோக்கி செல்லவேண்டும் வலது பக்கமாகத்தான் எலிசபெத் தனது வீடு நோக்கி செல்ல வேண்டும் ,கோவில் அருகே வந்ததும் அவனுக்குள் ஒரு சிந்தனை அவள் வரட்டும் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனும் முடிவோடு இருந்தான் ..

அப்போது அங்கு தனியாக வந்த எலிசபெத்தின் வண்டியினை மறித்தான் மிரண்டு போய் வண்டியினை நிறுத்தினாள் .

நிறுத்தியதுதான் தாமதம் வார்த்தை ஏதும் பேசும் முன் கன்னத்தில் தனது கையினால் ஓர் அறை விட்டான் பின்னர் "மவளே ! இனி என்கிட்ட வச்சிகிட்ட ! "அவள் மீது தனது எச்சிலை காரி உமிழ்ந்தான் .பின்னர் தனது வண்டியினை எடுத்து தனது வீட்ற்கு கிளம்பினான் .அவனுக்கு எதையோ சாதித்து விட்ட திருப்தி ..

அடிவாங்கிய எலிசபெத் தனது கன்னத்தில் கைவைத்து தடவியவாறு கண்களில் துளிர்த்த கண்ணீருடன் குளிரில் நடுங்கிய கோழிக்குஞ்சு போல் தனது வண்டியினை உருட்டி கொண்டு வீடு நோக்கி சென்றாள் ..

வீடு நெருங்கும் பொது அங்கு வந்தார் டேவிட் சாம்ராஜ் எலிசபெத்தின் சித்தப்பா . " மக்ளே ! எப்படி இருக்கே ? " என்று கூறியவாறு அவள் அருகில் சென்றார் .

அப்போதுதான் அவள் கண் கலந்கியிருப்பதையிம் கன்னத்தில் கைவிரல் பதித்திருப்பதையும் கண்டார் ஓரளவு ஊக்கித்தவாறு அவள் தோளில் கைவைத்து " என்னாச்சு மக்ளே ! யாரு அடிச்சது ?

கேட்டதும் அவள் ஓ வென மேலும் அழுதவாறு நடந்ததை கூறினாள் .அதை கேட்டவர் கோபம் தலைகேறியவாறு "யாரு அந்த வேலப்பன் மகனா ?

ஆமாம் !

உடனே தனது வண்டியினை எடுத்து அவனை தேடி சென்றார் .அவர் நல்ல நேரமோ !எஅல்லது மாரியப்பனின் கெட்டநேரமோ அவர் தேடி சென்றவர் வழியில் கடைதெருவில் நிற்க கண்டவர் .

அவன் முதுகில் ஓங்கி ஒரு மிதி கொடுத்து "பொட்ட பிள்ளை மீது கைவைக்கிற ! --- நாயே!" என்று அவனது சாதி பெயரை சொல்லி தனது ஆத்திரம் தீரும் வரை கண்முன் தெரியாமல் விளாரி விட மாரியப்பன் கிடத்தட்ட மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டான் உடனே அருகில் இருந்த கடைகாரர் டேவிடை தடுத்து பிடித்தார் ..முகத்தில் ரத்தம் வருவதை கண்டவர் தனது ஆத்திரம் ஓரளவு மட்டுபட்டவராய் அவனை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பினார் .

கடைகாரர் உடனே அவனுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து நினைவினை தெளிவித்தார் .மெதுவாக விழித்தவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அவனை வீட்டில் கொண்டு விட்டார் .

அங்கே வெளியில் வேப்பமரத்தோரம் புகைபிடித்து கொண்டிருந்த அவனது தந்தை அதிர்ந்து போய் அடிபட்டவனை பார்த்தார். பின்னர் ஓடி வந்து அவனை தூக்கி வீட்டில் படுக்க வைத்து மனைவியிடம் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு வெளியில் வந்து கடைகாரரிடம் விபரம் கேட்டறிந்தார் .

கேட்டவர் கண்ணில் கோபம் கொப்பளித்தது இவன் அடிவாங்க இன்னகாரணம் ! எனும் சிந்தனை எழவில்லை .மாறாக தனது மகனை அடித்துவிட்டான் எனும் கோபம் அவரை சிந்தனை செய்யவிடாமல் அவனை என்ன செயலாம் என வில்லங்கமாக சிந்தனை செய்தது .

உடனே தனது சுற்றுவட்டாரத்தில் இருந்த தனக்கு வேண்டியவர்களை அழைத்தான் அவர்களிடம் சாதி பெயரை சொல்லி தனது மகனை அடித்ததை சொன்னான் .அவர்களுக்குள் இருந்த சாதிபற்று விழித்தெழ அங்கே கிளர்ந்தெழுந்தது சாதிய தீ ...

தொடரும் .....

நாஞ்சில் த.க.ஜெய்
21-05-2013, 06:28 PM
உண்மையினை உணராது வேண்டியவன் கூறிய வார்த்தையில் அறிவிழந்து முன்னரே இருந்த வன்மத்தின் துணை கொண்டு எரிந்தது அவ்விடம் ..

டேவிட் இருந்த தெருவினை நோக்கி சென்ற கூட்டம். அங்கு முன்னரே விஷயம் அறிந்த டேவிட் தனதிடம் விட்டு புகலிடம் தேடி அண்ணன் லியோ சாம்ராஜ் இருக்குமிடம் சென்றுவிட போட்டியிருந்த வீட்டினை அடித்து உடைத்ததோடில்லாமல் அருகில் இருந்தோர் வீட்டினையும் அடித்துடைக்க விபரமறியாது அவ்வீட்டிலிருந்தவன் கோபம் கொண்டு வெளியில் வந்து

"என்னடா வேணும் உங்களுக்கு? " என கேட்க


டேவிட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்தவர்கள் அவனை கொடூரமாக தாக்க காயம் பட்டு மயங்கினான் .இதனை கண்ட அருகிலிருந்தால் கையில் கிடைத்த ஆயுதத்தினை கொண்டு அக்கூட்டத்தினரை தாக்க காயம் பட்டோர் எண்ணிக்கை கூடியது .
இதனை கண்ட வேலப்பன் கூட்டத்தினர் பயத்தில் சிதறி ஓடினர் இதில் வேலப்பன் ஆழமான வெட்டு .காயம் பட்ட கையுடன் ஓடினான் ..


தனது தம்பியின் செயலை கடிந்து கொண்டார் லியோ சாம்ராஜ்.


ஏன்டா ! அவங்க சின்ன பிள்ளைங்க ! அந்த பையனை கூப்பிட்டு பதமா சொல்லுவியா ! அத வுட்டுட்டு இப்படி பண்ணியிருக்க !


என்னண்ணா ! இப்படி சொல்லுற வீட்டுக்கு ஒத்த்புள்ள அவள அடிச்சா சும்மா விட சொல்லுறியா!


" டேய் !இரண்டு பேருக்கு பிரச்சனைன்னா பாதிக்கப்பட்ட இரண்டு பெரும் பேசி தீர்க்கணும் !இப்படி வந்தா என்ன செய்ய ! " என்றவாறு அவனை பார்த்து தீர்க்கமாய் நோக்கி "உன்ன எப்படியும் காவல்ல தேடிவருவாங்க ! அவங்கள நான் எப்படியும் சமாச்சிடுறேன் ! நீ கொஞ்ச நாள் வெளியூர்ல தங்கியிரு "


"சரி ! " என்றவாறு கிளம்பினான் ..


இதற்கிடையில் யாவரோ காவல் துறையினருக்கு அழைப்பு விடுக்க அங்கே அரைமணி நேரத்தில் வந்திறங்கிய காவல்துறையினர் அங்கே பலத்த பாதுகாப்பினை ஏற்படுத்தினர் ..


இதற்கிடையில் தாம் தப்பிக்க காயம்பட்டோர் தனக்கு ஏற்பட்ட காயத்தினுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர் பின்னர் அரசு மருத்துவமனையில் சென்று படுத்து கொண்டனர் . அங்கே பலத்த காவல் போடப்பட்டது


கலவரம் நடந்த இடம் போர்களம் போலிருக்க காவல் துறையினர் மேற்கொண்டு ஏதும் நிகழாதிருக்க பலத்த பாதுகாப்புடன் நின்றிருந்தனர் ..

அப்போது காவல்துறை வண்டியொன்றில் வந்திறங்கினார் காவல்துறை ஆய்வாளர் முத்தமிழ் ..அவ்விடத்தினை பார்த்தவர் அருகிலிருந்த துணை ஆய்வாளர் சேதுவிடம் விபரம்கேட்டார் ..


"யோவ் சேது ! இங்க வாய்யா !"


"ஐயா !"


"என்னய்யா நடந்தது !"


"ஐயா ! இந்த கலவரம் தொடர்பா இங்க இருக்கிறவங்க கிட்ட விசாரிச்சேன் . அதுல பையனுக்கும் ஒரு பொண்ணுக்கும் ஏற்பட்ட பள்ளிகூட பிரச்சனையை தான் காரணமுன்னு தகவல் கிடைச்சது !"


"எத வச்சி நீ இந்த முடிவுக்கு வந்த !"


"ஐயா ! இந்த கலவரத்துல அடிபட்ட பலரை முதலில் மருத்துவமனையில் சென்று விசாரிச்சேன். அவங்களில் பலருக்கு காரணம் தெரியல இறுதியாய் அவங்க சொன்ன வார்த்தையை வைத்து முடிவில் வேலப்பன் என்கிற ஒருத்தனை விசாரிச்சேன், "

"அப்புறம்!"

"இவனோட பையனைத்தான் டேவிட் அடிச்சிருக்கார் .அடிச்சவர் தனது சாதி பேரை சொல்லி அடிச்சதாலதான் இவ்வளவும் நடந்திருக்குன்னு சொன்னார் .அவனுக்கு ரெண்டு போலிசார காவல் போட்டிருக்கேன் ."

"சரி!"

"அப்புறம் இத உணமையான்னு பலபேர விசாரிச்சேன் , அதுல விநாயகர் கோயில் சந்திப்புல உள்ள கடைகாரர் கொடுத்த தகவல் படி இந்த விபரத்த சேகரிச்சேன் .அப்புறம் அவர் சொன்னபடி அந்த பையனையும் விசாரிச்சேன் அவனும் இது தான் காரணம் என்பதையும் சொன்னான் . "

"ம்ம்!"

"அந்த பையன் சொன்ன மாதிரி அவனை அடிச்ச டேவிட் சாம்ராஜ் வீட்டுக்கு போனேன் அங்கே வீடு பூட்டிருந்தது .பக்கத்துல அவரு அவரோட அண்ணன் லியோ சாம்ராஜ் வீடு இங்கே பக்கத்து தெருவில் தான் இருக்குதான் அங்க போயிருக்கிறதா சொன்னாங்க !"

"மேல சொல்லு ! என்ன செய்யலாம் !"

"பையன் பக்கத்திலிருந்து விசாரிச்சிட்டேன் இனி பொண்ணு பக்கத்திலிருந்து விசாரிக்கணும் இப்போ அந்த பொண்ணு வீட்டுக்கு விசாரிக்கிறதுக்காக கிளம்பினேன் .நீங்க கொஞ்ச நேரத்துல வந்துருவீங்கங்கிறதால நான் காத்திட்டிருந்தேன் ."

"சரி! எலிசபெத் அப்பா பேரு என்ன ?"


"லியோ சாம்ராஜ் ஐயா !"


"சரிய்யா ! வேல பாத்துருக்க ! உன்னால பாதிவேல முடிஞ்ச மாதிரியாயிடிச்சு !"

"நன்றிங்கையா !"


"சரி வா ! அவங்க வீட்டுக்கு போகலாம் !"


சேது காவல்வாகனவோட்டியை அழைக்க எலிசபெத் வீடு நோக்கி சென்றது வாகனம் .

தெருவில் ஆங்கே தென்பட்ட ஒருவரை நிறுத்தி அழைத்தார் சேது .


"யோவ் ! இங்க வா !"

"ஐயா ! "


"இங்க லியோ சாம்ராஜ் வீடு எங்கிருக்கு !"


"இதோ நேர போல் தெக்கு பக்கம் திரும்புன இருக்குற பச்சைகலர் காரை வீடு ஐயா !"


"சரி நீ போ !"


நேராக அவன் கூறியபடி சென்ற வாந்தி லியோ சாம்ராஜ் வீட்டின் முன் நின்றது .


முன்னரே இது போல் வருவர் என காத்திருந்த லியோ சாம்ராஜ் தனது வீடிற்கு வந்த முத்தமிழை வரவேற்றார்


"நான் எதுக்கு வந்திருக்கேன்னு உங்களுக்கு தெரியும் !" என்றபடி பேச்சை துவங்கினார் முத்தமிழ் .


"நான் என்ன செய்யனும் ஐயா !


"உங்க பொண்ண கூப்பிடுங்க இந்த குற்றம் தொடர்பா விசாரிக்கணும் .."


"எலிசபெத் ! இங்க வாம்மா !"


அழுது வீங்கிய கண்களுடன் கைவிரல் பதிந்த கன்னத்துடன் அவர் முன் வந்து நின்றாள் .


அவளை ஒரு பார்வை பார்த்தவர் அவளிடம்


"கன்னத்துல அடிபட்டுருக்கே அது யாரு அடிச்சது !"


சிறிது தயக்கத்துடன் தந்தை அருகிலிருக்கும் தைரியத்துடன் மெதுவாக திக்கி பேச துவங்கினாள் .சுமார் 20 நிமிடங்கள் செலவழித்து நடந்த சம்பவங்களை கோர்வையாக பேசி முடித்தாள் .


அதனை குறித்து கொண்டார் சேது ..


முத்தமிழ் ,லியோ சாம்ராஜை நோக்கி "உங்க தம்பி டேவிட் இங்க இருக்கிறாரா ? "


"இங்க இல்லை ஐயா !"


"யோவ் ! சேது உள்ளபோய் பாருய்யா !"


உள்ளே இரு காவலருடன் டேவிட்டை தேடி சென்றவர் சிறிது நேரம் கழித்து


"உள்ள முழுக்க தேடி பார்த்தேன் ,அவன் இல்லை ஐயா!"


"சரி !" லியோ சாம்ராஜை நோக்கி "அவர் வந்தால் நீங்க தகவல் தெரிவிங்க ! நீங்களும் இப்போ விசாரணைக்கு வாங்க !" என்று கூறி விட்டு அவரையும் அழைத்து வண்டியில் காவல நிலையம் கிளம்பினார் .


காவல் நிலையம் வந்ததும் அங்கு காவலில் காயம் பட்டவர்களுடன் இருந்த வேலப்பன் அவர் மகன் மற்றும் லியோ சாம்ராஜ் ,என இரு தரப்பினரை அழைத்து பேச துவங்கும் போது வாசலை எதேச்சையாக பார்க்க அங்கே இரு காவலர்களுடன் டேவிட் வந்து கொண்டிருந்தார் .


அந்த காவலரை நோக்கி " யாருய்யா இது ! " என்க


அப்போது சேது குனிந்து " ஐயா ! இவன் தான் டேவிட் !"


"அப்படியா !" என்று மேவாயை தடவியபடி லியோ சாம்ராஜ் உடன் அமர சொன்னார் .


பின் காவலரை நோக்கி "இவனை எப்படி பிடிச்சிங்க!"


" பாதுகாப்பு போட்டிருந்த இடத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி ஒரு சந்து வழியா நாங்க ரோந்து செல்லும் பொது எங்கேயோ இவர் தனது வண்டியில் போய்கிட்டிருந்தார் .எங்களுக்கு சந்தேகம் வந்தது நிறுத்தி விசாரிச்சோம் .முன்னுக்கு பின் முரணா பேசினார் .அதான் காவல் நிலையதிற்கு கூட்டிக்கிட்டு வந்தோம் ஐயா !"


"சரி நீங்க போய் உங்க வேலைய பாருங்க ! "என்று கூறிவிட்டு அவர்களை நோக்கி திரும்பினார்
.
"யோவ் ! நீங்களெல்லாம் மனுசனுவளா ! இல்ல மிருகங்களா ! அதுங்க தான் இப்படி அடிச்சிகிடுதுங்கன்ன நீங்களும் ஏன்யா அடிச்சிக்கிடு சாவுறீங்க !"


"ரெண்டு சின்ன பசங்க இடையில பிரச்சனை சும்மா வகுப்புல நடந்த பிரச்சனை அது அந்த வாத்தியருங்கக்கிட்ட சொன்னா இன்னைக்கோ நாளைக்கோ தீர்ந்துடும் ஆனா நீங்க பண்ணியிருக்க வேலை அப்படியா !என்னைக்கும் ஆறாது வடுவாத்தான் இருக்கும் இதை இப்படியே விட்டால் சரிவராது ." என்றபடி


"யோவ் சேது !"


"ஐயா !"


"பையன் மைனர் அதனால் அவனை ஒழுங்கா வளர்க்காம காலித்தனமா சுத்தவிட்டு இப்படி சாதி பிரச்னையை எழுப்பி கலவரத்த தூண்டின வேலப்பன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் எனும் பிரிவின் கீழ் குற்றபத்திரிக்கை பதிவு செய் !"


"மற்றவங்க மீது அதற்க்கு துணை போனதா சொல்லி ரெண்டு பிரிவு மேலயும் வழக்கு பதிவு செய் !"


"ஐயா ! "என்றார் லியோ சாம்ராஜ்


"என்ன ! "


"அவங்க வந்து எங்க இடத்துடல அத்துமீறி நுழைந்தததோல்லாமல் எங்க உடைமைகளை தாக்கினாங்க அதனால் பதிலுக்கு தாக்கினோம் .இது எப்படி நாங்க அவங்க கூட சேர்ந்து இந்த தவற செஞ்சதா ஆகும் ."


"நல்ல கேள்வி ! இது மாதிரியான நேரங்களில் நாங்க எதுக்கு இருக்கோம் எங்களை கூப்பிடலாம் அத விட்டுட்டு சட்டத்தை கையில் எடுத்தாஎப்படி ?"


"உங்களை கூப்பிட்டு நீங்க வரதுக்குள்ள அடிபட்டவன் உயிர் போயிடுச்சின்னா யாரு பொறுப்பு ? நீங்க எத்துகிடுவீங்களா ?"


அமைதியாக இருந்தார் முத்தமிழ் .


"சரி ! யாரெல்லாம் லியோ சாம்ராஜ் தரப்பின் மீது வழக்கு கொடுத்துள்ளான்களோ அவங்களை தவிர மத்தவங்கள விட்டுடு ! " என்று கூறிவிட்டு

லியோ சாம்ராஜை நோக்கி "கோபபடாது சட்டத்தினை கையிலெடுக்காது எங்களை அழைத்தால் இது போன்று இழப்புகள் ஏற்படுவது நிகழா ! இழப்பிற்கான ஈட்டினையும் வாங்கி தருவோம் !அதை விடுத்து வெட்டுக்கு வெட்டு குத்துக்கு குத்து என்று இறங்கினால் இது போன்று வழக்குகளை தவிர்க்கவியலாது .."


"அப்புறம் ஒரு மைனர் சிறுவனை காயம் வரும் அளவில் அடித்ததற்காக டேவிட் மீது கொலை முயற்சி எனும் வகையில் வழக்கினை போடு .இறுதியா அந்த பெண் எலிசபெத்தை அடித்த மாரியப்பனிடம் இனிமேல் இது போன்ற தவறினை செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கி கண்டிச்சி விட்டுடுங்க .இனிமேல் அவன் இந்த மாதிரி செஞ்சா அவன் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் தான் இருக்கணும் என்போதை அழுத்தி சொல்லிடுங்க .."


இப்போ வழக்கு பதிஞ்சவங்களை தவிர மத்தவங்களை அனுப்பிடுங்க !என்று கூறிவிட்டு வெளியில் கிளம்பினார் .


இப்போது ஒரு பயம் அவனையும் அவனை சார்ந்தவர்களையும் தொடர்கிறது ,இனி அவன் மாரியப்பன் திருந்தாவிட்டாலும் ஓரளவு அடக்கியே வாசிப்பான் என நம்பலாம் ..

மறுநாள் அமைதியில் விடிந்தது பொழுது ..


அம்மா ! நான் பள்ளிக்கூடம் போயிட்டு வரேன் ! என்று கூறிவிட்டு கிளம்பினாள் எலிசபெத் .


முற்றும் ..

கீதம்
23-05-2013, 01:40 PM
மாணவர்களுக்குள் எழும் சாதாரணப் பிரச்சனை கூட ஒரு சாதிக்கலவரமாய் மாறக்கூடிய அபாயமிருப்பதை ஒரு சிறிய கதை மூலம் விளக்கியமை மிகவும் நன்று. ஒரு பழமொழி சொல்வார்கள்... குட்டி குரைத்து நாய் தலையில் வைத்த மாதிரி என்று... குட்டி சும்மா இல்லாமல் குரைக்க.. அது தாய் நாய்க்குப் பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என்ற பொருளில். அதுபோல்தான் இங்கே இரு மாணவர்களுக்குள் எழுந்த மனக்கசப்பு என்னும் சிறு பொறி.. பொறுப்பற்ற ஆசிரியரால் தூபமிடப்பட்டு, அவசரப்புத்தி கொண்ட சித்தப்பாவால் ஊருக்குள் பற்றவைக்கப்பட்டு சா'தீ' விபத்தாய் மாறி ஊரே பற்றியெரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. நல்லவேளையாக.. அதிசயத்திலும் அதிசயமாக... காவல்துறை ஆய்வாளர் விவேகத்துடன் பிரச்சனையை அணுகி அப்போதைக்கு மிகாமல் முடித்துவைக்கிறார். தீ அடங்கியது என்றாலும் உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கதையை எளிமையாகவும் சீராகவும் களம் விட்டு விலகாமலும் கொண்டுசென்று முடித்தவிதம் பாராட்டுக்குரியது. மனமார்ந்த பாராட்டுகள் ஜெய். தொடர்ந்து எழுதுங்கள்.

முரளி
26-05-2013, 03:28 AM
உண்மையினை உணராது வேண்டியவன் கூறிய வார்த்தையில் அறிவிழந்து முன்னரே இருந்த வன்மத்தின் துணை கொண்டு எரிந்தது அவ்விடம் ... கவிதை நடை.



கதை எளிமை. பிரமாதம். வாழ்த்துக்கள் ஜெய்.

நாஞ்சில் த.க.ஜெய்
28-05-2013, 05:01 AM
மாணவர்களுக்குள் எழும் சாதாரணப் பிரச்சனை கூட ஒரு சாதிக்கலவரமாய் மாறக்கூடிய அபாயமிருப்பதை ஒரு சிறிய கதை மூலம் விளக்கியமை மிகவும் நன்று. ஒரு பழமொழி சொல்வார்கள்... குட்டி குரைத்து நாய் தலையில் வைத்த மாதிரி என்று... குட்டி சும்மா இல்லாமல் குரைக்க.. அது தாய் நாய்க்குப் பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என்ற பொருளில். அதுபோல்தான் இங்கே இரு மாணவர்களுக்குள் எழுந்த மனக்கசப்பு என்னும் சிறு பொறி.. பொறுப்பற்ற ஆசிரியரால் தூபமிடப்பட்டு, அவசரப்புத்தி கொண்ட சித்தப்பாவால் ஊருக்குள் பற்றவைக்கப்பட்டு சா'தீ' விபத்தாய் மாறி ஊரே பற்றியெரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. நல்லவேளையாக.. அதிசயத்திலும் அதிசயமாக... காவல்துறை ஆய்வாளர் விவேகத்துடன் பிரச்சனையை அணுகி அப்போதைக்கு மிகாமல் முடித்துவைக்கிறார். தீ அடங்கியது என்றாலும் உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கதையை எளிமையாகவும் சீராகவும் களம் விட்டு விலகாமலும் கொண்டுசென்று முடித்தவிதம் பாராட்டுக்குரியது. மனமார்ந்த பாராட்டுகள் ஜெய். தொடர்ந்து எழுதுங்கள்.

இது நண்பர் ஒருவர் கூற கேட்டு வேறு வடிவில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு .ஆனால் இன்றும் அந்த சாதீய பிரச்சனையை தாங்கள் கூறுவது போல் நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது ...பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா .


. கவிதை நடை.



கதை எளிமை. பிரமாதம். வாழ்த்துக்கள் ஜெய்.

தங்கள் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி முரளி அவர்களே !.


ரமணி அவர்களின் விருப்ப தேர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..

மும்பை நாதன்
25-08-2013, 08:19 AM
நல்ல கதை. பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்