PDA

View Full Version : உலக நாயகன் அவர்களுக்கு அவர் ரசிகர்களில் ஒருவன்



Vinoth Kumar
15-05-2013, 11:05 AM
மதிப்பிற்குரிய கலை ஆசிரியர்க்கு
'ழ' சிறப்பின் மொழியின் முதல் எழுத்து உனது (உங்களது),
ஆதி மூலத்தில் மஹா நடிகன் யாரோ ?யாரறிவாரோ ?
தில்லையில் நடனமாடும் அவனிடதும் பதில் இல்லை !
இந்த மெய் முதல் எழுத்தின் அறிவு பெற்ற மகான்-
பயிர் போல் அல்லாமல் ஆலமர விதையின் குணம் .
பிள்ளையின் குணம் கண்டு ஆதி நாதனும் அவன் பின்னே -
பதில் முடிவில் தெரியும் .
ஐப்பசியின் பசியை போக்க பிறத்தவர் எத்தனை?
என் தமிழே நீ உன்னை புதுபிக்க காலம் வந்ததோ ?
இல்லை நீ இளமையுடன் இன்னொரு பிறவி கொள்வாயோ ?
பிள்ளையின் குணம் கண்டு ஆதி நாதனும் அவன் பின்னே -
காரணம் -அவனும் நாத்திகனானாம் .
ஆம் ,பிள்ளை சொல்லவதே சரியென தலை அசைத்தான்
இறைவன் - அவனும் இனி நாத்திகனே .அந்த கலைஞனை போல் .
வார்த்தைகளின் வர்ணம் முதல் எழுத்துகளிலே தென்படுவது போல ...என்ன என்றா ? -கர்ணன் ,கண்ணதாசன் ,கம்பன்
கனவு ,கவிதை ,கதை ,கடவுள் ,கம்பீரம் ,கண் ,கலை -அட கமல்




தொண்டை வேல் முருகன்