PDA

View Full Version : அம்மாவின் தினம்! தினம்..தினம் அம்மா!



கும்பகோணத்துப்பிள்ளை
12-05-2013, 04:44 PM
அம்மா!

தினம் தினம் நீ ஊட்டிய
உணவென்றும் என் உடல்தாங்கும்!

கருவிலே தாங்கி உயிர்கொடுத்த
உன் உதிரமென்றும் என் உயிர்தாங்கும்!

உறவிலே நீ ஊட்டிய
உணர்வென்றும் என் சென்மங்கள் தாங்கும்!

இன்றுமட்டுமல்ல என்றுமே என் தினங்ஙள்
தினம் தினம் உன்னாலேயே!

govindh
12-05-2013, 11:09 PM
அம்மாவின் தினம்!
அருமை.... அழகு...!

M.Jagadeesan
13-05-2013, 01:20 AM
" அன்னையர் தினம் " என்பதே பொருத்தமாக இருக்கும். " அம்மாவின் தினம் " என்றால் இன்றைய சூழலில் அது வேறு யாரையோ குறிப்பதாக அமையும்.

பெற்ற அன்னையைப் பெருமைப் படுத்திய பிள்ளை அவர்களின் அழகானக் கவிதைக்குப் பாராட்டுக்கள்.

இந்த சமயத்தில் பட்டினத்தார் , தன் அன்னை இறந்தபோது பாடிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலைத் தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

கும்பகோணத்துப்பிள்ளை
13-05-2013, 01:50 AM
கோவிந் அவர்களுக்கும் ஜெகதீசன் ஜயாவிற்கும் எனது நன்றி!


" அன்னையர் தினம் " என்பதே பொருத்தமாக இருக்கும். " அம்மாவின் தினம் " என்றால் இன்றைய சூழலில் அது வேறு யாரையோ குறிப்பதாக அமையும்.

அன்னையர் தினம் எனும்போது பொதுவாக இருப்பதாக எண்னினேன். 'அம்மாவின்' என குறிப்பிடும் போது நெருக்கமாக உணர்ந்தேன். மேலும் அன்னையர் தினம் என்று ஒரு நாளை மட்டும் கூறவியலாது என்பதே எனது கருத்து.

நம் அம்மா நம்மைத்தந்தவள் நம் உளமாளட்டும்
அவ்வம்மாவிற்க்கு நாம் தந்தது அவர்கள் நாடாளட்டும்
அதற்க்காக நாம் நம் தாயை 'அம்மா' வென்று அழைக்காமலிருக்கமுடியுமா!

A Thainis
13-05-2013, 06:13 AM
அன்னை என்று அழைப்பதை விட அம்மா என்று அழைத்தால்தான் மீண்டும் ஒரு முறை நான் குழந்தையாக பிறப்பதை உணர்கிறேன்.
ஈன்ற தாய்க்கு என் குழைந்தைதனம் கலந்த வாழ்த்துக்கள். கண்களால் காண இயலாத இறைவனின் உருவமே நான் காணும் பேறே நீ வாழ்க!

Nivas.T
13-05-2013, 11:03 AM
இவ்வுலகத்தில் தாய்ப்பாசம் என்பது ஒரு அற்ப்புதமான படைப்பு, இதுபோன்ற நிகழ்வுகளில்தான் இறைவன் இருக்கிறான் என்ற வதாம் முன்வைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட விந்தையான உணர்வு மட்டும் இல்லாமல் போனால் உயிரினம் பிழைத்திருக்கவும் தழைத்திருக்கவும் வழியில்லாமல் போயிருக்கும்.

தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானதே.

எக்காரணம் கொண்டும் இத்தைகைய சிறப்பான உணர்வு குறையாமல் என்றென்றும் தழைத்திருந்து தரணி பிழைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.

உலகின் அனைத்து தாயிற்கும் வாழ்த்துக்கள்.

கும்பகோணத்துப்பிள்ளை
13-05-2013, 02:04 PM
தைனிஸ் மற்றும் த. நிவாஸ்! நன்றி!