PDA

View Full Version : இப்படித்தான் இன்றைய வாழ்க்கை



arun karthik
09-05-2013, 05:39 PM
அந்த டீ பையன் விற்கும் கொண்டு வந்த
டீயின் நறுமணத்தில் கண் விழித்தான் பூபதி, சரியாக சேவல்
அறைக்கூவல் விடுத்து மூன்று மணி நேரம் கழித்து.

இரண்டு அடி நடந்தான். குளியலறை வந்தது. ஒரு பொத்தானை
அழுத்தினான். வெது வெதுவென்று நீர் வந்தது. குளித்து முடித்து
வெளியே வந்து ஒரு கால் செய்தான்.ஐந்து நிமிடத்தில் பிஸா அவன்
மேசைக்கு வந்தது. ஐயோ அதிகமாக பசிப்பதற்கு மாலை மருத்துவரை வேறு சந்திக்க
வேண்டுமா என்று சலித்தவாறே காலை உணவு உண்டான்.

நான்கு அடி நடந்தான். அவன் வண்டி வந்தது. வண்டியை எடுத்து
அழுத்தினான். அரை மணி நேரத்தில் அலுவலகம் வந்தது. அடுத்து
ஐந்து அடி நடந்தான். லிப்ட் வந்தது. அதில் ஏறினான். நேரே
அலுவலக அறையை அடைந்தான். அமர்ந்தான்; வேலை செய்தான்,
செய்தான் செய்து கொண்டே இருந்தான். இவ்விதம் இவன் ஒன்பது
அடி தொலைவில் அலுவலகம் அடைந்தான்.

மாலை வந்தது. அவன் புதிதாக வாங்கவிருக்கும் கார் கடைக்காரர்,
அவரது புதிய கார் புகைப்படத்தை மெயில் அனுப்பினார். அதை பார்த்து
மகிழ்ந்து விட்டு மருத்துவரை சந்திக்க ஆயத்தமானான். வழக்கம் போல் எட்டு
அடி தொலைவில் மருத்துவமனையை அடைந்து மருத்துவரையும்
சந்தித்தான்.

மருத்துவர் அவனை முழுவதுமாக பரிசோதித்து விட்டு, சார் உங்களுக்கு
ரத்தத்துல சர்க்கரை நோய் அறிகுறி இருக்கு. இனி மேல் நீங்க பத்தியமா
இருக்கணும். எல்லா பக்கமும் நடந்தே தான் போகணும். உடற்பயிற்சி
முக்கியம். தினமும் காலைல ஒரு மணி நேரமாவது நடக்கணும் என்று
கூறினார்.

"சரிங்க டாக்டர். உங்க பீஸ் என்ன?என் கிட்ட மொபைல் பாங்கிங்
இருக்கு. இப்பவே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன். இல்லேன்னா
இதுக்காக நான் ATM போகணும்" என்றான் பவ்யமாக..

Nivas.T
10-05-2013, 03:07 AM
உண்மையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இங்கு உண்மையான வளர்ச்சியா இல்லை மனிதனை சோம்பேறிகளாக்கிவிட்ட பலவீனமா? என்பதே மிகப்பெரிய விவாதத்துக்குரிய விடயமாகிவிட்டது.

குறிப்பாக வீட்டில் பெண்கள் பலர் சாதாரணமாக செய்யக்கூடிய வேலைகளுக்கெல்லாம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் சிறிதுகாலத்தில் உடல் பருமனாகி வியாதிகளினால் அல்லல் பட்டு பின்னர் தினமும் ஒருமணிநேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் உடற்பயிற்சி நிலையம் செல்கிறநிலை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா, இதில் மருத்துவ ஆலோசனைக்கு, உடற்பயிற்சி நிலையத்திற்கு அல்லது உடற்பயிற்சி உபகரனக்களுக்கு என்று தனித்தனியே பண விரயம் செய்வது புத்திசாளிதனம்தானா?

இதற்க்கான விடைதான் என்ன?

அருண் கார்த்திக், நீங்கள் என்ன நினைத்து இதை எழுதினீர்களோ ஆனால் இவை இன்றைய மக்களால் நன்கு உணரப்பட வேண்டிய விடயம் என்பதுமட்டும் மறுக்க இயலாத உண்மை.

பாராட்டுகள்

aren
10-05-2013, 09:52 AM
என்ன செய்வது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. இதுதான் இன்றைய வாழ்க்கை.

arun karthik
10-05-2013, 03:14 PM
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய பலர் ஆயத்தமாகிக்கொண்டு இருக்கின்றனர்.

Vinoth Kumar
16-05-2013, 10:43 AM
இங்கே நான் சொல்றது தப்பா இருக்கலாம் ....
மனசுல எதன வைச்சு சொல்லுங்க ..இதுக்கு பேர் கதையா ?

கீதம்
16-05-2013, 10:10 PM
இங்கே நான் சொல்றது தப்பா இருக்கலாம் ....
மனசுல எதன வைச்சு சொல்லுங்க ..இதுக்கு பேர் கதையா ?

நண்பரே... மன்றம் ஒரு எழுதுபலகை... கற்க விரும்புவோருக்குக் கைகொடுக்கும் ஒரு அற்புதக் கல்விக்கூடம். இதற்குப் பெயர் கதையா என்று கேட்பதை விடவும் இந்தக் கதை ஏன் உங்களைப் பொறுத்தவரை கதையாய்த் தோன்றவில்லை, இன்னும் எப்படி எழுதினால் முழுவடிவம் பெறுவதாக கருதுகிறீர்கள்... கதையின் குறைகளாய் எவற்றைக் காண்கிறீர்கள் என்று அலசி அவற்றை விமர்சிப்பதன் மூலம் நண்பருக்கு உதவலாமே...

கும்பகோணத்துப்பிள்ளை
16-05-2013, 11:02 PM
நடைச்சுருக்கமான கதை!

கதாநாயகன் நடையும் சுருக்கமானது.....
கதையின் நடையும் ரத்தின சுருக்கமானது....


"சரிங்க டாக்டர். உங்க பீஸ் என்ன?என் கிட்ட மொபைல் பாங்கிங்
இருக்கு. இப்பவே உங்களுக்கு பணம் அனுப்பிடறேன். இல்லேன்னா
இதுக்காக நான் ATM போகணும்" என்றான் பவ்யமாக..

முத்தாய்ப்பாய் .... இருந்தாலும் திருந்தமாட்டோம் என உணர்த்தியுள்ளீர்கள்

கரு... வளர்ந்து வரும் நாகரீக மாற்றத்தின் மறு(ரு)பக்கம்.

arun karthik
17-05-2013, 01:11 PM
இங்கே நான் சொல்றது தப்பா இருக்கலாம் ....
மனசுல எதன வைச்சு சொல்லுங்க ..இதுக்கு பேர் கதையா ?

நண்பரே என்றும் நாகரிகமான விமர்சனங்களுக்கு மதிப்பே தனி... உங்கள் விமர்சனம் எனக்கு
மன உளைச்சலை ஏற்படுத்துகிறது . மன்றத்தின் புனிதம் கருதி தொடர்ந்து பேச விரும்பவில்லை.

A Thainis
17-05-2013, 04:14 PM
விமர்சனமே ஒரு படைப்பாளியை சிறந்த நிலைக்கு அழைத்து செல்கிறது, ஒவ்வொரு வாசகரும் படைப்பாளியை அந்நிலைக்கு அழைத்துச் செல்ல கடமை இருக்கிறது, அப்பணி ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். படைப்பாளியும் எவ்விதமான விமர்சனங்களை எதிர்க்கொள்ள வேண்டும் என்பதும் அவசியமே. விமர்சனங்கள் நம்மை உறுத்தாமல் வீருக்கொண்டு எழ உதவட்டும்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-05-2013, 05:10 PM
மாறுபட்ட விமர்சனங்கள் உலாவரும் இம்மன்றத்தில் இது போன்ற விமர்சனங்களை ஒரு ஊக்கியாக கொண்டால் இது போன்ற தவறுகள் நிகழா அருண் கார்த்திக் ..தனது எண்ணங்களை துணிந்து கூறிய தோழர் வினோத்குமார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ..காரணம் மனதில் தோன்றியவற்றை கூறாது மறைத்து காணாது செல்பவர்களை விட இது மேல் .ஆனால் அவர் கூறிய விதம் தவறு இதனை மாற்றி கொள்வது அவசியம் ..இது போன்று கூறுவதை விடுத்து ஏன் பிடிக்கவில்லை என்று கூறினால் தான குறைகளை களைய முடியும் வினோத் குமார்

மாறுபட்ட கதை இருப்பினும் வரும் காலங்களில் நிகழாதென்று கூறவியலா ..மற்றொன்று சுருங்க கூறின் விளங்க வைத்தல் எனும் வகையில் இந்த கதை ..இன்னுமொரு வகையில் பார்த்தால் இது மரபுக்கவிதையின் சாயல் தெரிகிறது ..தொடருங்கள் அருண் கார்த்திக் ..

arun karthik
18-05-2013, 01:08 AM
"படைப்பாளியும் எவ்விதமான விமர்சனங்களை எதிர்க்கொள்ள வேண்டும் என்பதும் அவசியமே." "மாறுபட்ட விமர்சனங்கள் உலாவரும் இம்மன்றத்தில் இது போன்ற விமர்சனங்களை ஒரு ஊக்கியாக கொண்டால் இது போன்ற தவறுகள் நிகழா" மிகவும் சரியான சிந்தனை. தைனிஸ் மற்றும் நாஞ்சில் த.க.ஜெய்
அவர்களுக்கு நன்றிகள்.வினோத் குமார் இந்த கதையின் கரு என்று நீங்கள் கருதுவது என்ன?இந்த கதையின் நடை
அல்லது கரு அல்லது கதாபாத்திரம் இவற்றில் எது பிடிக்கவில்லை
என்று கூறினால் அடுத்த கதை எழுத உதவியாக இருக்கும்.

arun karthik
18-05-2013, 01:10 AM
நன்றி கும்பகோணத்துப்பிள்ளை அவர்களே...

முரளி
18-05-2013, 03:10 AM
அருண் கார்த்திக், விமரிசனங்கள் நம்மை ஊக்குவிக்கவே. வருத்தப் படாதீர்கள். இந்த மன்றம் உயர்ந்த மனம் படைத்தவர், படித்தவர் நிறைய உள்ள ஒரு வலை தளம். கூடிய வரை யாரையும் புண் படுத்த தெரியாது. அதே சமயம சொல் சுதந்திரம் உள்ள இடம். எனவே, எதையும் நல்ல கருத்தாகவே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடத்தில், நானும் ஒரு மூன்று மாதம் முன்பு விமரிசனம் பெற்றிருக்கிறேன்( எனது நான்காவது கதை). அதுவே எனக்கு மேலும் ஒரு உற்சாகத்தை கொடுத்தது. உங்கள் கதை அருமை என்று சொன்னாலும் ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம்.அது உங்களை ஊக்குவிக்கவே. தண்டம் என்றாலும் வருத்தப் படாதீர்கள். அதுவும் ஊக்குவிக்கவே.

உங்கள் கதை நன்றாகவே இருந்தது. புதிய கற்பனை. எதை பற்றியும் கவலை படாமல் போய்க்கிட்டே இருங்க. நிறைய எழுதுங்கள். சித்திரமும் கை பழக்கம் தானே.

முரளி
18-05-2013, 03:32 AM
கார்த்திக், உங்கள் கதை படிக்கும்போது நல்ல தம்பி படத்தில் N.S.கிருஷ்ணன் - T.A.மதுரம் பாடிய பாடல் தான் நினைவுக்கு வந்தது ( நன்றி கூகிள்)

"
விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி
தேனாண்டாளை விருந்துக்கழைச்சு காட்டப் போறேண்டி
...
பொஞ்சாதி, புருஷன் இல்லாம
புள்ளையும், குட்டியும் பொறக்குறாப்புல

(விஞ்ஞானத்த i)

...

.வீட்டுக்கென்ன செய்ய போறீங்க, அதையும் கொஞ்சம் வெவரமாக விளக்கிப்போடுங்க...

நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு
அல்லும்,பகலும் அரிசி அரைக்க அதுக்கொரு மிஷினு,

கொல்ல புரத்தில குழாய் வைக்கணும், குளிரு மிஷினும் கூட வைக்கணும், பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போனாலே படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..

முடிஞ்சுதா?.

ஒண்ணை மறந்துட்டேன்
பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே
இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்

கட்டிலுக்கு மேலே பேன் காத்து சுத்தணும்
காலம் காட்டும் கருவியும் வேணும்

ஹா...ஹா.....ஹா............

அடி பைத்தியம் !
நம்ம நாட்டிலே
வீட்டு வேலை செஞ்ச பொம்மனாட்டிய பாரு
மேனாட்டு நாகரீகம் கொண்ட மேனியைப் பாரு

அவ காட்டுக்கு போவா
களை எடுப்பா
காரியம் பாப்பா
கஞ்சி குடிப்பா

இவ கார்ல போவா
ஊரைச் சுத்துவா
கண்ணாடி பாப்பா
காப்பி குடிப்பா !!

Vinoth Kumar
18-05-2013, 05:09 AM
அன்பு நண்பருக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இவனதன்று .
அப்படி அந்த வரிகள் தங்களை அழைத்து போயிருந்தால் அதற்கு உங்களுக்கு நீங்களே சமரசம் செய்து கொள்ளுங்கள் .
எழுதியவர்கள்/ படைப்பாளிகள் எப்பொழுதுமே நல்ல விமர்சனங்களை மட்டுமே எதிர் பார்க்க கூடாது என்பது என்னுடைய மிக தாழ்மையான கருத்து ..
அடித்து பார்க்கும் விமர்சனங்கள் கூட படைப்பாளியை மென்மேலும் உயர்த்தும் ..
நன்றி

A Thainis
18-05-2013, 09:11 PM
நண்பர்கள் அருண் கார்த்திக் மற்றும் வினோத் குமார் இருவரும், ஒரு ஆரோக்கியமான புரிதலில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி, உங்களது தொடர் பங்களிப்பால் மன்றமும் தமிழும் சிறக்க வாழ்த்துக்கள்.

arun karthik
19-05-2013, 07:01 AM
இது போன்ற விமர்சனங்களை நான் எதிர் கொள்வது இது தான்
முதல் முறை. அதனால் எனக்கு எப்படி எதிர் செயலாற்ற வேண்டும்
என்று தெரியவில்லை. மன்ற நண்பர்கள் உணர வைத்தமைக்கு
நன்றி.மன உளைச்சல் இப்போது துளியும் இல்லை. நன்றிகள் வினோத் குமார். தங்களால் இனி யார் என்ன விமர்சனம்
செய்தாலும் எதிர் கொள்ளத் தயாராகி விட்டேன். ஆனால் தங்கள்
விமர்சனம் அடித்து பேசுவதை விட ஆரோக்கியமாக இருக்கும்
பட்சத்தில் அது படைப்பாளிகளை ஏற்றுவிக்கும் ஏணியாக இருக்கும். தொடரட்டும்
தங்கள் பின்னூட்டங்கள்...

arun karthik
19-05-2013, 07:29 AM
முரளி தாங்கள் மிகவும் சிரமம் பார்த்து தேடிய பாடல் உண்மையின் யதார்த்தம். சொகுசான வாழ்க்கைக்கும் யதார்த்த வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. இனி நிச்சயம் எத்தகு விமர்சனங்களையும் நன்றாகவே எடுத்து செல்வேன்."வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னா தென்றலும் இலமே". சரிதானே....

மும்பை நாதன்
25-08-2013, 03:30 PM
இரவு எட்டரை மணிக்கு நான் வீடு திரும்பும்போது தினமும் காணும் ஒரு காட்சி:

ஜிம்மில் வயதில் குறைந்த இரு பாலினரும் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டு இருப்பதை.

ஆனால் நான் தனிப்பட்ட முறையில் விசாரித்த வரையில் இந்த வயதில் உள்ளவர்கள் வீட்டில் அம்மாவுக்கு எந்த உதவியும் செய்வது கிடையாது.

வீட்டு வேலைகளும் நடை பயிற்சியும் மிகவும் குறைந்து விட்டதால் வைத்தியருக்குத்தான் கொண்டாட்டம்.

இதை புரிந்து கொள்ள

நமது கொள்ளு பாட்டியை விட பாட்டியும்,
பாட்டியை விட அம்மாவும்,
அம்மாவை விட மனைவியும்,
மனைவியை விட மகளும்

சீக்கிரமக பல உடல் உபாதைகளை அனுபவிப்பதை பார்க்க வேண்டும்.

அறிவியல் முன்னேற்றங்களால் கிடைக்கும் உபகரணங்களைப் பயன் படுத்தும் போது, நமது உடல் நலத்தில் அக்கறையோடு உடல் உழைப்பையும் செய்து வந்தால் வரும் காலத்திலாவது பொதுவாக உடல் நலம் மேம்படும்.

இதை உணர்ந்து எல்லோரும் செயல் படுவார்களா ?

பதிவுக்கு நன்றி.

மும்பை நாதன்

சுகந்தப்ரீதன்
25-08-2013, 07:35 PM
முகபுத்தகத்தில் கண்டது..
“ஏழை வயிற்றை வளர்க்க ஓடுகிறான்...
பணக்காரன் வயிற்றை குறைக்க ஓடுகிறான்..”
-இதுல இருந்து ஓடுடறத நிறுத்துனா உடம்புக்கு நல்லதில்லைங்கிறது மட்டும் புரியுது... இந்த யதார்த்தத்தை வெகுஇயல்பா கதையில் சொல்லியிருக்கீங்க... வாழ்த்துக்கள் அருண்கார்த்திக்.. தொடர்ந்து எழுதுங்க..!!:icon_b:

சிவா.ஜி
27-08-2013, 08:38 AM
எதார்த்தத்தை சொல்லும் குறுங்கதை. வார்த்தைக் கோர்ப்புகளில் இன்னும் கொஞ்சம் கவனம் சேர்த்திருந்தால் மிக அருமையாய் வந்திருக்கும்.

நல்ல கரு....அருமை.
கையாண்ட விதம்....சுமார்.

வாழ்த்துக்கள் அருண்.

(சேவலின் கூவலை அறைகூவல் எனச் சொல்லியிருப்பது சரியல்ல அருண். அறைகூவல் என்பது எதிரியை சண்டைக்கு அழைப்பது)