PDA

View Full Version : காதல் வெற்றி.



M.Jagadeesan
08-05-2013, 05:14 AM
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSa3TJDYeWb6D9Uk3y2pEO9lRV-xjWRKyXVm_wnOf8ZhP27gVZv


இனிஎன்றும் இணைபிரியாக் காதலர் ஆனோம்
......இப்புவியின் இன்பங்கள் நமக்கே சொந்தம்
தனிமையிலே உன்னுடனே இருக்கும் வேளை
......தகிக்கின்ற பாலைவனம் சொர்க்கம் ஆகும்
பனிபெய்யும் மார்கழியின் குளிரைப் போலே
......பாவையுனை அணைக்கையிலே இன்பம் தோன்றும்
கனிகொடுக்கும் இனிப்பெல்லாம் என்றும் வேண்டேன்
......கற்கண்டுச் செவ்விதழே எனக்குப் போதும்.

கீதம்
08-05-2013, 07:51 AM
காதலில் திளைத்த உள்ளம் பாடும் கவிதை அழகு. எதுகை மோனையோடு இசைத்திட்ட காதற்பா பாகாய் இனிக்கிறது. பாராட்டுகள் ஐயா.

A Thainis
12-05-2013, 09:30 AM
காதல் வெற்றியோ இல்லையோ உங்கள் கவி சிறப்பான வெற்றி, நாலு வரிகளில் நச்சுனு இருக்கு உங்கள் கவி அமைப்பு, வாழ்த்துக்கள் ஜெகதீசன்.