PDA

View Full Version : சொட்டு நீர்...!!!



சிவா.ஜி
06-05-2013, 05:44 AM
ஊர்களின் பேர்களில் மட்டுமே இருக்கின்றன
ஊர்களில் இல்லை குளங்கள்....
காக்க வேண்டியவர்களாலேயே
காவு கொடுக்கப்பட்டு காணாமல் போயின நீர்நிலைகள்
இங்கு எல்லாவற்றுக்கும் உண்டு சில விலைகள்...
காவேரியும் கிருஷ்ணாவும் கை விரித்தாலும்
கண்மாய்கள் கைகொடுக்குமென்ற காலமும் போனது
கண்மாய்கள் கட்டிடங்களானது
குளங்கள் அங்காடிகளானது....
பிற்காலத்தை சிந்தித்து முற்காலத்தில்
மூத்தோரால் அமைக்கப்பட்ட
நீராதாரங்கள்....யார் ஆதாயங்களுக்காகவோ அழிக்கப்பட்டன
வேறாதாரங்கள் ஏதுமில்லா நிலையில் இனி...
சொட்டுநீர் பாசன முறை
மரங்களுக்கு மட்டுமல்ல...மனிதர்களுக்குமாகிப்போகும்...!!

M.Jagadeesan
06-05-2013, 06:18 AM
இனி...
சொட்டுநீர் பாசன முறை
மரங்களுக்கு மட்டுமல்ல...மனிதர்களுக்குமாகிப்போகும்...!!

சிந்திக்கவைத்த வைத்த வரிகள் !
இனி வருங்காலம் என்பது கற்காலம்தான் ! பாராட்டுக்கள் சிவா.ஜி.

சிவா.ஜி
06-05-2013, 07:45 AM
மிக்க நன்றி ஐயா. மனிதனாகவே வரவழைத்துக்கொண்ட துயரம் இந்த நீரில்லா நிலை. இனி வருங்காலம் கற்காலமோ இல்லையோ...ஆனால் நற்காலமாய் இருக்காது.