PDA

View Full Version : வறுமை



M.Jagadeesan
05-05-2013, 10:56 AM
http://2.bp.blogspot.com/-w5ohCaFmFN0/T9-Bf_Dsc7I/AAAAAAAAAGY/faipXY808TA/s1600/524915_354352797957227_168190262_n.jpg



நன்றி : இணையதளம் .

சிவா.ஜி
06-05-2013, 07:52 AM
அந்த சுருக்கங்கள்...மனதை என்னவோ செய்கிறது.....வறுமையிலும் முதுமையிலும் உழைத்து மற்றவர் சுருக்கத்தை நீக்கும் பெரியவரின் பாதம் வணங்குகிறேன்.

பகிர்வுக்கு நன்றி ஐயா.

கீதம்
08-05-2013, 06:45 AM
உடையின் சுருக்கம் நீக்கும் உன்னத உழைப்பின் வர்க்கம்!

முகத்தில் சுருக்கம் இருந்தாலும் முதுமையில் இல்லை சுருக்கம்!

உழைப்பைப் போற்றும் யாவர்க்கும் இவர் வாழ்வும் ஒரு வரலாற்றுச் சுருக்கம்!

பகிர்வுக்கு நன்றி ஐயா.

A Thainis
08-05-2013, 08:00 AM
முகம் முழுவதும் சுருக்கங்கள் அது முதுமையின் பரிசு ஆனாலும் இத்தனை முதுமையிலும் உழைத்து வாழும் இப்பெரியவரின் வாழ்வு நம் அனைவருக்கும் கிடைத்த நன் முன்மாதிரிகை பரிசு. வறுமை வாட்டினாலும் நம்பிக்கையும், உண்மையும் உழைப்பும் அவரது முகத்தின் சுருக்கங்களை தாண்டி கதிரவனைப்போல வெளிச்சம் பரவுவதை உணரமுடிகிறது.

கீதம் அவர்களின் கவிதை நடை பின்னோட்டம் அருமை.

M.Jagadeesan
09-05-2013, 05:44 AM
சிவா.ஜி, கீதம், தைனிஸ் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி.

கும்பகோணத்துப்பிள்ளை
12-05-2013, 03:54 PM
விரியச்செய்தால் அது இஸ்திரி - அதையே
சுருங்ச்சொன்னால் அது உழைப்பு!
அதையே விளங்கச்சொன்னால் அது
வறுமையிலும் சிறப்பு!
இவரின் முகத்தில்
உழைப்பு உழுத வரிகள் இந்த சுருக்கங்கள்!