PDA

View Full Version : எரியும் ஐஸ்க்ரீம்



maniajith007
05-05-2013, 06:24 AM
சலிப்புற்ற நகர
வெம்மையை தணிக்க
விழுங்கி கொண்டிருக்கிறேன்
ஐஸ்க்க்ரீம் ஒன்றினை

இதே இடத்தில்
நானும் நீயும்
முன்பு இருந்திருந்தோம்
இப்போது
வெறும் இருக்கை

சூனியத்தில்
மூழ்க தொடங்கிய
எனது இருப்பில்
தொண்டையில் இறங்குகிறது
நெருப்பு கங்குகள்

ஒரு சேர
விழுங்க தொடங்கினேன்
துயரத்தையும்
குளிர்ந்த ஐஸ்க்ரீமையும்

பற்றிய எரிய
தொடங்கியது
வெறுமையும் நினைவும்
உள்ளே விழுந்து

மீண்டும் மீண்டும்
துயர நதியில்
அடித்து செல்லப்பட்டு

மீண்டும் மீண்டும்
எதோ ஒரு
நம்பிக்கையில்
வாழ் துவங்கி

மீண்டும் மீண்டும்
இப்படி கவிதைகளை
எழுதி தொலைக்கிறேன்