PDA

View Full Version : அஃறிணை???

arun karthik
04-05-2013, 02:43 PM
தெருக்களின் பெயர்களில் தேடினேன்
தென்படவில்லை....
அங்காடிகளின் பதாகைகளில் பார்த்தேன்
அகப்படவில்லை....
பேசுவோர் நாவினில் கண்டேன்
புலப்படவில்லை...
சர்வமும் ஆங்கிலம்
எங்கே என் உயிர் மொழி என்று
கவலை கொள்கையில் இன்பமூட்டியது
என் வீட்டு கண்ணு குட்டியின் குரல்....

கீதம்
05-05-2013, 04:37 AM
நல்லவேளை... அதையும் மம்மி என்று கத்தினால்தான் பாலென்று மிரட்டவில்லை நாம்!

நல்ல கவிதை. பாராட்டுகள் அருண்.

arun karthik
09-05-2013, 05:43 PM
பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள்...

Nivas.T
10-05-2013, 03:27 AM
மொழி என்பது சிறப்பானது, அனைத்து மொழிகளும்தான் ஆனால் இது தாழ்ந்தது உயர்ந்தது என்று பாகுபாடு இவற்றுள் திணிக்கப் படுகிறது. காரணம் எண்ணம்தான், உலகின் பலநாடுகள் பொருளாதரத்தில் வளர்ந்தவையும் சரி, பின்தங்கியவையும் சரி தங்களது தாய் மொழியை தாழ்த்தி பிற மொழிகளை பெருமையாய் நினைப்பதில்லை, அதிலும் சில நாடுகள் ஆங்கிலத்தை மதிப்பதே இல்லை. ஆனால் தாய் மொழியை தவிர்த்து பிற மொழிகளையும், பிறநாட்டவர் பண்பாடு கலாச்சாரத்தையும் காரணம் தெரியாமலே தலையில் வைத்து கொண்டாடும் கேடுகெட்ட நிலை வெகு சில நாடுகளில் தான், அதில் தமிழ்நாடு, முதலிடத்தில் உள்ளதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

சீனா இதுபோன்ற விடயங்களில் தனது பண்பாட்டையும் மொழியும் என்றுமே விட்டுகொடுப்பதில்லை, ஆனால் இவர்கெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் அமெரிக்கா அங்கு வெளியிடும் மென்பொருட்கள் கூட சீனமொழியில் வெளியிடப்படுகிறது. ஏன் சீன இப்பொழுது வல்லரசுநாடு இல்லையா?

தன்மானத்தையும், தன்மொழியையும், தன் பண்பாட்டையும் விட்டுக்கொடுக்காத எவனும் அழிவதில்லை, இதுமட்டும் இந்த தமிழனத்திற்க்கு ஏனோ புரிவதில்லை.

பாராட்டுகள் அருண் கார்த்திக்

arun karthik
10-05-2013, 03:01 PM

நிவாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.எம்மொழிக்கும் உயர்வு தாழ்வு இல்லை. ஆங்கிலம் பிழையாக பேசினால் அது தவறு. அதுவே தமிழை பிழையாக பேசினால் அது புது பாணி. நன்றாக இருக்கிறது பலரின் நியாயம். சொந்த அடையாளத்தை தொலைத்து விட்டு எதையோ தேடி அலைகிறோம். இதுதான் மகிழ்ச்சி,இது தான் இன்பம் என்று யாரோ உட்செலுத்திய போதை மருந்தை உட்கொண்டு உள்மனம் தள்ளாடுகிறது.என்று தெளியுமோ......