PDA

View Full Version : காதல் தோல்வி.

M.Jagadeesan
04-05-2013, 02:24 AM
http://2.bp.blogspot.com/_nqvrXDyhqr4/S9QhgjMSTRI/AAAAAAAAPH0/OVqZaPMXfYs/s320/man-crying-1.jpg

காசுபணம் எல்லாமே வெறுத்துப் போனதடீ !
......காக்கும் தெய்வங்கள் கல்லாய்த் தெரியுதடீ !
பேசுகின்ற தமிழ்கூட வேம்பாய்க் கசக்குதடீ !
......பேய்புகுந்த வீடாக மனமும் மாறியதே !
வீசுகின்ற தென்றலுமே முள்ளாகக் குத்துதடீ !
......வீணையின் நாதமும் காதுகள் வெறுத்ததடீ !
மாசில்லாக் காதல் முறிந்து போனதினால்
......மங்கை நீஇன்றி வாழ்வு ஏதுக்கடீ ?

அமரன்
04-05-2013, 10:55 AM
காதலே உந்தன் பேர்தான் ரசனையோ..

காதல் மனசு சம்மந்தப்பட்டது என்பதன் மீள் அறிவிப்பாக காதல் தோல்விக் கவிதை.

அருமை ஐயா.

jpl
04-05-2013, 06:40 PM
http://2.bp.blogspot.com/_nqvrXDyhqr4/S9QhgjMSTRI/AAAAAAAAPH0/OVqZaPMXfYs/s320/man-crying-1.jpg

காசுபணம் எல்லாமே வெறுத்துப் போனதடீ !
......காக்கும் தெய்வங்கள் கல்லாய்த் தெரியுதடீ !
பேசுகின்ற தமிழ்கூட வேம்பாய்க் கசக்குதடீ !
......பேய்புகுந்த வீடாக மனமும் மாறியதே !
வீசுகின்ற தென்றலுமே முள்ளாகக் குத்துதடீ !
......வீணையின் நாதமும் காதுகள் வெறுத்ததடீ !
மாசில்லாக் காதல் முறிந்து போனதினால்
......மங்கை நீஇன்றி வாழ்வு ஏதுக்கடீ ?

ஜெகதீசனுக்கு காதல் தோல்வி என்றால் மற்றவர்களுக்கு நல்ல கவிதை கிடைக்கும் போல..
நன்று ஜெகதீசன்..//..பேய்புகுந்த வீடாக மனமும் மாறியதே !//
பேய்க்கு வாடகை உண்டா?

கீதம்
05-05-2013, 04:22 AM
தன்மை மாறிய காதலால் மனம் பிசகினாலும் தண்மை மாறாத் தமிழால் மரபு பிசகாத கவிதை எழுகிறதே...

வேதனையுற்றவன் நிலையைக் காட்டும் படமும் உள்ளத்தைக் காட்டும் கவிதையும் மனந்தொட்டன.

பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
05-05-2013, 05:39 AM
அமரன், jpl, கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.