PDA

View Full Version : வாழை மரம்



shreemurali
02-05-2013, 10:29 AM
வாழ்க்கை தத்துவம்:
-----------------------------

குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.

வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப் பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை, பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம் மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள்.

தந்தை கொடுத்த உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும் தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.

A Thainis
02-05-2013, 12:27 PM
வாழையின் தத்துவம் உண்மையை உரக்க சொல்லியது.

M.Jagadeesan
03-05-2013, 12:43 AM
வாழைமரம் தன் இனத்தைத் தானாகவே பெருக்கிக் கொள்ளும். " வாழையடி வாழையாக " என்ற சொற்றொடர் இக்கருத்தின் அடிப்படையில்தான் எழுந்தது. மணமக்களும் அவ்வாறு குழைந்தைகள் பெற்று தங்கள் குலம் தழைக்க வாழவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் திருமண வீடுகளில் வாழைமரம் கட்டுகிறார்கள்.

வாழைமரத்தின் சிறப்பை உணர்த்திய ஸ்ரீ முரளிக்கு நன்றி.

shreemurali
03-05-2013, 01:38 AM
மிக்க நன்றி திரு. தைனிஸ் மற்றும் திரு.ஜகதீசன் அவா்களுக்கு

நாஞ்சில் த.க.ஜெய்
03-05-2013, 05:11 AM
இரு கருத்துக்கள் அவை இரண்டும் அவசியம் ...

aren
03-05-2013, 10:32 AM
மிகவும் அருமையான கருத்து.

Nivas.T
06-05-2013, 08:59 AM
பெற்றோர் கொடுத்த உயிரும், ஆரோக்கிய உடலும் மட்டுமே போதும் என்று நினைப்பவனே தன்மானத்தோடு உயர்வான்.

உன்னிடம் இருப்பவற்றை நீ தானமாக கொடுக்கும்போதே உன் சந்ததிகளுக்கான நல்வாழ்க்கை விதைக்கப் பட்டுவிட்டது

நல்ல கருத்து

மிக்க நன்றி

தங்கவேல்
08-08-2013, 12:58 PM
ஆஹா அருமை. அருமை..

சிவா.ஜி
19-08-2013, 02:44 PM
வாழையின் தத்துவம் வாழ்க்கைக்கும் உதவும். நல்ல கருத்துக்கள்.

Mano60
18-11-2016, 08:50 AM
வாழை மர தத்துவம் நன்றாக இருக்கிறது. வாழ்வின் உண்மையான அர்த்தம் சொத்துக்களை சம்பாதிப்பதில் இல்லை என்பதை விளக்கும் நல்ல கருத்து பொதிந்த பதிவு