PDA

View Full Version : இப்பாவம் யாரைப் போய்ச் சேரும்?

Nivas.T
30-04-2013, 08:57 AM
கதறியது குழந்தை
தாயும் தந்தையும்
பரிதவிக்க
அக்கம் பக்கம்
அலறி விழிக்க
காரணம் வலி? பசி?
இல்லை இல்லை
மின்சாரம்
இப்பாவம் யாரைப் போய்ச் சேரும்?:sauer028:

கீதம்
02-05-2013, 12:15 AM
குழந்தை பிறந்தநாளிலிருந்து மின்விசிறியைப் பழக்கப்படுத்திய நம்மைத்தான் சாரும். :frown:

வெட்டவெளியில் மரத்தடித் தூளியில் உறங்கும் குழந்தை தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் எழாமல் ஆழ்ந்துறங்குவது அது வாங்கிவந்த வரம் என்றுதான் சொல்லவேண்டும். (நாமும் நம் குழந்தைகளும் நள்ளிரவில் மின்சாரமில்லாமல் அவதிப்படுவதாக! என்று யாரிடமோ சாபம் வாங்கியிருப்போமோ?)

கும்பகோணத்துப்பிள்ளை
02-05-2013, 01:12 PM
தென்றல் வந்து தீண்டுமென்றா
தெருவோரம் உறங்குகின்றார்
வீதிவாழ் விதி கொண்ட ஏழைக்குழந்தைகள்!
மயிலுக்கு துகில் கொடுத்த பேகன் வந்து
போர்துவானென்றா பாதையோரம்
படுத்துக்கிடக்கறார்கள் பாவமற்ற ஏழைகள்!
மின்சாரம் இருந்தபோது அவர்களிடம்
மினவிசிறியில்லை!
மின்சாரம் இல்லாதபோதோ!...

தகவல்: 11 மில்லியன் குழந்தைகள் இந்தியாவின் தெருவோரங்களில் வசிக்கிறார்கள்

"https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ"]https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ[/URL]

ரமணி
02-05-2013, 01:32 PM
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால்பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் திரண்டாலும் தீபம் எரிந்தாலும்
எழைகள் வாழ்வது கண்ணீரிலே

என்ற அர்த்தமுள்ள திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது.

M.Jagadeesan
02-05-2013, 01:45 PM
தென்றல் வந்து தீண்டுமென்றா
தெருவோரம் உறங்குகின்றார்
வீதிவாழ் விதி கொண்ட ஏழைக்குழந்தைகள்!
மயிலுக்கு துகில் கொடுத்த பாரி வந்து
போர்துவானென்றா பாதையோரம்
படுத்துக்கிடக்கறார்கள் பாவமற்ற ஏழைகள்!
மின்சாரம் இருந்தபோது அவர்களிடம்
மினவிசிறியில்லை!
மின்சாரம் இல்லாதபோதோ!...

தகவல்: 11 மில்லியன் குழந்தைகள் இந்தியாவின் தெருவோரங்களில் வசிக்கிறார்கள்

"https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ"]https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ[/URL]

மயிலுக்குத் துகில் கொடுத்தது பேகன் அல்லவா ?

கும்பகோணத்துப்பிள்ளை
02-05-2013, 02:36 PM
மயிலுக்குத் துகில் கொடுத்தது பேகன் அல்லவா ?

நன்றி ஜயா! தவறை திருத்தியமைக்கு

நாஞ்சில் த.க.ஜெய்
03-05-2013, 09:23 AM
வீடு கட்ட மரம், ரோடு போட தேவையில்லை மரம் ,படிக்கும் பேப்பர் க்கு வேண்டும் மரம் ,இப்படியிருந்தால் காற்றினை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் ..இது போன்ற நேரங்களில் வெளியில் வந்தால் மரங்களிலிருந்து வீசும் காற்று அவசியப்படும் அதனை ரசிக்க ஒரு வாய்ப்பு தந்தமைக்கு ஒரு நன்றி கூறி குழந்தையினை இந்த தென்றல் காற்றினூடே தலாட்டி தூங்க வைத்து அதன் அருமையினை உணர வையுங்கள் ..வளரும் சந்ததியினர் அதன் அவசியம் உணர்வர் ...தொடருங்கள் நிவாஸ் ..

Nivas.T
03-05-2013, 10:29 AM
குழந்தை பிறந்தநாளிலிருந்து மின்விசிறியைப் பழக்கப்படுத்திய நம்மைத்தான் சாரும். :frown:

வெட்டவெளியில் மரத்தடித் தூளியில் உறங்கும் குழந்தை தன்னைச் சுற்றி என்ன நடந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் எழாமல் ஆழ்ந்துறங்குவது அது வாங்கிவந்த வரம் என்றுதான் சொல்லவேண்டும். (நாமும் நம் குழந்தைகளும் நள்ளிரவில் மின்சாரமில்லாமல் அவதிப்படுவதாக! என்று யாரிடமோ சாபம் வாங்கியிருப்போமோ?)

உண்மைதாங்க, நவநாகரீகம் என்னும் பெயரில் நம் வாழ்க்கை மாற்றத்தில் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இயலாத ஒரு இயலாமை நிலையை அடைந்துள்ளோம் என்பதே மறுக்க இயலாத மறைக்கப் படுகிற உண்மையாகும். இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தவரை மனிதன் வலிமையாய் இருந்தான், இன்று அறிவியலை மட்டும் மனிதன் நம்பி வாழ்வதால் அது பொருளாதாரத்துக்குள் அடைபட்டுவிட வசதி அனைவருக்கும் எட்டாக் கனியாகிவிடுகிறது. பாவம் அந்த குழந்தை என்ன செய்ய இயலும்.

Nivas.T
03-05-2013, 10:34 AM
தென்றல் வந்து தீண்டுமென்றா
தெருவோரம் உறங்குகின்றார்
வீதிவாழ் விதி கொண்ட ஏழைக்குழந்தைகள்!
மயிலுக்கு துகில் கொடுத்த பேகன் வந்து
போர்துவானென்றா பாதையோரம்
படுத்துக்கிடக்கறார்கள் பாவமற்ற ஏழைகள்!
மின்சாரம் இருந்தபோது அவர்களிடம்
மினவிசிறியில்லை!
மின்சாரம் இல்லாதபோதோ!...

தகவல்: 11 மில்லியன் குழந்தைகள் இந்தியாவின் தெருவோரங்களில் வசிக்கிறார்கள்

"https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ"]https://groups.google.com/forum/#!msg/keetru/HJpv2CbEwdE/XwFkHl1ViGEJ[/URL]

மயிலுக்குத் துகில் கொடுத்தது பேகன் அல்லவா ?

நன்றி ஜயா! தவறை திருத்தியமைக்கு

தவறில்லை மயிலுக்கு துகில் கொடுக்க இன்னொரு பாரி கூட வரலாம், ஆனால் இன்று மனிதர்க்கு தண்ணீர் கொடுக்ககூட ஒருவருக்கும் மனம் வரவில்லையே.

கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி

Nivas.T
03-05-2013, 10:38 AM
தவறு யாருடையதாக இருப்பினும் குழந்தைகளால் அதை அறிந்து உணர்ந்து புரிந்து மனதை தேற்றி சகித்துக்கொள்ள இயலாது பாவம்

மிக்க நன்றி ரமணி

Nivas.T
03-05-2013, 10:40 AM
வீடு கட்ட மரம், ரோடு போட தேவையில்லை மரம் ,படிக்கும் பேப்பர் க்கு வேண்டும் மரம் ,இப்படியிருந்தால் காற்றினை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும் ..இது போன்ற நேரங்களில் வெளியில் வந்தால் மரங்களிலிருந்து வீசும் காற்று அவசியப்படும் அதனை ரசிக்க ஒரு வாய்ப்பு தந்தமைக்கு ஒரு நன்றி கூறி குழந்தையினை இந்த தென்றல் காற்றினூடே தலாட்டி தூங்க வைத்து அதன் அருமையினை உணர வையுங்கள் ..வளரும் சந்ததியினர் அதன் அவசியம் உணர்வர் ...தொடருங்கள் நிவாஸ் ..

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அடிக்கும் கற்று அனல் காற்றாகவே அடிக்கிறது. இது நம் தேசம் நவீன பாலைவனமாக மாறுவதையே உணர்த்துகிறது. இதை நாம் என்று புரிந்துகொள்ளப் போகிறோம் என்றுதான் தெரியவில்லை.

மிக்க நன்றி ஜெய்