PDA

View Full Version : யாதுமற்ற மனவெளியில்



நாஞ்சில் த.க.ஜெய்
29-04-2013, 09:14 PM
விழித்திருந்த இரவுவேளையில்
என்னில் உலவும் உன்னில் தேடுகின்றேன் என்னை
எனை தொலைத்தகாலம் நினைவில்லை
உறக்கம் தொலைத்த இரவுகளில் மறந்துவிட்டேன்
நினைவுகள் மறந்து யாதுமற்ற மனவெளியில் நான்
உணர்வுகளின் உயிர்வளியில் உலவுகின்றேன் உன்னுள்
மீண்டு மீண்டும் உயிர்த்தெழும் என் ஜீவனே
என்றும் உணர்வுகளின் யாதுமற்ற வரையறையாய்
மீண்டு மீண்டும் இரவு வேளையில் ....

கும்பகோணத்துப்பிள்ளை
30-04-2013, 04:01 AM
உணர்வுகளின் உயிர்வளியில் உலவுகின்றேன் உன்னுள்
மீண்டு மீண்டும் உயிர்த்தெழும் என் ஜீவனே

அருமை!

A Thainis
30-04-2013, 07:18 AM
யாதுமற்ற மனவெளியில்! யாரைத் தேடி? உணர்வுகளில் கலந்த உயிர் கவிதை சிறப்பு.

கீதம்
02-05-2013, 12:18 AM
உறக்கம் தொலைத்த இரவுகளில் உயிரின் உயிரைத் தேடியலையும் உருக்கமான கவிதைக்குப் பாராட்டுகள் ஜெய்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-05-2013, 06:26 AM
அருமை!

வாழ்த்துக்கு மிக்க நன்றி கும்பகோணத்து பிள்ளை ...


யாதுமற்ற மனவெளியில்! யாரைத் தேடி? உணர்வுகளில் கலந்த உயிர் கவிதை சிறப்பு.

ஊக்கமுடனான வாழ்த்திற்கு மிக்க நன்றி தைனிஸ் அவர்களே..


உறக்கம் தொலைத்த இரவுகளில் உயிரின் உயிரைத் தேடியலையும் உருக்கமான கவிதைக்குப் பாராட்டுகள் ஜெய்.

வாழ்த்திற்கு நன்றி அக்கா..