PDA

View Full Version : தலைப்பில்லாத கவிதை



ஆதி
29-04-2013, 08:15 PM
உனது கண்கள் உதிர்க்கும்
செம்பவழ*ப்பூவை
பொருக்கி வைத்தேன்
எனது உள்ளங்கையில்
அது பனித்துளியென உருகி
நதியென மினுமினுப்பாய் ரேகைகோடுகளில் பாய்ந்து
வழிகிறது

சலனம் நிறைய என் இதயத்தின் கடல்
வேட்கையோடு ஒரு பேரலையென*
உனை நோக்கி புரள

உனது கால்சுவட்டின்
கட்டைவிரல் குழியில் அதனை அடைத்து
ஒரு சூரியனை அதில் மிதக்கவிடுகிறாய்
அது பறவையென பரிணமித்து
முக்குளித்து மீன் கவ்வி
ஒரு இறகு சிலிர்ப்பில்
என் மொத்தக்கடலையும் சிதறடித்து
பறக்கிறது தன் திசை நோக்கி
சிதறிய கடல் உன் கால்சுவட்டின்
மற்றப்பள்ளங்களிலும் பரவி
உறைகிறது ஒரு பனிப்பாறையாய்

நாஞ்சில் த.க.ஜெய்
29-04-2013, 09:13 PM
தலைபற்ற கவிதை கூறும் தலைபற்ற செய்தியினை உணரும் கவி அல்ல இச்சிறுவன் மன்னிக்க ..காதலில் மூழ்கிவிட்ட கவியின் சிந்தையில் உதித்த செம்மை கவியோ ..தொடரட்டும் ஆதி

கீதம்
17-05-2013, 02:55 AM
உனது கண்கள் உதிர்க்கும்
செம்பவழ*ப்பூவை
பொருக்கி வைத்தேன்

கண்கள் உதிர்க்கும் செம்பவழப்பூவா? அது என்ன? :smilie_abcfra:


எனது உள்ளங்கையில்
அது பனித்துளியென உருகி
நதியென மினுமினுப்பாய் ரேகைகோடுகளில் பாய்ந்து
வழிகிறது

ஓ... அவளை அழவிடுறதைத்தான் இப்படிக் கவித்துவமா வர்ணிக்கிறீங்களோ? :traurig001:


சலனம் நிறைய என் இதயத்தின் கடல்
வேட்கையோடு ஒரு பேரலையென*
உனை நோக்கி புரள

இப்படி சுனாமியாய்ப் பொங்கினால் அழமாட்டாளா என்ன? :confused:


உனது கால்சுவட்டின்
கட்டைவிரல் குழியில் அதனை அடைத்து
ஒரு சூரியனை அதில் மிதக்கவிடுகிறாய்

எப்படியோ மனசைத் தேத்திக்கொண்டு உங்க கோபத்தையெல்லாம் தன் காலடியில் போட்டு ஒரே மிதி! :wuerg019:

அப்படியும் ஓடிடாமலிருக்க டேபிள்வெயிட் மாதிரி சூரியன்! :mini023:


அது பறவையென பரிணமித்து
முக்குளித்து மீன் கவ்வி
ஒரு இறகு சிலிர்ப்பில்
என் மொத்தக்கடலையும் சிதறடித்து
பறக்கிறது தன் திசை நோக்கி

அதாலயும் தாங்க முடியலயாம். இரண்டுபேருக்கு நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே...தப்பிச்சு ஓடும் வழியைத் தானே பார்க்கணும்...:cool:


சிதறிய கடல் உன் கால்சுவட்டின்
மற்றப்பள்ளங்களிலும் பரவி
உறைகிறது ஒரு பனிப்பாறையாய்

நல்லாப் பாருங்க.. கடலா? மிதித்த மிதியில் வெளிவந்த குடலா என்று... :sprachlos020:

கவிதையும் புரியாமல், காதலும் புரியாமல் நீங்க எல்லாம் எதுக்கு காதல் கவிதைகள் பக்கம் வரீங்க என்று ஆதி பல்லை நறநறப்பது மனக்கண்ணில் தெரிகிறது. :sauer028:

ஆதி
20-05-2013, 04:21 PM
@ஜெய், சில நேரம் நானும் இப்படித்தான் குழம்பிடுறேன், பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்


//கவிதையும் புரியாமல், காதலும் புரியாமல் நீங்க எல்லாம் எதுக்கு காதல் கவிதைகள் பக்கம் வரீங்க என்று ஆதி பல்லை நறநறப்பது மனக்கண்ணில் தெரிகிறது. :sauer028://

கீதம் அக்கா, இந்த கோவம் தலைப்பை காவு கொடுத்ததால் தானோ :D :D :D

விளக்கம் நல்லா இருங்க அக்கா, பின்னூட்டத்துக்கு நன்றி

கீதம்
21-05-2013, 10:58 AM
//கவிதையும் புரியாமல், காதலும் புரியாமல் நீங்க எல்லாம் எதுக்கு காதல் கவிதைகள் பக்கம் வரீங்க என்று ஆதி பல்லை நறநறப்பது மனக்கண்ணில் தெரிகிறது. :sauer028://

கீதம் அக்கா, இந்த கோவம் தலைப்பை காவு கொடுத்ததால் தானோ :D :D :D

விளக்கம் நல்லா இருங்க அக்கா, பின்னூட்டத்துக்கு நன்றி

அது என் கோவம் என்றா நினைத்தீங்க... என் மனக்கண்ணில் தெரியும் உங்க முகத்தைத்தான் அங்கே காட்டியிருக்கிறேனாக்கும். :)

கும்பகோணத்துப்பிள்ளை
24-05-2013, 04:13 AM
பிரம்மாண்டமான காதலி!
கால் கட்டைவிரல் குழியில் சூரியனா!
யப்பா! எத்தேதண்டி!

ஆர்.ஈஸ்வரன்
24-05-2013, 10:45 AM
கவிதை நன்றாக இருக்கிறது.

ஆதி
28-05-2013, 08:22 AM
அது என் கோவம் என்றா நினைத்தீங்க... என் மனக்கண்ணில் தெரியும் உங்க முகத்தைத்தான் அங்கே காட்டியிருக்கிறேனாக்கும். :)

:D :D :D

ஆதி
28-05-2013, 08:25 AM
பிரம்மாண்டமான காதலி!
கால் கட்டைவிரல் குழியில் சூரியனா!
யப்பா! எத்தேதண்டி!

பிரமாண்டமான காதலி கும்பகோணத்துப்பிள்ளை :D

கால்சுவடு ஒரு படிமம்

சூரியனும் ஒரு படிமம்

ஆதி
28-05-2013, 08:28 AM
கவிதை நன்றாக இருக்கிறது.

வாங்க ஈஸ்வரன் ரொம்ப நாளாச்சே உங்களை மன்றத்தில் கண்டு, பழையபடி தங்களின் கவிதைகளை மன்றத்தில் தவழவிடுங்கள்
பின்னூட்டத்துக்கு நன்றி

ஆர்.ஈஸ்வரன்
07-10-2013, 02:21 PM
நல்ல கவிதை.