PDA

View Full Version : தமிழே தாயே வாழியவே



A Thainis
28-04-2013, 07:17 PM
தமிழே தாயே எங்கள் உயிரே வாழியவே
தமிழே மொழியே எங்கள் உயர்வே வாழியவே
தமிழே அன்பே எங்கள் அமுதமே வாழியவே
தமிழே அறிவே எங்கள் ஆற்றலே வாழியவே
தமிழே சிறப்பே எங்கள் செம்மொழியே வாழியவே

தமிழின் ஓசையே தித்திக்கும் தேன்கரும்பே வாழியவே
தமிழின் இசையே இன்பகவியமுதே வாழியவே
தமிழின் எழுத்தே ஒங்காபுகழ் ஓவியமே வாழியவே
தமிழின் சொல்வளமே வற்றா வான்மழையே வாழியவே
தமிழின் சொத்தே இலக்கிய சோலையே வாழியவே

தமிழின் பழமையே பரமனின் முதற்சொல்லே வாழியவே
தமிழின் தொன்மையே கல்வெட்டு சிற்பமே வாழியவே
தமிழின் தாய்மையே புதிய மொழிகளின் வாழ்வே வாழியவே
தமிழின் வரலாறே ஆழ்கடலே வான்திரளே வாழியவே
தமிழின் எழிலே என்றும் கன்னித்தமிழே வாழியவே

தமிழின் பெருமையே வள்ளுவனின் குறளே வாழியவே
தமிழின் அழகே சங்க இலக்கியமே வாழியவே
தமிழின் இன்பமே கம்பனின் கவியே வாழியவே
தமிழின் கனிவே கண்ணகியின் துணிவே வாழியவே
தமிழின் ஒழுக்கமே சிலம்பின் விளக்கமே வாழியவே

தமிழின் குடியாட்சியே மூவேந்தரின் முடியாட்சியே வாழியவே
தமிழின் தெய்வீகமே பக்தி இலக்கியமே வாழியவே
தமிழின் மாண்பே சித்தர்களின் மருத்துவமே வாழியவே
தமிழின் புதுமையே நவீன இலக்கியமே வாழியவே
தமிழின் எழுச்சியே இணையுலகில் புரட்சியே வாழியவே

வாழியவே தமிழே எங்கள் தாயே என்றும் வாழியவே

கீதம்
28-04-2013, 10:40 PM
தமிழின் இனிமையையும் பெருமையையும் எத்தனை முறை ருசித்தாலும் திகட்டுவதேயில்லை... தமிழைப் போற்றி வாழ்த்தும் கவிதைக்குள் திளைத்த மனமும் ரீங்கரிக்கிறதமிழ்தமிழ்தென்று. பாராட்டுகள் தைனிஸ்.

தவறாக நினைக்கவில்லையெனில் சில திருத்தங்கள்: வான்திரலே- வான்திரளே, எழிழே - எழிலே, குடியாச்சி - குடியாட்சி, முடியாச்சி- முடியாட்சி

Nivas.T
29-04-2013, 04:12 AM
உங்கள் தமிழ் பற்று உங்கள் கவிதை வழி நன்கு தெரிகிறது

பாராட்டுகள்

செல்வா
29-04-2013, 05:48 AM
தமிழைப்பற்றிய கவிதை தமிழைப்போன்றே இனிமையாகவும் அழகாகவும் அமைந்து விடும்.

அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...! இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்...!

ஏனோ இப்போதெல்லாம் எனக்கு வாழ்த்துப்பாக்கள் பிடிப்பதில்லை.

jpl
29-04-2013, 08:32 AM
//தமிழின் எழுத்தே ஒங்காபுகழ் ஓவியமே வாழியவே //

சொல்லாக்கம் நன்று..

A Thainis
29-04-2013, 09:56 AM
தாயே தமிழே வாழியவே கவிதைக்கு இனிய கருத்துக்களை பதிவு செய்த கீதம், த.நிவாஸ், செல்வா மற்றும் JPL உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

நாஞ்சில் த.க.ஜெய்
29-04-2013, 08:06 PM
வாழிய தமிழ் . பிடிக்கிறதில்லை வாழ்த்துப்பாக்கள் ..வாழ வைக்கும் தமிழ் மொழியின் செம்மை கவிதை தமிழில் ...தொடரட்டும்

M.Jagadeesan
30-04-2013, 01:48 AM
தமிழ்த் தாய் வாழ்த்து மிகவும் நன்று. பாராட்டுக்கள் !

A Thainis
30-04-2013, 07:15 AM
தமிழ் தாய் கவியை வாழ்த்திய நாஞ்சில் த.க.ஜெய் மற்றும் ஜெகதீசன் அவர்களுக்கு நன்றிகள்.

arun karthik
04-05-2013, 02:45 PM
தித்திக்கிறது தங்கள் கவிதை

A Thainis
04-05-2013, 09:33 PM
தமிழ் தித்திப்பதால் கவிதையும் தித்திகிறதோ! நன்றிகள் அருண் கார்த்திக்.