PDA

View Full Version : "பருவம் கண்டேன் .....!!!!"



manivannan samikkannu
28-04-2013, 12:54 PM
காமம் கடந்த காதல் கண்டேன்......
அவள் கண்ணில் ........!!!!

மரம்கொத்தி பறவையாக எனை கொத்தி
போகிறது அவள் கரும்விழி பார்வை ....!!!!

மழைத்தீண்டிய மண்வாசம் இவள் தீண்டிய பூவாசம்....
எனை தீண்ட எனை மறந்தேன் ....!!!!

என் தூக்கத்தை கடன்வாங்கி .....
அவள் நினைவுகளை என்னுள் ....
விதைத்து சென்றால் ....!!!!!

விதைத்த நினைவுகள் வேர் ஊன்றி வளர .....
அறுவடைக்கு காத்திருந்தேன் .....என்
கரங்கள் அவள் கரம் கோர்க்க ....!!!!!

காவியம் சொல்லும் காதலும் .....
கவிதை சொல்லும் இனிமையும் ....
இரண்டர கண்டேன் இவள் கரும்விழி பார்வையில் ....!!!

பார்த்த முதல் நாளே பருவம் கண்டேன் .....
இவளை படைத்தது கடவுள் எனக்கென்று ....!!!!

செல்வா
28-04-2013, 02:32 PM
கண்டதும் காதலா?
காதல் கொடுத்த கவிதை நல்லாருக்குங்க..!

A Thainis
28-04-2013, 06:48 PM
பருவம் கண்டேன் கவிதையில் உங்கள் கவிச்சிறப்பு கண்டேன், உங்களுக்காக படைத்த அவளுக்கு நன்றி சொல்ல எங்களுக்கு கிடைத்தது இக்கவிதை, கவி சிறகடிக்கட்டும் வாழ்த்துக்கள் மணிவண்ணன் சாமிக்கண்ணு.

கீதம்
28-04-2013, 10:44 PM
கருவிழிகளால் விதைத்த காதல் பயிருக்கு இங்கு கவிதைப் பாசனமா?


கவிதை நன்று. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

Nivas.T
29-04-2013, 04:10 AM
அழகான கவிதை

பாராட்டுகள்

ravindramani
29-04-2013, 01:52 PM
மழைத்தீண்டிய மண்வாசம் இவள் தீண்டிய பூவாசம்....
எனை தீண்ட எனை மறந்தேன் ....!!!!


அருமையான வரிகள். மனமார்ந்த பாராட்டுகள்.


இரவிந்திரமணி

கும்பகோணத்துப்பிள்ளை
29-04-2013, 02:14 PM
மழைத்தீண்டிய மண்வாசம் இவள் தீண்டிய பூவாசம்....
எனை தீண்ட எனை மறந்தேன் ....!!!!


என அருமையான வரிகளை பின்னிட்டு

முன்னே


காமம் கடந்த காதல் கண்டேன்......
அவள் கண்ணில் ........!!!!


என்றும்

தலைப்பில் 'பருவம் கண்டேன்" எனவும் குறித்து

சற்று முரண்பட்டாலும் நல்ல வார்த்தை வார்ப்புகள்!

manivannan samikkannu
29-04-2013, 03:49 PM
தங்கள் அனைவரின் மேலான பின்னூட்டத்திற்கு எனது நன்றிகள்.