PDA

View Full Version : நட்பு



நாஞ்சில் த.க.ஜெய்
28-04-2013, 07:08 AM
பூவினில் முள் கண்டு மிரளும் என்னில்
நகைக்கும் உன் பூவிதழில் கண்டேன் ...

அரியின் கண் கண்டு மரையாய் என்னில்
துளிரும் உன் துணிவில் கண்டேன்..

கரியின் மதம் கண்டு திகைக்கும் என்னில்
ஒளிரும் உன் அறிவினில் கண்டேன் ..

பரியொன்று வழி கண்டு பிரிகின்ற வேளையில்
பொழியும் மழையென நம் கண்ணீரில் ..

செல்வா
28-04-2013, 03:01 PM
கவிதையை ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால்
எதுகை மோனைக்காகவே வார்த்தைகளை தொகுத்து வைத்துக் கொண்டு எழுதியது போல் தெரிகிறது.

கவிதைக்கு அணி தேவைதான் ஆனால் அறுபட்ட மாலையை யாரும் அணிய முடியாது

இங்கே ஆரம் துண்டுகளாகத் தொங்குவது போல் தோன்றுகிறது.

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..!

நாஞ்சில் த.க.ஜெய்
28-04-2013, 06:31 PM
தங்கள் மேலான விமர்சனத்திற்கு மிக்க நன்றி செல்வா..இது போன்ற விமர்சனங்களை வரவேற்கிறேன் ஒன்று தெளிவுற புரிந்து கொண்டேன் வார்த்தை அணிகளை அழகுற கோர்த்துவிட்ட என்னால் மற்றவர்களின் கவிதை மீதான தெளிவினை உணர முடியவில்லை செல்வா அவர்களின் பின்னூட்டம் மூலம் அதனை கொண்டுவர முடிந்ததில் மகிழ்ச்சி .புரியவில்லை என்று ஒதுங்கி விடாது கருத்தினை வெளியிட்ட செல்வா அவர்களுக்கு என் நன்றிகள் பல உரித்தாகுக ..இதுபோல் மன்ற தோழர்கள் முன் வந்தால் நன்று ....அதே நேரத்தில் இந்த கவிதையினை தெளிவுற விளக்குவது என் கடமையென நினைக்கிறன் ..

முதலில் பூவினில் முள் கண்டு மிரளும் என்னில்
நகைக்கும் உன் பூவிதழில் கண்டேன் ...

இந்த வரி முதலில் கூறவருவது தயக்கம் எந்த ஒரு நட்பும் முதலில் இணையும் முன் தயக்கத்துடனே இணைகிறது ..இன்றைய நட்பு நட்பு கொள்ளும் போது நண்பனாகின்றவனை நன்கு தெரிந்து கொண்டு தயங்கி துவக்கம் கொள்கின்றது ..

இரண்டாவது அரியின் கண் கண்டு மரையாய் என்னில்
துளிரும் உன் துணிவில் கண்டேன்..

அரி = சிங்கம் மரை =மான்

இந்த வரி கூறுவது தைரியம் இதில் நட்பு கொண்டவர்கள் ஓரிடம் செல்லும் போது அவர்களில் ஒருவருக்கு வேறேவருடன் தொந்தரவு ஏற்படின் நண்பர்கள் இணைத்து எதிர்ப்பார் .தனிமையில் செல்வதைவிட இணைந்து செல்வது இரு மடங்கு பலம் என்பது நமது நட்பு வட்டத்தில் நாம் கண்டது தானே .

கரியின் மதம் கண்டு திகைக்கும் என்னில்
ஒளிரும் உன் அறிவினில் கண்டேன் ..

கரி =யானை

இந்த வரி கூறுவது புத்திசாலித்தனம் இதில் ஆபத்தொன்று வரும் போது தப்பிபிபதன் காரணம் அந்த கண நேரத்தில் தோன்றும் சிந்தனை இதன் மூலம் நட்பிற்கு உதவுவது ...

பரியொன்று வழி கண்டு பிரிகின்ற வேளையில்
பொழியும் மழையென நம் கண்ணீரில் ..

பரி =குதிரை

கல்லூரி இறுதியில் ஒவ்வொரு நண்பனும் தனித்தனி பாதையில் செல்லும் போது ஏற்படும் பிரிவு இந்த வரிகளில்..

என் மனதில் உதித்தனை கவிதை வரிகளில் கொண்டு வந்தேன் அவை தற்போது படிக்கையில் தெளிவுற இருக்குமென நினைக்கிறேன் ...

A Thainis
28-04-2013, 06:38 PM
நட்பு கவிதை அமைப்பு அழகாக இருந்தாலும் புரிதலில் சிறிது சருக்கல் இருந்தது அது செல்வாவின் வழியாய் உங்களது விளக்கத்தால் அது சிறப்பு பெற்று இருக்கிறது. சரியான விளக்கத்தோடு படிக்கின்றபோது கவிதை இன்னும் அழகாக இருக்கிறது, மேலும் சில பழைய தமிழ் சொற்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது, வாழ்த்துக்கள் நாஞ்சில் த.க.ஜெய்.

நாஞ்சில் த.க.ஜெய்
29-04-2013, 08:58 PM
நட்பு கவிதை அமைப்பு அழகாக இருந்தாலும் புரிதலில் சிறிது சருக்கல் இருந்தது அது செல்வாவின் வழியாய் உங்களது விளக்கத்தால் அது சிறப்பு பெற்று இருக்கிறது. சரியான விளக்கத்தோடு படிக்கின்றபோது கவிதை இன்னும் அழகாக இருக்கிறது, மேலும் சில பழைய தமிழ் சொற்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது, வாழ்த்துக்கள் நாஞ்சில் த.க.ஜெய்.
தோழர் தைனிஸ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி ..இது போன்று பாராட்டு என்னுள் ஒரு கிரியாஊக்கி அதேநேரம் ஒதுங்கிவிடாது புரியவில்லையெனினும் பதிலுரை மூலம் புரிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி ..

arun karthik
04-05-2013, 02:46 PM
நிகற்புதம்

நாஞ்சில் த.க.ஜெய்
15-05-2013, 07:05 PM
நிகற்புதம்

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அருண் கார்த்திக் ..