PDA

View Full Version : சுமைகள்



lavanya
08-04-2003, 11:35 PM
சுமைகள்

பசியில்லாத போது
உணவு.....
மழையில்லாத போது
குடை......
வேலையில்லாத போது
படிப்பு......
உறக்கமில்லாத போது
நினைவுகள்.......
நீயில்லாத போது
வாழ்க்கை.......

இளசு
08-04-2003, 11:59 PM
வெகு இயல்பாய் மிக பாரமான சேதிகளை சொல்லிவிட்டீர்கள் லாவண்யா.
பாராட்டுகள்...

சுமை இல்லாத பயணம் இல்லை.
பயணம் நின்றால் வாழ்க்கை இல்லை.

Mano.G.
09-04-2003, 04:46 AM
அருமை லாவண்யா
தொடருங்கள்

வாழ்த்துக்கள்

மனோ.ஜி

karikaalan
09-04-2003, 08:27 AM
நல்ல கவிதை; நெஞ்சைத் தொட்டது -- "நீயில்லாத போது .... வாழ்க்கை."
வாழ்த்துக்கள், லாவண்யாஜி.

===கரிகாலன்

Narathar
09-04-2003, 10:16 AM
தொட்டுட்டீங்க போங்க...................
நல்ல கவிதை லாவண்யா............ வாழ்த்துக்கள்

poo
09-04-2003, 12:24 PM
எளிய நடை... வலிய கருத்து. பாராட்டுக்கள்!!!!

chezhian
09-04-2003, 12:35 PM
மிக அருமை.. வாழ்த்துக்கள் லாவண்யாஜி..

discreteplague
09-04-2003, 01:26 PM
நீ இல்லாத பொது
நான் இருப்பேன்...
நான் இல்லாத பொது
யார் இருப்பார்?
யாரும் இல்லாத பொது
யார் தடுப்பார்...
தடைகள் இல்லாத பொது
யார் வந்து நிருத்துவார்...
மொத்தத்தில்
யாரும் யாருக்கும் யாராலையும்
பாரம் இல்லை
என்னத்தை பொல தான் நடக்கும் என்பார்கள்..
அது தான் இது...

விஷ்ணு

rambal
09-04-2003, 04:26 PM
அருமையான பதிவு..
நல்ல பார்வை...
அழகிய சிந்தனை..
பாராட்டுக்கள் லாவண்யா..

lavanya
09-04-2003, 10:04 PM
கருத்து சொன்ன அனைத்து நட்புகளுக்கும் நன்றி

lavanya
09-04-2003, 10:07 PM
கருத்து சொன்ன அனைத்து நட்புகளுக்கும் நன்றி

குமரன்
10-04-2003, 01:51 AM
எளிமையான வார்த்தைகளால்
சுமை(யான) கவிதை தந்த
கவிதாயினிக்கு பாராட்டுக்கள்...

-குமரன்