PDA

View Full Version : இயற்கை



A Thainis
27-04-2013, 06:50 AM
நீல வானம் அதில் பூத்திடும்
பகல் இரவு விண்மலர்கள்
பசுமை போர்த்திய மலைகள்
சரிந்து விழுந்த பள்ளத்தாக்குகள்
சமவெளிகள் பாலைவன சோலைகள்
இங்கு பூத்து குலுங்கிடும் வயல்வெளிகள்
காய்த்திடும் மரங்கள் கனிந்திடும் பழவகைகள்
காற்றை மயக்கும் நறுமணங்கள்
உயர் வானில் உயர விரிந்திடும்
பறவைகள் ஓடிவிளையாடும் உயிரினங்கள்
கரைக்கான கடல் அதில் எழுந்திடும்
அலைகள் நீந்திடும் மீன்வகைகள்
விழுந்திடும் அருவி ஓடிடும் ஆறு
தாகம் தணித்திடும் நீர் நிலைகள்
சுடுகாற்று குளிர்தென்றல் சூறாவளி
அடைமழை சற்றென்று மாறிடும் வானிலை
இவை ஒவ்வொன்றின் ஒலியில்
மெல்லிய காற்றில் ஒலித்திடும் இன்னிசை
அனைத்தும் அற்புதம் அதில் அன்பு இதயம்
கொண்ட மனிதனின் படைப்பு ஒரு மகத்துவம்
இவ்வுலகம் இங்கு நாம் காணும்
ஒவ்வொன்றும் பிரமிப்பு - அவன்
ஈசன் தன் உயிர் மூச்சில் வரைந்து
வாழ்ந்திடும் உன்னத உயிரோவியம்

சுகந்தப்ரீதன்
27-04-2013, 07:05 PM
இயற்கை என்னும் இளைய கன்னிகையை கவியோவியமாய் காட்சிபடுத்தியிருக்கும் பாங்கு மிகவும் அருமை... வாழ்த்துக்கள் தைனிஸ்..!!:icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
27-04-2013, 07:55 PM
அருமையான ஓவியம் படைத்துள்ளிர்கள்! பாராட்டுகள்!

சற்றன்டு இது என்ன வார்த்தை உபயோகம்!

கீதம்
28-04-2013, 01:36 AM
இயற்கை வரைந்த உயிரோவியத்தை இங்கே எழுத்தால் வரைந்து கவியோவியமாக்கிவிட்டீர்கள். காணும் காட்சிகளெல்லாம் மனத்தைப் பறிக்கும் விந்தையைக் கவிதையென்னும் அழகால் எம்மையும் காணவைத்துவிட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுகள் தைனிஸ்.

ஜான்
28-04-2013, 03:26 AM
வரிசைப் படுத்தியது அழகு

வீடு அலுவலகம் தாண்டி இயற்கை அழகு என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மறந்து விடுவதால் இதயம் மெல்லிசை மறந்து வல்லிசை மட்டும் கொள்கிற வழக்கம் வந்து விடுகிறது!!

நன்று தைனி ஸ்

நாஞ்சில் த.க.ஜெய்
28-04-2013, 04:53 AM
இயற்கை தோற்றம் கவி ஓவியமாய் அதில் தோன்றும் பிழைகள் தடைகளாய்...தொடரட்டும் தைனிஸ் அவர்களே ..
காயத்திடும்= காய்த்திடும் எழுதிந்திடும்= எழுந்திடும் சற்றன்டு= சற்றென்று உயிர்வோவியம்= உயிரோவியம்

கார்த்திக்
28-04-2013, 07:09 AM
இயற்கை எழில் மிகுந்தது
தங்களுடைய கவிதையை போலவே!

A Thainis
28-04-2013, 07:31 AM
இயற்கை கவிதையை பாராட்டிய சுகந்தப்ரீதன், கும்பகோணத்துப்பிள்ளை, கீதம், ஜான், நாஞ்சில் தா.க.ஜெய் மற்றும் டிகே செல்வன் ஆகியோருக்கு என் நன்றிகள்.

செல்வா
28-04-2013, 03:47 PM
இந்த மாடர்ன் வேல்டில் மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச இயற்கையை இரசிக்க மனமின்றி மனமிருந்தாலும் நேரமின்றி அலைபவர்கள் பலர்.

இயற்கையை எழுதப்புகுந்தால் எல்லாமே அழகுதான். இயற்கையை எழுதிய எழுத்தும் அழகு.

அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...!

நண்பர்களின் திருத்தங்கண்டு திருத்தியது இன்னும் அழகு..!

A Thainis
29-04-2013, 09:59 AM
அழகான பின்னூட்டங்களால் எழுத்துக்கு ஏற்றம் தரும் செல்வாவுக்கு நன்றிகள்.