PDA

View Full Version : 'பணம்"



Vinoth Kumar
25-04-2013, 05:48 PM
முதலில் நீ ஆழுது - இறுதில்
யார்யாரோ ஆழபோகிறார் !
நீ சொன்னாயோ எவன் சொன்னானோ !
போகிற காலத்தில் எல்லாம் காணாமல்
போகிறது .இதை நீ சொன்னால் என்ன
நான் சொன்னால் என்ன ?

கொடுத்தவனும் போனான் அதை
வாங்கினவனும் போனான் .மலை போல்
கடன் கொடுந்தவனும் போனான் அதில்
கடல் போல் கடன் வைத்தவனும் போனான் .

நில்லடா இங்கே ,அது இங்கே தான் இருக்கிறது .
சொல்லடா நீ -நீ எனக்கு வேண்டுவதில்லை என
என் கண் திறவாமல் போனாலும் என்னிடம்
வராதே பணமே (நாணயம்).

அது கொடுத்தவனையும் கெடுத்தது -
கொண்டவனையும் கெடுத்தது .
இன்னும் அது இங்கே தான் இருக்கிறது .
இன்னும் இன்னொருவனை தான் அது தேடுகிறது .

தொண்டை வேல் முருகன்

சுகந்தப்ரீதன்
25-04-2013, 07:21 PM
உங்க கவிதைய படிச்சதும் அப்படியே ‘கிக்’ ஏறுதுங்க விநோத்..!!:)

“அட கம்மங்கூழு தின்னவனும் மண்ணுக்குள்ள
தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
இந்த வாழ்க்கை வாழத்தான்..
நாம் பிறக்கையில் கையில் என்னக் கொண்டு வந்தோம்
கொண்டு செல்ல..?!”

நாணயம் நாணயமாய் இருக்குறவரை அது கொடுத்தவனையும் கெடுக்காது.. கொண்டவனையும் கெடுக்காதுங்கோ..!!:redface: