PDA

View Full Version : போகி!



நிலா
14-01-2004, 10:58 PM
பழையது பாழானது
பிஞ்சது நஞ்சது
கெட்டது கெடாதது
அகற்றப்படவேண்டியது
அவசியமில்லாதது
எல்லாம் எரிகிறது
அகலாத மனகுப்பைகள்
என்னை வேடிக்கையாய்....!

முத்து
14-01-2004, 11:01 PM
கடைசி வரி .... நச் ..
நானும் இந்த மாதிரி அகலாத குப்பை இருந்தால்
எரிப்பதற்காய்த் திட்டமிட்டிருக்கிறேன் ...
பாராட்டுக்கள் நிலா ....

நிலா
14-01-2004, 11:11 PM
நன்றி முத்து!

இளசு
14-01-2004, 11:12 PM
சிலதை எரிக்கணும்னா நானேயில்ல எரியணும்..
எனக்கான போகி வராமலா போயிடும்...

நல்ல கவிதை நிலா.. பாராட்டுகள்..

Mano.G.
14-01-2004, 11:26 PM
சிலதை எரிக்கணும்னா நானேயில்ல எரியணும்..
எனக்கான போகி வராமலா போயிடும்...

நல்ல கவிதை நிலா.. பாராட்டுகள்..

அந்த நாள் வந்த அன்றைக்கு நமக்கே தெரியாதே
நாம செய்த போட்ட குப்பையெல்லாம் சேர்த்து
எரிப்பாங்களா என்று.

மனோ.ஜி

நிலா
14-01-2004, 11:29 PM
சிலதை எரிக்கணும்னா நானேயில்ல எரியணும்..
எனக்கான போகி வராமலா போயிடும்...

:( :roll: .

நன்றி தலை,மனோ.ஜி.

poo
15-01-2004, 12:12 PM
நிலா... நல்ல வரிகள்...

இளசு அண்ணன் சொன்னது ஏறக்குறைய எல்லா மனிதருக்கும் பொருந்தும்... அப்படித்தான் நானும் காத்திருக்கிறேன்... இன்னும் நிறையபேரும்கூட...

எரியாமல் கிடைப்பவைகளை ஊதிப் பெருசாக்காமல் இருக்கும்வரை இருக்கலாம்!!

பாரதி
19-01-2004, 11:50 PM
போகி போகும் வரும்
மனகுப்பையை சுட
மனிதத்தை வளர்க்க
இதயத்தை வளைக்க
வேண்டியதை கொடு சக்தி...