PDA

View Full Version : தனிமை



ஆதி
22-04-2013, 12:40 PM
மிக லாவகமாக
எனது முழுநிலப்பரப்பிலும் பரவியிருக்கும்
இத்தனிமை
ஒரு 'ஜெல்'லென நெகிழ்ச்சியோடுத் தானிருக்கிறது
எனினும்
இதன் கடும்பிசுபிசுப்பும் ஈரகனமும்
துடைத்தழிப்பதற்கும்
காய்தலுக்கும் அரியதாகவும்
அகறலுக்கு சுலபமற்றதாகவும்
விடுபடுதலுக்கு இயலாததாகவும் இருக்கிறது
ஒரு குட்டி ஆடென
உன் நினைவுகளை
என் நிலத்தில் விடுந்தருணங்களில்
அதன் துருதுருப்பான நடன துள்ளலில்
தன் கடும்பிசுபிசுப்பையும், ஈரகனத்தையும்
அடியோடுசுரண்டி அழித்து மறைகிறது தனிமை

நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 12:52 PM
தனிமையிலும் தனிமையிலின்றி நினைவுகள் துணையுடன் உலவும் இத்தனிமை அருமை...

சிவா.ஜி
22-04-2013, 02:22 PM
தனிமையை ‘ஜெல்’ல்லாக்கிய உவமை அருமை. அதன் பிசுபிசுப்பு நீங்க அவளின் அல்லது அவனின் நினைவுகளை ஆடவிட்டதும் அருமை. ஆதி உங்க கவிதையை முழுசா ரசிக்கனும்ன்னா....ஆழ்ந்து வாசிக்கனும். இப்ப முடியல. அதனாலத்தான் இந்த சின்ன பின்னூட்டம். வாழ்த்துக்கள் தம்பி.

கீதம்
23-04-2013, 02:00 AM
குட்டி ஆட்டின் நடனத் துள்ளலின் தனிமையின் ஜெல் அழிந்து மனத்துக்குள் ஜில்!

உருளும் பாறையில் பாசி படர்வதில்லையாம். ஆகவே...

குட்டி ஆட்டை அடிக்கடி மேயவிடுங்கள் உங்கள் மனப்பரப்பில்.

அழகான கவிதை. சற்றே ஆழமானதும். பாராட்டுகள் ஆதி.

செல்வா
23-04-2013, 01:25 PM
தனிமை இனிமை தான் பலநேரங்களில்
துணையாக எதைக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

தனிமைக்குத் துணையாகத் தனிமையே வாய்க்கும் போது இப்படித்தான் புலம்ப வைக்கிறது.

தனிமையை இத்தனை கனமாக உணரும்போதே...

தனிமையை நீக்க வேண்டிய தேவையும் வந்து விட்டது.
வெறும் நினைவுகள் பாரத்தை அதிகமாக்கத்தான் செய்யும்.

நினைவுகளை விடுத்து நனவிற்கு வந்து நிஜங்களை எதிர்கொள்ள வேண்டிய வேளை வந்து விட்டதுடா...!

jpl
25-04-2013, 04:38 PM
மிக லாவகமாக
எனது முழுநிலப்பரப்பிலும் பரவியிருக்கும்
இத்தனிமை
ஒரு 'ஜெல்'லென நெகிழ்ச்சியோடுத் தானிருக்கிறது
எனினும்
இதன் கடும்பிசுபிசுப்பும் ஈரகனமும்
துடைத்தழிப்பதற்கும்
காய்தலுக்கும் அரியதாகவும்
அகறலுக்கு சுலபமற்றதாகவும்
விடுபடுதலுக்கு இயலாததாகவும் இருக்கிறது
ஒரு குட்டி ஆடென
உன் நினைவுகளை
என் நிலத்தில் விடுந்தருணங்களில்
அதன் துருதுருப்பான நடன துள்ளலில்
தன் கடும்பிசுபிசுப்பையும், ஈரகனத்தையும்
அடியோடுசுரண்டி அழித்து மறைகிறது தனிமை

நவீன உத்திகள் தொழிற்துறையில் மட்டுமா?
கவிதை வரைதலிலும் என ஆதி காட்டுகிறார்.

வித்தியசமான எண்ணங்களால் தனிமையை உருவப்
படுத்தி படிப்பவர்கள் மனதில் ஒரு குட்டி ஆட்டை
ஆட வத்து விட்டார்.

//இதன் கடும்பிசுபிசுப்பும் ஈரகனமும்
துடைத்தழிப்பதற்கும்
காய்தலுக்கும் அரியதாகவும்
அகறலுக்கு சுலபமற்றதாகவும்
விடுபடுதலுக்கு இயலாததாகவும் இருக்கிறது.//

வாழ்க்கையில் இதனை உணராதவர் யாராவது உண்டா?
ஆனால் அதனை வார்த்தையில் விளங்காதவர்களே அனேகம்..

//அகறலுக்கு சுலபமற்றதாகவும்// அகற்றலுக்கு ? அல்லது அகறலுக்கு?

சுகந்தப்ரீதன்
25-04-2013, 06:12 PM
தனிமையின் சுகந்தத்தை இதைவிட அழகாய் எப்படி வெளிப்படுத்த இயலும்..?! கலக்கிட்டீங்க கவிஞரே..!!:)

வலித்தாலும் வதைத்தாலும்
இறுதிவரை இணைபிரியாமல்
வாழ்வில் வழித்துணையாய் வருவது
நினைவெனும் நிழல்நண்பன் மட்டும்தானே..?!
:icon_rollout:

A Thainis
26-04-2013, 07:48 AM
தனிமையின் நிலை கொஞ்சம் தடுமாறியதுதான்
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் தவிப்பு கொஞ்சம் கிறுக்கு
கொஞ்சம் செருக்கு கொஞ்சம் தெளிவு கொஞ்சம் அறிவு
கொஞ்சம் சரிவு என அனைத்தும் கலந்துதான் அதை அழகான
வரிகளில் ஆதி ஆழமிட்டுள்ளார் வாழ்த்துக்கள்.