PDA

View Full Version : பெற்றோரால் தவிக்க விடப்பட்ட குழந்தைகள் வசித்திடும் இல்லம்.....



arun karthik
21-04-2013, 03:02 PM
இது ஒரு வாழைத் தோட்டம்...
முழுக்க முழுக்க வாழைகளை இழந்த கன்றுகள்;
நிச்சயம் கனி தரும்...

இது ஒரு கண்ணீர் குளம்...
காண்போர் கண்களில் கண்ணீர் தேங்கும்;
செல்வந்தர்களை தேடி வரும் மரியாதை போல...

இது ஒரு லட்சிய இல்லம்...
இனி வரவிருக்கும் உயர் பதவியினர்,
வசித்திடும் இல்லம் ...

இது ஒரு சரணாலயம்...
மூத்தோரால் தவிக்கவிடப்பட்ட பறவைகள்,
பறக்க பயிற்றுவிக்கப்படும் இடம்...

இது ஒரு காவல் நிலையம்...
பெற்றோரைத் தவற விட்டவர்கள்,
தவறாகி விடாமல் காக்கும் பகுதி...

இது ஒரு தேன் கூடு...
அன்புத் தேனை மழலை தேனீக்கள்,
மொய்க்கின்ற கூடு....

கும்பகோணத்துப்பிள்ளை
21-04-2013, 07:11 PM
இது ஒரு கண்ணீர் குளம்...
காண்போர் கண்களில் கண்ணீர் தேங்கும்;


அருமை!

நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 12:31 PM
ஒவ்வொன்றும் கருத்தினை தூவிடும் முத்தான வரிகள்...

கீதம்
23-04-2013, 01:51 AM
மனந்தொட்ட வரிகள். பெற்றோரால் தவிக்கவிடப்பட்ட குழந்தைகள் இல்லத்தை வர்ணிக்கும் வரிகளில் மிளிர்கிறது நம்பிக்கையும் நாளைய நிலைப்பாடும்! பாராட்டுகள் அருண் கார்த்திக்.