PDA

View Full Version : இனி எல்லாமே மின்வணிகம் (E-Commerce) - 4



lavanya
14-01-2004, 10:26 PM
மின் வணிகம் - ஒரு நடுநிலைப் பார்வை

நிறைகள்.

1. முற்றிலும் கணிப்பொறி மூலமாகவே தகவல் பரிமாற்றம் நடைபெறுவதால் காலவிரயம்
தவிர்க்கப்படுகிறது.

2. அனைத்து தகவல்களையும் கணிப்பொறிகளே கையாள்வதால் தகவல்கள் மிக துல்லியமாக
உள்ளன. உடனடி சந்தேககங்கள் - தகவல் பரிமாற்றங்கள் சாத்தியமாகின்றன.

3. மீண்டும் மீண்டும் கையாள வேண்டிய தகவல்களை (பொருள்களின் எண்ணிக்கை,விலை)
இவற்றை ஒரே ஒரு முறை உள்ளீடு செய்தால் போதும்.திரும்ப திரும்ப தட்டச்சு
செய்வதால் ஏற்படும் பிழைகள் தவிர்க்கப்படுகின்றன.

4. தாள்களில் ஆவணங்களை கையாள்வதற்கும் பரிமாறுவதற்கும்,பராமரிப்பதற்கும் ஆகும்
செலவுகள் அதிகம்.அதிக எண்ணிக்கையிலான பணியாள்களை நியமிக்க வேண்டும்.இது
கணிப்பொறிகளில் கையாள்வதால் செலவு மிக குறைவு.

5. பிழையற்ற விரைவான தகவல் பரிமாற்றத்தின் காரணமாக வணிக உறவுகள் சுமூகமாக
இருக்கின்றன.

6. கையாளும் செலவுகள் குறைவதால் பொருள்களின் அடக்கவிலை மறைமுகமாக
குறைகிறது.

7. கொள்முதல்/விற்பனை போன்ற தகவல்கள் வணிக நிறுவனங்களுக்கு கால தாமதமின்றி
கிடைத்து விடுவதால் வருங்கால வணிக திட்டங்களையும் யுக்திகளையும் விற்பனை முன்
கணிப்புகளையும் சரியான நேரத்தில் துல்லியமாக செய்ய முடிகிறது.

குறைகள்

1. நேரடியாக பொருளை பார்த்து வாங்குவதில் ஏற்படும் திருப்தி வாடிக்கையாளர்களுக்கு
மின் வணிகத்தில் கிடைப்பதில்லை. (இந்த சேலை சாயம் போவும் போலே இருக்கே)

2. பேரம் பேசி பொருளை வாங்க வாய்ப்பில்லை. (ஒரு ரெண்டு ரூவா கொறைச்சுக்கேயேன்
என்றெல்லாம் பேசவே முடியாது)

3. தகவல் பரிமாற்றத்தில் கையொப்பம் இட வழியில்லை ( துடிம கையொப்பங்கள் சற்று
சிக்கலாகவே இருக்கின்றன...)

4. தகவல் அனுப்பியவர் தாம் அனுப்பவில்லையென்றோ பெறுபவர் தகவல் கிடைக்கவில்லை
என்றோ மறுதலிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

5. தாள்களில் தகவல்கள் திருத்தப்பட்டால் கண்டுபிடிக்க வாய்ப்புகள் உண்டு.கம்ப்யூட்டரில்
கையாளும் தகவல்களில் தடயமே இல்லாமல் திருத்தங்கள் செய்ய முடியும்.

6. இருவருக்கும் இடையே நடைபெறும் வணிகம் தொடர்பான தகவல் பரிமாற்றங்களை
மூன்றாவது நபர் தெளிவாக ஒட்டு கேட்க/பார்க்க நிறையவே வழி உள்ளது.

7. தீய எண்ணமுள்ள திறமைசாலிகள் (திறமைசாலிகளுக்குத்தான் கொஞ்ச தீய எண்ணமே
வரும்) பல நிறுவன பிணையங்களின் தீச்சுவரை தண்ணி ஊற்றாமலேயே உடைத்தெறிந்து
உள்ளே நுழைந்து உயிர்நாடியான தகவல்களை சட்டத்துக்கு புறம்பாக கவர்ந்து கொள்ள
முடியும்.எந்த நாட்டின் பீனல் கோடுகளும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

8. கணிப்பொறிகளில் சேமித்து வைக்கப்பட்ட வணிகத்தகவல்கள் பரிமாற்றங்கள் பல்வேறு
காரணங்களினால் பாழ்பட்டு போக வாய்ப்பு உண்டு.

இந்தியாவில் மின் வணிகம்

அரசுத்துறையில் VSNL,NIC ஆகியவை EDI NETWORk ஐ நிறுவி வணிக தகவல்
பரிமாற்றத்துக்கு தடம் அமைத்து கொடுத்தன.தனியார் துறைகளும் தமக்குள் மதிப்பேற்று
பிணையம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.Mahindra,InfoSys, Riliance groups
Network service,Sathyam Infoway,Global Telecom Servive பல தனியார் EDI சேவையாள
நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பாட தொடங்கின.

இந்தியாவில் மின் வணிகம் வளர்ச்சி என்பது மிக மெதுவாகவே நடைபெறுகிறது.இதற்கு
பல காரணங்கள் இருக்கின்றன.

1. இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவில்லை.

2. அப்படியே கணிப்பொறி வைத்திருந்தாலும் இணைய இணைப்பு பெற்றவர்கள் குறைவு.

3. இந்தியாவில் பண அட்டை என்பது மிக உயர்ந்த மனிதர்கள் மட்டுமே பயன்படுத்தும்
விஷயமாக இருக்கிறது..இது ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது.

4. மின் வணிகத்தை ஒழுங்கு படுத்தும் சட்டங்கள் தேவை.இப்போதுதான் இந்தியாவில்
இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

5. இந்தியாவில் இன்னும் விற்பனை வரி,மாநில எல்லை வரிகள் முறைமைப்படுத்தப்பட
வில்லை.ஆனால் மின் வணிகம் என்பது எல்லை,தேசம் கடந்தது...

6. இணையம் வழியே மின் வணிகம் தொடங்க நிறுவனங்களுக்கு தொடக்க செலவு மிக
அதிகம்.அந்தளவு முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க வணிக நிறுவனங்கள் இப்போதைக்கு
தயாராக இல்லை.

7. இந்திய மக்கள் பேரம் பேசி வாங்கும் மனப்பான்மை உள்ளவர்கள்.இணையம் இதற்கு
முற்றிலும் மாறாக உள்ளது.எனினும் வருங்காலத்தில் தழைக்க வாய்ப்பிருக்கிறது.

இளசு
15-01-2004, 12:09 AM
நல்ல தராசு முனை அலசல் லாவ்.. பாராட்டுகள்..
தொலைபேசியில் முடிக்கக்கூடிய விஷயங்களுக்குக் கூட துண்டு சீட்டுடன்
சைக்கிளில் "எதிர்க்காற்றில் மிதித்து" போய், நேராய்ச் சொன்னால்தான்
திருப்தி என்னும் கலாச்சாரம் நமது..

மனிதர்கள், அவருக்கு நேரங்கள் அதிகமாய் இருக்கும் தேசம்..

பணம் இருந்தாலும் பண அட்டை,
கணினி இருந்தாலும் இணையத்தொடர்பு
இணையம் இருந்தாலும் இடையறா தொலைபேசித் தொடர்பு
எல்லாம் இருந்தாலும் தடைபடா மின்சார வசதி...
ஊறிப்போன "கைப்பட செஞ்சிடும்" நுகர்வோர் கலாச்சாரம்..

இவை இப்போதைய தடைகள்..

பிஸ்ஸா, மெகா தொடர், சுடிதார், சாஷே ஷாம்பூ, தமிழ் டைடானிக் - இவை கூட
இருபது ஆண்டுகளுக்கு முன் இன்றைய மின்வணிக நிலைமையில்தான்..

நிச்சயம் எதிர்காலம் மின்வணிகம் கையில்தான்..

உட்கார்ந்த இடத்தில் எல்லாம் முடித்துவிட்டு
ஓய்வாய்க் கிடைக்கும் நேரத்தில் என்ன செய்யப் போகிறோம்?

sara
15-01-2004, 02:27 AM
எல்லாம் இருந்தாலும் தடைபடா மின்சார வசதி...

அப்படிப்போடுங்க.. இது எந்த காலத்தில கிடைக்குமோ (தடைபடா மின்சாரம்). :(

கட்டுரை விறுவிறுப்பாக செல்கிறது. பாராட்டுக்கள் லாவண்யா, உங்களிடம் இருக்கும் உற்சாகத்துக்கும், அதை முனைப்புடன் செயல்படுத்தி பல விசயங்களை மன்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வழிவகுப்பதற்கும்...

madhuraikumaran
15-01-2004, 03:29 AM
நல்ல அலசல்... பாராட்டுக்கள் !!!

இந்த மின் வணிகத்தினால் ஏற்பட்ட இன்னொரு பலன் - குரியர் எனப்படும் பட்டுவாடா தொழிலின் அபரிமித வளர்ச்சி.
நேரடி வணிகத்தில் உள்ளது போல பொருள்களை பெரும் செலவு செய்து நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சேர்த்து இருப்பு (ஸ்டாக்) வைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. மின் வணிகத்தில், வாங்கப்பட்ட பொருள் மட்டும் நுகர்வோருக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்படுவதால் நிறைய வசதி. மேலும், ஒருவர் வாங்கி அதை வேறொருவருக்கு பரிசாக அனுப்பி வைக்க முடியும்.

ஒரு விதத்தில் இந்த தனிநபர் பட்டுவாடா (குரியர்) மின் வணிகத்துக்கு எதிரியானது. உதாரணத்துக்கு டாட் காம் குமிழி ஊதப்பட்ட காலத்தில் எல்லா வணிகமும் மின் - வணிகத்துக்குட்படுத்தப்பட, சில படுதோல்வியடைந்தது இந்த பட்டுவாடா செலவினால். உதாரணத்துக்கு, நாய்களூக்கான உணவை விற்க ஒரு இணையத்தளம் ஆரம்பித்தார்கள். ஒரு மூட்டை நாய் உணவின் விலை 10 டாலர்கள் எனில் அதைப் பட்டுவாடா செய்ய 15 டாலர்கள் ஆகின. ஆக, எவையெல்லாம் அளவில் சிறியதாய், விலைமதிப்பில் அதிகமாய் இருந்தனவோ அவையே அதிகம் மின் வணிகத்தில் விற்கப்பட்டன. இன்றும் TV மற்றும் கணிணி மானிட்டர்கள் மின் வணிகத்தின் மூலம் வாங்குவது மிக அரிது - காரணம் அவற்றின் பேக்கிங் மற்றும் பட்டுவாடா செலவு.

இளசு
15-01-2004, 10:22 PM
மீண்டும் ம.குவின் கைவண்ணம்..
நல்ல கூடுதல் தகவல்.. நன்றி நண்பா