PDA

View Full Version : மும்மூர்த்திகளில் ஒருவன்



Vinoth Kumar
19-04-2013, 06:16 AM
சொல்லென்றும் பொருளென்றும் வைத்தான் ,
அவை யாவும் நாவிதனிலே தோற்றுவித்தான் -
செய்கையும் வினையையும் சிந்திக்க வைத்தான்
அதனாலே விதியென்று அதற்கு பெயரும் வைத்தான்

யார்க்கும் யாவையும் உண்டாம் -பாரினிலே ,
நினைக்கும் பொழுதே மோட்சமாம் நின்னிலையிலே ,
தமிழ் பொங்கும் வெண்பா போல நிறமாம் அவன் ,
நீயும் ,நீயும் ,நீயும் ,-யாவும் நீயாம் .

தொண்டை வேல் முருகன்

சுகந்தப்ரீதன்
19-04-2013, 05:35 PM
தாயும் நீயே... தந்தையும் நீயே...
நிறம்பொருள் யாவும் நிறைந்தவன் நீயே..!!

கும்பகோணத்துப்பிள்ளை
20-04-2013, 01:19 PM
தாயும் நீயே... தந்தையும் நீயே...
நிறம்பொருள் யாவும் நிறைந்தவன் நீயே..!!

வெகு காலத்திற்கு பிறகு அனிமையில் வந்த நல்ல இசையமைப்புடன் கூடிய அருமையான திரையிசைப்பாடல்.
ஒப்பிட்டமை அருமை நன்பரே!



சொல்லென்றும் பொருளென்றும் வைத்தான் ,
அவை யாவும் நாவிதனிலே தோற்றுவித்தான் -


யாரந்த நாவிதன்?




செய்கையும் வினையையும் சிந்திக்க வைத்தான்
அதனாலே விதியென்று அதற்கு பெயரும் வைத்தான்


செய்கையும் வினையையும் ... இரண்டும் ஒரே பொருள்தனே நன்ப!
செய்வினையின் விளவுமாறிப்போனால் அது விதி... இது தானே நீங்கள் சொல்ல நினைத்த தத்துவம்




யார்க்கும் யாவையும் உண்டாம் -பாரினிலே ,

பொதுவுடைமைக்கருத்து

முயச்சி திருவினையாக்கும்!

வாழ்த்துக்கள் நன்ப!