PDA

View Full Version : செல்போன்.



M.Jagadeesan
19-04-2013, 04:38 AM
யாமறிந்த விந்தையிலே செல்போன்போல் மேதினியில்
யாங்கணுமே கண்டது இல்.

கற்றவர்க்கும் மற்றவர்க்கும் செல்போன்போல் இவ்வுலகில்
உற்றதுணை உண்டோ உரை.

வாகனம் ஓட்டுகையில் செல்போன் எடுக்காதே
காலன் அழைப்பே அது.

அறிமுகம் இல்லார்கண் செல்போன் கொடுத்தல்
பறிபோகும் வாழ்வென்று அஞ்சு.

பேசலின் நன்றாம் குறுஞ்செய்தி செய்வித்தல்
காசுக்கு சேமிப்பு காண்.

செல்போனில் பெண்கள் மணிக்கணக்கில் பேசுகிறார்
எல்லாமே காசுக்குக் கேடு.

நல்வழியில் செல்போன் பயன்படுத்து இல்லையெனில்
தொல்லைகள் தேடி வரும்.


விலையதிகம் கொண்ட அலைபேசி வேண்டாம்
தொலைந்தாலோ நொந்திடுமே நெஞ்சு.

அதிக ஒலிவைத்து செல்போனில் பேசாதே
காதுக்குக் கேடாம் அது.

நித்தமும் செல்போனைப் பேணிடுக என்றுமது
முத்தமிடும் காதலிக்கு நேர்.

ரமணி
19-04-2013, 05:47 AM
செல்லுக்குப் பத்துக் குறட்பா அளவினில்
நல்வரவு கூறியது நன்று.

மேலும் சில:

இடக்காது வைத்துச் செவிமடுக்க செல்போன்
வலக்காது மூளைக்குக் கேடு.

ஏழெட்டு செல்போன்கள் ஓர்வட்டம் ஆகிவிடின்
சோளம் பொரித்து விடும்.

செல்போன் அபாயங்கள் கூகிளில் தேடினால்
சொல்லுமே சுட்டி பல.

*****