PDA

View Full Version : தமிழ்த்தாத்தா.



M.Jagadeesan
19-04-2013, 03:40 AM
http://1.bp.blogspot.com/-F39IWKjotZw/URNWqvPuwVI/AAAAAAAAAZY/5w31_42c9DE/s1600/u-ve-sa.jpg

ஓடினாய் ஓடினாய் ஓலைச் சுவடிகளைத்
தேடியே நித்தமும் கால்சலித்தாய் -வாடும்
பயிருக்குப் பெய்த மழைபோல் தமிழின்
உயிர்செழிக்க வந்தவனே வாழ்க !

சுகந்தப்ரீதன்
19-04-2013, 05:46 PM
மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏட்டுசுவடுகளையும் கையேடுகளையும் கண்டெடுத்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் வளமையும் தரணியிலே நிலைநிறுத்த தனிமனிதனாய் உழைத்த தவப்புதல்வர் தமிழ்தாத்தாவின் புகழ் தமிழோடு என்றென்றும் சீருடன் தழைத்திருக்கும்..!!

தமிழ்தாத்தாவிற்கு வாழ்த்துப்பா இயற்றிய ஐயா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்..!!:icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
20-04-2013, 12:50 PM
உழைப்போடு கூடிய நடுநிலைமையை கையாண்டவர்!...கிடைத்த தகவல்களில் எது உண்மையானது... எது ஏற்புடையது என்பதை அலசிஆராய்ந்து அதை ஆவனமாக்கியது பெரும் சாதனை. இதனை 'படக்காட்சி' என்ற கட்டுரையில் விளக்கியிருக்கும் பாங்கும் நடையும் போற்றத்தக்கது.
உழைப்பு, உண்மை, நடுநிலைமை இதுவே தமிழ்தாத்தாவின் தாரக மந்திரம்.
தமிழர்கள் அனைவரும் இதயத்தால் வழிபட்டு வாழ்த்தவேண்டிய தமிழ் பெருமகனாரில் தலையானவர்!
அவருக்கு வென்பா உரைத்து கடமை செய்த ஜயா அவர்களுக்கு வாழ்த்துகள்!

ஜான்
28-04-2013, 03:31 AM
அருமையான நினைவுகூறல் ஐயா

இருளில் கிடந்த நம் இலக்கியத்துக்கு வெளிச்சம் கொணர்ந்தவர் தமிழ்த்தாத்தா

நாஞ்சில் த.க.ஜெய்
28-04-2013, 04:44 AM
கருத்தாளம் கொண்ட தமிழின் செழுமையினை நீடித்திருக்க செய்த தமிழ் தாத்தாவின் தொண்டு என்றும் நினைவிலிருத்தகூடியது ..

A Thainis
28-04-2013, 07:43 AM
தமிழ்த்தாத்தாவின் தமிழ் இலக்கிய நூற்கள் தேடல் அதை வழங்கல் ஒரு மாபெரும் வரலாறு, தமிழ் நூற்கள் இறவாமல் இருக்க வேண்டும் அதற்க்கு தமிழ் சமூகம் உ.வே. சாமிநாதர் அய்யாவை பின்பற்றவேண்டும்.

M.Jagadeesan
28-04-2013, 08:37 AM
சுகந்தப்ரீதன், பிள்ளை, ஜான், நாஞ்சில் ஜெய், ஆ. தைனிஸ் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி.

செல்வா
28-04-2013, 02:37 PM
தமிழினத் தலைவர்கள் எனச்சொல்லிக்கொள்ளும் பலரும் தமிழில் தன் புகழை நிலை நிறுத்துவதில் மும்முரமாயிருக்க.
சத்தமேயில்லாமல் (இங்கே சத்தம் என்பதை சம்பளம் என்றும் பொருள் கொள்ளலாம்) சாதித்தவர் தமிழ் தாத்தா.

அவரது சுயசரிதம் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒன்று. மரபுக்கவிதையில் வல்லவரான அவரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்த மாணாக்கர் பலர் பின்னாளில் தேர்ந்த தமிழறிஞர்களாயிருக்கின்றனர்.

தமிழிருக்கும் வரை நினைவு கூறப்பட வேண்டியவர் தமிழ்தாத்தா.

அவரைப்பற்றிய அழகிய கவிதையை கொடுத்த ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள்.

M.Jagadeesan
28-04-2013, 04:09 PM
செல்வாவின் பாராட்டுக்கு நன்றி.

கீதம்
28-04-2013, 10:50 PM
இளைய தலைமுறையினர் அறிந்திராத, பழைய தலைமுறையினரில் பலரும் மறந்துவிட்ட தமிழ்த்தாத்தாவை இங்கே இனிய வெண்பாவால் வாழ்த்திப் பெருமைப்படுத்திய தங்களுக்கு நன்றியும் பாராட்டும் ஐயா.

Nivas.T
29-04-2013, 03:49 AM
(ராசராசனை போல்) கிட்டத்தட்ட அழிந்திருந்த தமிழை புத்துயிர் ஊட்டி புதிதாய் பதிப்பெடுத்து பலரும் தமிழின் பெருமையை அறிய படாத பாடுபட்ட உ.வே. சுவாமிநாத ஐயர் என்றும் தமிழனத்தால் போற்றத்தக்கவர். சிறுவயதில் இவருடைய பணியை தொடர் நாடகமாக கண்டதாக நினைவு.... ஆண்டு சரியாக நினைவில் இல்லை.

இவரைப்பற்றி நினைவுகூர்ந்த ஜெகதீசன் ஐயாவிற்கு நன்றிகள் பல