PDA

View Full Version : முக்கால்

Vinoth Kumar
17-04-2013, 06:33 AM
என் சில சிறு கதைகளை இங்கே தருகிறேன் .கற்பனையில் இனி தவழுங்கள்

முக்கால்

அன்று அமைதியை அடக்கி கொண்டிருந்தது அந்நகரத்திற்கும் இக்கிராமத்திற்கும் இடைப்பட்ட ஓர் ஊர்.ஒலி பெருக்கியில் கம்மிய குரலில் "இதற்கு முடிவு தெரியும் வரை ,யாரும் இங்கிருந்து ......-இல்லை வெளியிலிருந்து ...-"ம்உம்ம்ம்,,,ம்உம்ம்ம் ....இருமல் அவர் பேச்சை நிறுத்தியது.சப்தம் காற்றினில் கறைந்தவுடன் தத்தம் வீடுகளில் நிறுத்தி வைக்கபட்டிறிந்த தொலைக்காட்சி ஒலி பெருகியது.கால பைரவர் விளையாட்டு போலும்,முதியவர்கள் புராணங்களை தேட , கிரகஸ்தர்கள் சமையல் அறையில் முடங்கி கிடக்க,குழந்தைகள் இம்மாதிரியான் கல்வியை கொண்ட நாட்களுக்கு விடுமுறை கிடைத்த ஆனந்தத்தில் திளைத்திருந்தனர்.

யாவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியிருக்க ,இவை எல்லாவற்றிக்கும் காரணமான அந்த மூன்று பேருக்கு மட்டும் ஏனோ அது கிட்டவில்லை.
பல தொழில் புரியும் பைல்வான் ,கலியுக 64 கலைகளிலும் ஓரளவுக்கு கைதேர்ந்தவர்.கேட்பார்யற்று இருந்த நிலத்தை அரசியல் கேடியான நோஞ்சானுக்கு அளந்துவிட்டது முதல் விதி நெருப்பில் இருந்து கிளம்பிய புகை போல் வளர்ந்து கொண்டே போனது.இம்மூவர்க்கும் விதியின் விளையாட்டு ஆரம்பமானது ஓர் வீட்டு விலங்கு மூலம்.நோஞ்சானின் செல்ல பிராணிக்கு சற்றே நோய்கள் மீது அதித பற்று.அதனால் வந்தது சரீர முழுக்க தோல் தொற்று.காண்பவரை தலை குனியவைத்து கதற ஓட விடும் தன்மை அதற்கு,காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு அன்றோ.

எத்தனை ஆண்டுகள் தவமிருத்தாலும் அது போன்ற ஒரு வெள்ளிகிழமை கிடைக்க பெறாது.அந்த பொன்னான காலையிலே அந்த செல்ல பிராணி பைல்வானின் இரண்டு சக்கர வண்டியின் மீது தன் நான்கு கால்களில் மூன்று கால்களை மண்ணில் பதித்து ஒரு கால் தூக்கி ஒரு வேலையை செய்வதற்கு முயற்சி செய்தபொழுது அதற்கு தடைசெய்வது போல் தன் மகனின் பள்ளிபையை தூக்கி அதன் மீது எறிந்தான்.பையின் பளு தாள முடியாமல் அதன் அடியில் சிக்கிய அந்த ஒரு கால் ஒடிந்தது.

மேற் சொன்ன நெருப்பின் புகை மேகத்தில் கலந்து மற்ற மேகங்களை எல்லாம் ஒன்று திரட்டி அங்கே மழையாக பொழிந்தது.உன் குடிம்பி என் கையில ,என் குடும்பி உங்க கையில --என்றதோர் குஸ்தி பழமொழிக்கு அன்றைக்கு தான் அந்த ஊர் மக்கள் இவ்விருவர் மூலம் அறிந்து கொண்டனர்.அடுத்த கட்டமாக இவர் மீது அவர் காவல் நிலையத்திலும் ,பிராணிகள் காக்கும் படைகளிடமும் புகார்களை முன்னிலைபடுத்தினார்,இவர் கற்ற அரசியல் பாடங்களில் இதுவும் ஒன்று.

புகழ்பெற்ற மகான் ஒருவர் சொன்னது போல் ''பக்கத்துக்கு வீட்டு ஆட்களும் ,எதிர் வீட்டு மனிதர்களும் ,நமக்கு விரோதிகளாக இருந்தால் ,அவர்கள் தான் நமக்கு ஜென்ம சனி."அவர் தொடுத்த புகாரில் சாட்சி கையெப்பமிட்டது எதிர்வீட்டு கெட்டிமேளம்.கல்யாணத்தில் மணமகள் கழுத்தில் தாலி ஏறும் பொழுதுதானே மங்கள இசை வாசிக்க படும்,அது போல தான் இதுவும்.

சனிகிழமை காலை என்னை குளியலிலே இவ்விருவரும் ஒரு வித சந்தோஷ உணர்ச்சியில் ஆடிகொண்டிருக்க ,பைல்வானுக்கு அடி வயிறு கலங்கி கொண்டிருந்தது .அதனால் தான் என்னமோ ஒரே அறைக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தான்.இருண்ட இரவு மண்ணை தொட்ட பொழுது 'நிலத்தில் உள்ள நெற்கதிர் பிறர் வாழ்வதிர்க்காக அறுபடுவது போல தன் முடிவை யாரும் அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றிகொண்டான்.

மாயை போன்ற இருட்டையும் , பனிகளையும் கலைத்து அருள் தரும் ஞாயிறு பிரகாசத்துடன் பிறந்தது.பைல்வான் நோஞ்சானை தன் வீட்டிற்க்கு அழைத்து வர தன் மகன் சந்திரனை தூது அனுப்பினான்.குழல் இனிது யாழ் இனிது ,கள்ளமில்லா குழந்தைகள் யாது பேசினாலும் அழகே.மனமிறங்கிபக்கத்துவீட்டு படியேறினான்.யாருக்கும் தலை வணங்கி பழக்கபடாத அரசியல் வாதி அன்றோ இவன்.அளவில் சிறியதன வாசற்படியில் தன் வழுக்கை தலையையும் ,,,கழுவிய தரை ஈரம் விட்டு போகாத நிலையில் அதன் மீது காலை அழுத்தி வைத்தனாலும் உடல் பாகங்கள் எங்கெங்கெல்லாம் அடிபட்டு எப்படி தொட்டுகொண்டான் தெரியுமா ....டட்ட்த்ப் .....ட்ம்ட்ம் ... ட்ர்ம்...ஒரு வினாடி உலகம் அவனை விட்டு எங்கோ போனது.யார்யாரோ அக்கணத்திலேயே அவனுக்கு காட்சி தந்தார்கள்.
பதறிய பைல்வான் மெல்ல நடந்து வந்து ,நோஞ்சானை அப்படியே அங்கேயே படுக்க வைத்து தன் திறமைகளில் ஒன்றான கலையை பயன்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவை மருந்தாக அளித்தான்.
மார்கழி முடிந்து தை திங்கள் இனிதே தொடங்கியது, பார்யெங்கும் கெட்டி மேளத்தின் ஒளியும் அதிகமானது.
ஒலி பெருக்கி ஒலித்தது ,சற்றே சப்தத்துடன்....
‘’’முற்றும்...’’’

தொண்டை வேல் முருகன்

இவன்
தொண்டை வேல் முருகன்

கீதம்
18-04-2013, 12:16 AM
மன்றத்தில் கதைகளைப் பதிந்து கருத்துக்களை எதிர்பார்ப்பதன் மூலம் கதை பற்றிய விமர்சனத்துக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்றே நம்புகிறேன். அவற்றை எடுத்துரைப்பதன் மூலம் வாசகர் மனத்தில் தோன்றும் உணர்வுகளையும் கேள்விகளையும் குழப்பங்களையும் கதையின் ஆசிரியர் அறிந்துகொள்ள இயலும் என்பதால் இக்கதையில் எனக்குத் தோன்றும் சில தெளிவின்மைகளைப் பட்டியலிடுகிறேன்.

அன்று அமைதியை அடக்கி கொண்டிருந்தது அந்நகரத்திற்கும் இக்கிராமத்திற்கும் இடைப்பட்ட ஓர் ஊர்.ஒலி பெருக்கியில் கம்மிய குரலில் "இதற்கு முடிவு தெரியும் வரை ,யாரும் இங்கிருந்து ......-இல்லை வெளியிலிருந்து ...-"ம்உம்ம்ம்,,,ம்உம்ம்ம் ....இருமல் அவர் பேச்சை நிறுத்தியது.சப்தம் காற்றினில் கறைந்தவுடன் தத்தம் வீடுகளில் நிறுத்தி வைக்கபட்டிறிந்த தொலைக்காட்சி ஒலி பெருகியது.

இந்த வரிகளுக்கான அர்த்தமும் தேவையும் புலப்படவில்லை. யார் யாரிடம் சொன்னது? ஏன் சொன்னார்கள்? எதைப்பற்றி?

யாவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கியிருக்க ,இவை எல்லாவற்றிக்கும் காரணமான அந்த மூன்று பேருக்கு மட்டும் ஏனோ அது கிட்டவில்லை. பல தொழில் புரியும் பைல்வான் ,கலியுக 64 கலைகளிலும் ஓரளவுக்கு கைதேர்ந்தவர்.கேட்பார்யற்று இருந்த நிலத்தை அரசியல் கேடியான நோஞ்சானுக்கு அளந்துவிட்டது முதல் விதி நெருப்பில் இருந்து கிளம்பிய புகை போல் வளர்ந்து கொண்டே போனது. இம்மூவர்க்கும் விதியின் விளையாட்டு ஆரம்பமானது ஓர் வீட்டு விலங்கு மூலம்.

மேலே உள்ள பத்தியில் மூன்று பேர் என்று இரண்டு இடத்தில் குறிப்பிடுகிறீர்கள். ஒருவர் பயில்வான், மற்றொருவர் நோஞ்சான். மூன்றாவது நபர் யார்?

அவர் தொடுத்த புகாரில் சாட்சி கையெப்பமிட்டது எதிர்வீட்டு கெட்டிமேளம்.கல்யாணத்தில் மணமகள் கழுத்தில் தாலி ஏறும் பொழுதுதானே மங்கள இசை வாசிக்க படும்,அது போல தான் இதுவும்.

சாட்சி கையொப்பமிட்டது எதிர்வீட்டு கெட்டிமேளம் - இதன் பொருள் விளங்கவில்லை. திருமணத்துக்கும் புகாருக்கும் என்ன தொடர்பு? கெட்டிமேளம் ஏன் கேட்டது? கதைப்படி மறுநாள்தானே தை பிறக்கிறது. மார்கழியில் எப்படி கெட்டிமேளம்?

சனிகிழமை காலை என்னை குளியலிலே இவ்விருவரும் ஒரு வித சந்தோஷ உணர்ச்சியில் ஆடிகொண்டிருக்க ,பைல்வானுக்கு அடி வயிறு கலங்கி கொண்டிருந்தது .

எண்ணெய்க்குளியலில் மகிழும் இருவர் யார்? ஒருவர் நோஞ்சான் என்றால் மற்றொருவர் யார்? பயில்வானாய் இருக்கமுடியாது என்பது அடுத்தவரி மூலம் தெளிவாகிறது.

அதனால் தான் என்னமோ ஒரே அறைக்கு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தான்.இருண்ட இரவு மண்ணை தொட்ட பொழுது 'நிலத்தில் உள்ள நெற்கதிர் பிறர் வாழ்வதிர்க்காக அறுபடுவது போல தன் முடிவை யாரும் அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றிகொண்டான்.

யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு என்ற இடத்தில் நெற்கதிர் அறுபடுவது போல என்ற உவமை பொருத்தமா?

பதறிய பைல்வான் மெல்ல நடந்து வந்து ,நோஞ்சானை அப்படியே அங்கேயே படுக்க வைத்து தன் திறமைகளில் ஒன்றான கலையை பயன்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவை மருந்தாக அளித்தான்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முடிவை மருந்தாக அளித்தான் என்ற சொற்றொடரின் பொருளும் விளங்கவில்லை.

1. நோஞ்சான் இறந்துவிட்டார் என்று பொருள் கொண்டால் பயில்வானுக்கு தண்டனை கூடுமே..

2. நோஞ்சானுக்கு பயில்வான் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார் என்று பொருள் கொண்டால் நோஞ்சானே பயில்வானை மன்னித்துவிட்டார் என்று தோன்றுகிறது.

இவற்றில் எது சரி?

முடிவை வாசகர் விருப்பத்துக்கு விடுவது ஒரு யுத்தி என்றாலும் இப்படி தெளிவின்மை இருப்பது சராசரி வாசகனுக்கு பிடித்தமாயிராதே... இறுதியில் மங்கள இசையுடன் கதையை முடித்திருப்பதைப் பார்த்தால் இரண்டாவது முடிவுதான் சரியா?

ஒரு வாசகனின் பார்வையிலிருந்து என் ஐயங்களை எழுப்பிவிட்டேன். ஒரு கதாசிரியரின் தரப்பிலிருந்து தெளிவாக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

சிவா.ஜி
18-04-2013, 06:10 AM
தங்கை கீதத்தின் அலசல்...தங்களைத் தெளிவாக்கும் என நினைக்கிறேன் வினோத். ஒரே வார்த்தையில் கதையைப் பற்றி சொல்ல வேண்டுமானால்....”குழப்புகிறது”

நிறைய சொல்ல நினைக்கிறீர்கள்....கோர்வையாய் சொல்ல இன்னும் பயிற்சி தேவை. வாழ்த்துக்கள்.

Vinoth Kumar
18-04-2013, 09:19 AM
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி .

என்னால் முடிந்த அளவிற்கு இங்கே பதில் அளித்துளேன் .
(கற்பனையை அதிகம் கதைகளில் சேர்ப்பது இவன் ...)

மன்றத்தில் கதைகளைப் பதிந்து கருத்துக்களை எதிர்பார்ப்பதன் மூலம் கதை பற்றிய விமர்சனத்துக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்றே நம்புகிறேன். அவற்றை எடுத்துரைப்பதன் மூலம் வாசகர் மனத்தில் தோன்றும் உணர்வுகளையும் கேள்விகளையும் குழப்பங்களையும் கதையின் ஆசிரியர் அறிந்துகொள்ள இயலும் என்பதால் இக்கதையில் எனக்குத் தோன்றும் சில தெளிவின்மைகளைப் பட்டியலிடுகிறேன்.

இந்த வரிகளுக்கான அர்த்தமும் தேவையும் புலப்படவில்லை. யார் யாரிடம் சொன்னது? ஏன் சொன்னார்கள்? எதைப்பற்றி?

ஒரு உயிரை துன்புறுத்தியதற்காக அந்த ஊரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டிருந்தது .
ஒலி பெருக்கியில் காவல்துறையை சார்ந்ததொருவர் ஊர் மக்களிடம் கூறுகிறார் .

நிற்க :ஓர் உயிரை துன்புறுத்தியதற்காக இப்பேற்பட்ட சட்டம் எங்கேனும் உண்டா ?

(இந்த கதை வேறு ஒரு நிகழ்விற்காக 2008-2009 காலகட்டத்தில் எழுதியது .இலங்கையில் போரில் இறந்தவர்களின் ஒவ்வொரு உயிர்ருக்கும் இலங்கை பதில் சொல்லாவிடில் இங்கிருந்து எந்த வித அசைவும் அங்கே போக கூடாது அதே போல் அங்கிருந்து இங்கு யாரும் வரவும் கூடாது .காலம் கடந்து விட்டது ..ஆகையால் திரித்து தந்துள்ளேன் )

மேலே உள்ள பத்தியில் மூன்று பேர் என்று இரண்டு இடத்தில் குறிப்பிடுகிறீர்கள். ஒருவர் பயில்வான், மற்றொருவர் நோஞ்சான். மூன்றாவது நபர் யார்?

கெட்டிமேளம் .

சாட்சி கையொப்பமிட்டது எதிர்வீட்டு கெட்டிமேளம் - இதன் பொருள் விளங்கவில்லை. திருமணத்துக்கும் புகாருக்கும் என்ன தொடர்பு? கெட்டிமேளம் ஏன் கேட்டது? கதைப்படி மறுநாள்தானே தை பிறக்கிறது. மார்கழியில் எப்படி கெட்டிமேளம்?

பொதுவாக மாங்கல்யம் அணிவிக்கும் பொழுது இசை ஓலிக்கிறது .அந்த நிகழ்விற்கு அது பொருத்தம் . ஒருவன் ஒருவளிடம் மாட்டிகொண்டான் என்பதையும் போலவும் கருதலாம் .
இங்கே பைல்வான் கெட்டிமேளத்தால் அகபட்டுகொண்டான் போல கருதவும்.பொதுவாக மாங்கல்யம் அணிவிக்கும் பொழுது இசை ஓலிக்கிறது .அந்த நிகழ்விற்கு அது பொருத்தம் . ஒருவன் ஒருவளிடம் மாட்டிகொண்டான் என்பதையும் போலவும் கருதலாம் .
இங்கே பைல்வான் கெட்டிமேளத்தால் அகபட்டுகொண்டான் போல கருதவும்.

எண்ணெய்க்குளியலில் மகிழும் இருவர் யார்? ஒருவர் நோஞ்சான் என்றால் மற்றொருவர் யார்? பயில்வானாய் இருக்கமுடியாது என்பது அடுத்தவரி மூலம் தெளிவாகிறது.

2.கெட்டிமேளம் .

யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு என்ற இடத்தில் நெற்கதிர் அறுபடுவது போல என்ற உவமை பொருத்தமா?

நெற்கதிர் அருபட்டேதீரும் .அந்த செயலை மாற்றமுடியாது .பயிரிட்டதிர்க்கு அது தரும் பயன் அது அறுபடும் பொழுது .வினை விதைத்தவன் வினை அறுப்பான்.பைல்வான் கலைகளை கற்றவன் .அடுத்து எப்படி நடந்துகொண்டால் எப்படி விளைவு வருமென அறிவான் ..ஆகையால் தீர்கமான முடிவை அவன் எடுத்தே தீர வேண்டும் ...தன் செயலால் வந்த விளைவை அவன் எப்பேபட்டவது பயன் தரும் வகையில் முடிக்க வேண்டும் .

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முடிவை மருந்தாக அளித்தான் என்ற சொற்றொடரின் பொருளும் விளங்கவில்லை.

1. நோஞ்சான் இறந்துவிட்டார் என்று பொருள் கொண்டால் பயில்வானுக்கு தண்டனை கூடுமே..

2. நோஞ்சானுக்கு பயில்வான் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார் என்று பொருள் கொண்டால் நோஞ்சானே பயில்வானை மன்னித்துவிட்டார் என்று தோன்றுகிறது.

இவற்றில் எது சரி?

பைல்வான் : சமாதான பேச்சாற்றல் உடன் முதலுதவியை செய்து சிநேகிதம் செய்துகொண்டான்

முடிவை வாசகர் விருப்பத்துக்கு விடுவது ஒரு யுத்தி என்றாலும் இப்படி தெளிவின்மை இருப்பது சராசரி வாசகனுக்கு பிடித்தமாயிராதே... இறுதியில் மங்கள இசையுடன் கதையை முடித்திருப்பதைப் பார்த்தால் இரண்டாவது முடிவுதான் சரியா?

ஒரு வாசகனின் பார்வையிலிருந்து என் ஐயங்களை எழுப்பிவிட்டேன். ஒரு கதாசிரியரின் தரப்பிலிருந்து தெளிவாக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

மிக்க நன்றி திருமதி .கீதா அவர்களே

கீதம்
18-04-2013, 09:42 AM
கதை பற்றிய விமர்சனத்தை உடன்பாடாய் எடுத்துக்கொண்டு வாசகருக்கு உண்டாகும் குழப்பங்களுக்கான விடை பகன்றமைக்கு மிகவும் நன்றி. தாங்கள் சொன்னபிறகே இக்கதையில் கெட்டிமேளமும் ஒரு அங்கம் என்று புரிகிறது. இதை ஓரிடத்திலாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டிருந்தால் குழப்பம் எழுந்திருக்காது. சிவாஜி அண்ணா சொல்வது போல் நிறைய பயிற்சியிருந்தால் மட்டுமே ஒரு கதாசிரியரால் வாசகரின் நிலையிலிருந்தும் கதையைப் புரிந்துகொள்ள இயலும். நிறைய எழுதுங்கள். விமர்சனங்களைக் குறைகளாகக் கருதாமல், உங்களை முன்னேற்றும் முயற்சிகளாகவே கொண்டீர்களானால் நம் மன்றம் உங்கள் எழுத்துக்களை மேன்மேலும் ஏற்றும்.

(பி.கு. எனக்கு பார்வைக் குறைபாடு எதுவும் இல்லை. :) )